கிருபகை்குப் பதிலாக நியாயப்பிரமாணத்தை சபை தெரிந்து கொள்ளுதல் Middletown, Ohio, USA 61-0316 1அன்றியும் சிலசமயங்களில் ஜனங்கள் அபிஷேகம் இல்லாமல் அதைப் பெற்றுக்கொள்ளத் தவறி விடுகின்றனர். இன்றிரவு இங்கேயிருப்பதற்கும், விசுவாசிகளாகிய உங்கள் எல்லோருடனும், இங்கேயிருக்கும் விலையேறப்பெற்ற சகோதரனாகிய நம்முடைய அன்பு சகோதரனும் மேய்ப்பருமாகிய சகோதரன் சுலிவன் அவர்களோடும் ஐக்கியம் கொள்ளுவதற்கும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாம் இன்றைக்கு ஒருமித்து ஜெபித்து, பேசிக் கொண்டிருக்கிறோம். நாள் முழுவதும் பல்வேறுபட்ட ஊழியக்காரர்களும், அநேகரும் பல்வேறுபட்ட இடங்களிலிருந்து... கொண்டிருக்க விரும்பி அழைத்துக் கொண்டிருக்கின்றனர். வேறொரு கூட்டத்திற்கு, அல்லது ஏதோவொரு இடத்திற்கு இங்கிருந்து கடந்து செல்கிறோம். ஆனால் நான் கிறிஸ்துமஸ் முதற்கொண்டு பிரயாணத்தை நிறுத்தவேயில்லை, மேலும் நான் மிகவும் களைப்படைந்துள்ளேன். நான் ஏறக்குறைய ஆறு அல்லது ஏழு நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டேன் என்பது யாவருக்கும் தெரியும், எனவே நான் அதைக் கொண்டிருக்க வேண்டியதாய் இருந்தது, நான் அப்படியே ஏறக்குறைய போய் விட்டேன். மேலும் உங்களுக்குத் தெரியும், சில சமயங்களில் ஒரே இரவில் முப்பது தரிசங்கள் போன்று அவ்வளவு தரிசனங்கள் காணும் ஒரு இடத்திலுள்ள கூட்டத்திலிருந்து நாங்கள் அப்படியே கடந்து போகிறோம். அது எதைக் குறிப்பிடுகிறது என்று யாரும் ஒருபோதும் அறிய மாட்டார்கள். அது... அது எனக்கும் தேவனுக்குமிடையில் இருக்கப்போகிற மிக முக்கியமான ஒரு இரகசியமாயிருக்கும். அவர்கள் அப்படியே... நீங்கள்... அதை விவரிக்க எந்த வழியும் இல்லை. நீங்கள் வெறுமனே - அங்கே வெறுமனே - உங்களால் அதைச் செய்ய முடியாது. யாருக்குமே தெரியாது... சற்று இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்: நம்முடைய கர்த்தராகிய இயேசுவிடமிருந்து ஒரு தரிசனம் வந்தது, அவர், 'நான் பலவீனமடைந்ததாக உணருகிறேன்' என்று கூறினார். ஒரு ஸ்திரீ அவரைத் தொட்டாள். இப்பொழுது, அது... அப்படியானால் கிருபையால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவியைக் குறித்து என்ன. அதைச் செய்கிற ஒரே காரியம் என்னவெனில்: 'நான் பிதாவினிடத்திற்கு போகிறபடியால் நீங்கள் இதைக் காட்டிலும் அதிகமானவைகளைச் செய்வீர்கள்' என்பதாகும், அது ஒரு வாக்குத்தத்தமாகும். 2அங்கே என் மருமகள் இருக்கிறாள். அவள் கடந்த 8 வார நீண்ட பிரயாணத்தில், இந்த கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறாள். அவள் வீட்டிற்கு வந்த போது, அவள் 3 அல்லது 4 நாட்கள் ஓய்வு எடுப்பதற்காக படுக்கைக்குச் சென்றாள்: அப்போது அவள் கிட்டத்தட்ட மரித்து விட்ட நிலையை அடைந்து விட்டதாகக் கூறினாள். நல்லது, பையன்களும், அவர்கள் எல்லாருமே அப்படியே தளர்வடைந்து விட்டனர். நான் வீட்டிற்கு வந்து, என்னுடைய சூட்கேஸிலுள்ள பாதி பொருட்களைக் கூட இன்னும் வெளியே எடுத்து வைக்காமல், இராப்பகல் எல்லாம் நான் இதோ போய்க் கொண்டே, போய்க் கொண்டே, போய்க் கொண்டே, போய்க் கொண்டே, போய்க் கொண்டே இருந்தேன். இரவும் பகலும் எல்லா நேரத்திலும் போய்க் கொண்டே, போய்க் கொண்டே, போய்க் கொண்டே இருக்கிறேன். தொடர்ந்து, தெடர்ந்து, தொடர்ந்து, தொடர்ந்து அவ்விதமாக செய்து கொண்டேயிருக்கிறேன். நான், 'நல்லது, நீங்கள் சுற்றிலும் சென்று, கூட்டங்களில் நின்று, கிழிறங்கி வந்து, கூட்டங்களில் அமர்ந்து, அதை அனுபவித்து, வீட்டிற்குச் சென்று, படுக்கைக்குப் போய் பாதி உறங்கி விட்டு, அடுத்த நாள் எழுந்து, நீங்கள் விரும்பினால் அடுத்த கூட்டத்திற்குப் போகிறீர்கள். அப்போது நீங்கள் களைப்படைந்து விடுகிறீர்கள். இப்போது அது கஷ்டமாயுள்ளது என்று நினைக்கிறீர்கள்' என்று கூறினேன். அந்தக் கூட்டங்களில் ஒன்றினுடைய பொறுப்பை சற்று உங்கள் தோளின் மேல் சுமந்து பாருங்கள், நீங்கள் அதற்காக பொறுப்புடையவர்கள் என்பதையும், எல்லாவற்றிற்கும் பதில்கூற வேண்டியவர்கள் என்பதையும் அப்போது அறிவீர்கள். (புரிகிறதா?) பிறகு பிரசங்கம் பண்ணுகிறீர்கள், செல்வாக்குள்ள இருபது நிமிட பேச்சை எட்டு மணி நேர கடின உழைப்போடு ஒப்பிடுகிறீர்கள், ஆகையால் விஞ்ஞானம் சொல்லுகிறது, உங்களுடைய சரீரத்திற்கு. நான் சில சமயங்களில் ஒன்றரை மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் பிரசங்கம் பண்ணுகிறேன். அதைத்தவிர மூன்று நாட்கள் பிரசங்கம் பண்ணுவதைக் காட்டிலும், ஒரே தரிசனம் உங்களை கிழித்துப் போடும். புரிகிறதா? அப்படியானால், ஒரு இரவில் அவர்களில் 30 பேர்... பாருங்கள்? பாருங்கள், அங்கே வழியேயில்லை... அது வெறுமனே - அது ஒரு அற்புதமாயுள்ளது, அதுவே ஒரு பிரமிக்கத்தக்க அற்புதமாய் உள்ளது, தேவன் என்னை ஜீவிக்கச் செய்கிறார். உங்கள் - உங்கள் நிமித்தமாக அவர் அதைச் செய்கிறார். 3ரெய்மண்ட ரிச்சி அவர்களைக் குறித்து எத்தனை பேர் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்கள், சகோதரன் ரெய்மண்ட ரிச்சி அவர்களைக் குறித்து? கேள்விப்பட்டிருக்கவில்லை. அன்றொரு இரவில், லாஸ் ஏஞ்சலிஸில், அவர் என் பக்கத்தில் முழங்கால்படியிட்டு ஜெபம் பண்ணினார். ரிச்சி அவர்களை உங்களுக்குத் தெரியுமா, சகோதரன் ரிச்சி... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) உங்களுக்கு அது தெரியுமா? (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலையில் இருந்தார். மற்றவரைப் போன்று அவராலும் அவ்வளவு அதிகமாக செய்ய முடியும் என்று நினைத்தார், எனவே அவர் மிஷன் ஊழியக்களங்களுக்குச் சென்று, அவைகளை எடுத்துச் செய்து விட்டு, திரும்பி வந்தார், அவர் எழுப்புதலைக் கொண்டிருந்தார், அதோடு அவர் முடிந்து போய் விட்டார். அது அவருடைய மூளையைத் தாக்கி, உடற்பகுதியை செயலிழக்க செய்தது, நரம்புகளையும் பாதித்தது, மேலும், ஓ, ஒரு பயங்கரமான தோற்றமாக ஆகிவிட்டார்... அவர் அவ்வளவு அருமையான ஒரு சகோதரன். அவர் உள்ளே வந்தார்; அவர் என்னைக் கண்டவுடனே என்னிடம் பேச முயற்சித்தார். மேலும் அவர் முழங்கால்படியிட்டார், அவர் என்ன சொன்னார் என்பதை நான் புரிந்து கொள்ள முயற்சித்தேன். அவர், 'சகோதரன் பிரன்ஹாமே, நீர் தொடர்ந்து அவ்விதமாக போகாதீர். தொடர்ந்து அதை செய்யாதீர்; (நீர் அவ்வாறு செய்தால்) இந்நாட்களில் ஒன்றில் என்னைப் போல ஆகிவிடுவீர். அதைச் செய்யாதிரும். சற்றே...' என்று கூறினார். ஆனால் நம்முடைய வைராக்கியம் ஒருக்கால் நம்முடைய ஞானத்தை சுட்டெரித்து விடுகிறது என்று ஊகிக்கிறேன், எனவே நாம் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, எப்படியும் தொடர்ந்து அதைச் செய்து கொண்டிருப்போம், அது - அது சரியாகி விடும். 4எனவே இன்றிரவு இங்கேயிருக்கும் என்னுடைய சில நண்பர்களைக் காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நம்முடைய... என்னுடைய தனிப்பட்ட செயலாளரான சகோதரன் மெக்கையரும் (Brother Maguire) அவருடைய மனைவியும்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) கனடா, சஸ்காச்சுவான். அவர்களை உள்ளே கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கென்டக்கியிலிருந்து வந்திருக்கிற என்னுடைய இரண்டு சகோதரர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களுடைய பெயர்களை நினைவுபடுத்த முடியவில்லை. அவர்கள்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) நீங்கள் உண்மையில் ஆர்கன்ஸôஸிலிருந்து இந்த கூட்டங்களுக்கு வருகிறீர்கள், இல்லையா, சகோதரர்களே? என்னுடைய சகோதரன் டாச் அல்லது டாச் அவர்களை நான் காண்கிறேன். ஓஹியோவிலிருந்து வந்திருக்கும் டாச் அவர்கள் இங்கே உடகார்ந்திருக்கிறார்கள், அவருடைய அழகான மனைவி அவருக்கு பின்னால் உட்கார்ந்திருக்கிறார்கள். இன்றிரவு உள்ளே இருக்கும் உங்கள் அனைவரையும் காண்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் மேலும் பாதை நெடுகிலும் உள்ள வெவ்வேறான நபர்கள் (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)...?... சகோதரன் சார்லியையும், ராட்னியையும், ரோஜரையும், சகோதரன் சாத்மன் அவர்ளையும் அடையாளம் கண்டு கொள்கிறேன். மேலும் நான் புரிந்துகொள்கி... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)... இன்றிரவு சிலர், இன்று பிற்பகலில் பில்லி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான். வெப்பம் மிகுந்த ஜார்ஜியாவிலிருந்து அவர் இங்கே வந்திருக்கிறதற்காக மிகவும் மகிழ்ச்சி. அவர்களில் சிலர், 'நீங்கள் எவ்வாறு வந்தீர்கள்?' என்று கேட்டனர். 'உறையச்செய்யும் குளிரோடு' என்றேன். ஆனால் நாங்கள்... சகோதரன் வெல்ச், நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள்? நான் உங்களை அடையாளம் காண முடியவில்லையே, சற்றே கொஞ்சம்... ஏன், இங்கே என்னுடைய... கீழாக உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள், முகம். மேலும் சகோதரி ஈவான்ஸ் அவர்களும். ஆம், இதோ பாருங்கள், அங்கே ஜார்ஜியாவிலிருந்து வந்திருக்கிற ஒரு குழுவினர் இருக்கிறார்கள்... அது அருமையானது, உங்கள் எல்லாரையும் உள்ளே கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. 55.இப்பொழுது, எங்களை இங்கே அழைத்ததற்காக கர்த்தர் சகோதரன் சுலிவன் அவர்களை எக்காலத்திலும் ஆசீர்வதிப்பாராக. அவர் தேவனின் நிமித்தமாக தாமாகவே கூட்டத்திற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார்... நான் அறிந்துள்ளபடி, சகோதரன் சுலிவன் ஜனங்களாகிய உங்களை விட்டு அதிசீக்கிரமாக போகப்போகிறார், தூர இடத்துக்குப் போகப் போகிறார் என்று நினைக்கிறேன். நீங்கள் மகத்தான ஒரு மனிதரை இழக்கப்போகிறீர்கள். இதைப்போன்று இவ்வளவு கூட்டத்திற்கான பொறுப்பை எடுத்துக் கொள்ளும்படி பொதுஜனங்களுக்கு முன்பாக தம்மையே ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் (பாருங்கள்?), அவர் உங்களை நேசிக்கிறார் என்பதை அது காட்டுகிறது; அவர் ஜனங்களுக்காக ஏதோவொன்றைச் செய்ய முயற்சிக்கிறார் அல்லது அவர் அதைச் செய்திருக்கவே மாட்டார். அது சரியே. அவர் மிக உண்மையான ஒரு தேவ ஊழியக்காரன், உண்மையான ஐக்கிய சேனை... நான் என் முழு இருதயத்தோடும் சகோதரன் சுலிவனைப் பாராட்டுகிறேன். ஒரு மனிதன் என்று எண்ணப்படத்தக்கவிதமாக எப்பொழுதாவது ஒருவன் இருப்பானென்றால், அவன் தனியாக நிற்பவன் தான். அவன் தேவனுக்காக தனியாக நிற்கிறான்; அவன் தான் மனிதன். அங்கே... 'எரிகோ சாலையில் இரண்டு பேர் போவதற்கான இடம் தான் உண்டு, அதைவிட கூடுதலாகவோ குறைவாகவோ ஆட்கள் போவதற்கான பாதை அங்கே கிடையாது, அந்த இரண்டு பேர் யாரென்றால் இயேசுவும் நீங்களும் தான்,' அவ்வளவு தான். எனவே நாம் அந்தவிதமாகத்தான் இந்த இடுக்கமான பாதையில் நடந்து போயாக வேண்டும். தேவனுக்காக எப்பொழுதாவது எதையாவது செய்த ஒவ்வொரு மனிதனும் அதே பாதையில் தான் நடந்தனர். அது உண்மை. அவர்கள் எல்லா காலங்களிலும், எல்லா நேரங்களிலும் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு, கைவிடப்பட்டு, தூக்கியெறியப்பட்டவர்களாய் அதே காரியத்தை சகிக்க வேண்டியிருந்தது. எனவே நாமும் அவர்களைப்போலவே இருக்கிறோம், அதே காரியம் தான். நாம் தனிமையாக நிற்க வெண்டியுள்ளது. ஆனால் நாம் ஒருபோதும் தனியாக இல்லை, அவர் எப்போதுமே அங்கே (நம்மோடு) இருக்கிறார். 6இங்கிருக்கும் இந்த ஆயுதக்களஞ்சியத்திலுள்ள இந்த ஜனங்கள், இந்த ஆயுதக்களஞ்சியத்தை நாமும் கூட கொண்டிருக்க அனுமதித்ததற்காக நாம் பாராட்டுகிறோம். அவர்கள் என் சத்தத்தைக் கேட்கக்கூடிய ஏதோவொரு இடத்தில் இருப்பார்களானால், மனிதர்களே, உங்களுடைய இரக்கத்தை நான் நிச்சயமாகவே பாராட்டுகிறேன். கர்த்தர் எக்காலத்திலும் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது ஒரு... இப்பொழுது, இது ஐக்கிய நாடுகளின் இராணுவமாயுள்ளது, தேவன் அவர்களை அபரிமிதமாக ஆசீர்வதித்து, அவர்களுக்கு ஒத்தாசை செய்ய வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். நாம் ஒரு பாதுகாப்பு செயல்திட்டத்தில் இருக்கிறோம் என்று உங்களிடம் கூறுகிறேன்; நமக்கு அது தெரியும், மற்ற தேசங்களைக்காட்டிலும் மற்றவர்களைக்காட்டிலும் மேலானவர்களாக இருப்பதற்காக ஏவுகணைப் போட்டியில் அவர்களைத் தோற்கடிக்க முயற்சிக்கிறோம். என் சகோதரர்களே, நாம் ஓட வேண்டிய ஒரு ஓட்டப்பந்தயம் உண்டு, அது நம்முடைய முகத்தை கல்வாரியை நோக்கியவர்களாய், தொட்டில் தொடங்கி கல்லறை மட்டுமாக ஓடுவதாகும், அதுதான் ஓட்டப்பந்தயம். கல்வாரியில் தான் நம்முடைய பாதுகாப்பு உள்ளது. தேவனுக்காக பிரதிஷ்டை பண்ணப்பட்டு, ஜெபத்தில் உறுதியாக நிலைத்திருக்கிற ஐக்கிய நாடுகளின் ஒவ்வொரு இராணுவ வீரனையும் எனக்குத் தாருங்கள், அப்பொழுது எல்லா ஏவுகணைகளையும் உங்களால் அழித்துப்போட முடியும், அது போய் விடும். அது சரியே. நாம் மிகவும் பத்திரமாக காப்பாற்றப்பட்டிருப்போம், வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு தேசமும் நமக்குப் பயப்படும். சோதோமின் நாட்களில் இருந்தது போன்று, நான் இங்கே சென்ற முறை தென்தேசத்து ராஜஸ்திரீ என்பதன் பேரில் பிரசங்கித்தேன் என்று நம்புகிறேன். அந்நாட்களில் இஸ்ரவேல் தேசத்திற்கு மற்ற எந்த தேசத்தோடும் எவ்வாறாக எப்பிரச்சனையும் இல்லாதிருந்தது; அந்த மற்ற தேசங்கள் எல்லாம் இவர்களைப் பார்த்து பயந்திருந்தன. இவர்கள் கர்த்தரை நம்பியிருந்தார்கள். 7நான் பேசுவதை உங்களால் மிக நன்றாக கேட்க முடிகிறது என்று நான் நம்பவில்லை, அங்கே எதிரொலிக்கிறதா? அங்கே வெளியே நன்றாகக் கேட்க முடிகிறதா, பின்னால்? எதிரொலி போன்று சத்தம் வருகிறது என்று நினைக்கிறேன். என்னால் இதை மாற்ற முடியுமா என்று பார்க்கட்டும். இது நன்றாக உள்ளதா? பின்னால் இருக்கிற உங்களால் இதை நன்றாகக் கேட்க முடிகிறதா? யாரும் அங்குமிங்கும் போகாதீர்கள். நீங்கள் இதை இங்கே நன்றாகக் கேட்க முடிகிறதா? என் பிரசங்க பீடத்தை உடைத்து விட்டேன் என்று நம்புகிறேன். இது எப்படியிருக்கிறது? நன்றாக கேட்கிறதா? சரி, இதை அங்கேயே விட்டு விட முயற்சிப்போம். 8இப்பொழுது, நாம் வார்த்தைக்கு துரிதமாக செல்ல விரும்புகிறோம். நான் கடந்த இரவு உங்களை சகோதரன் சுலிவனின் சபையில் அதிக நேரம் பிடித்து வைத்து விட்டேன், ஆனால் நாம்... விசேஷமாக, சத்தங்களின் பேரில், விளங்காத சத்தம் என்பதின் பேரில் கர்த்தர் நமக்கு அருளினவைகளை நான் அனுபவித்தேன். இந்நாளில் அநேக விளங்காத சத்தங்கள் இருப்பதைக் குறித்து விவரித்துச் சொல்ல நாங்கள் முயற்சித்தோம். மேலும் அதற்குப் பிறகு, இந்த விளங்காத சத்தங்கள் எல்லாவற்றினூடாகவும் நாம் வந்த பிறகு, நாம் ஒரு நிச்சயமுள்ள சத்தத்தின் பேரில் அதைக் கொண்டு வந்தோம். சகோதரன் ஜீன், உங்களுக்கு நன்றி, ஒருக்கால் அது நமக்கு சிறிது உதவி - உதவி செய்யலாம். சரி. இந்த நாளின் நிச்சயமான சத்தங்களைக் குறித்துப் பேசினோம். நிச்சயமுள்ள ஒரு சத்தம் அங்கே இருந்ததை நாம் கண்டு கொண்டோம். அதுதான் சுவிசேஷ சத்தம். சுவிசேஷமானது எவ்வாறு வார்த்தையில் மாத்திரமல்ல, ஆனால் வல்லமையிலும் பரிசுத்த ஆவியின் வெளிப்பாட்டிலும் வந்தது என்பதைக் கண்டறிந்தோம். பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல பெந்தெகோஸ்தே நாளில் வந்த அந்த சத்தமானது ஜீவன் வந்திருந்தது என்பதற்கு நிச்சயமானதாக இருந்தது, அது ஆவிக்குரிய ஜீவனாகும். 9நான் பின்னால் போவேனேயானால், உங்களால் என்னை நன்றாகக் கேட்க முடியுமா? அதைப் பின்னால் கொண்டு சென்றால்? சரி. பால் ராடர் அவர்களுடைய ஒரு யோசனையை நான் எடுக்க முயற்சிப்பேன். பால் அவர்களை எத்தனை பேர் கண்டிருக்கிறீர்கள்? நான் பால் அவர்களைப் பார்த்து சிரித்தேன். அவர் வழக்கமாக இவ்விதமாக பின்னால் சென்று, அவருடைய காற்சட்டைகளை எப்போதுமே மேலே உயர்த்திக் கொண்டிருப்பார். அதன்பிறகு அவர் தம்முடைய (பிரசங்கத்தின்) முக்கிய விஷயத்தை (point) பெற்றுக்கொண்டு, அவரால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு விரைவாக மேடையை நோக்கி ஓடி வந்து, இரண்டு கரங்களையும் மேலே உயர்த்துவார். எனவே அவர் ஒலிப்பெருக்கியிலிருந்து பின்பக்கமாக விலகிச் செல்வார். ஆம், சகோதரன் காலின்சும் சகோதரி காலின்சும் இங்கே பின்னால் கூட்டத்தினரில் உட்கார்ந்திருப்பதை நான் காண நேர்ந்தது. தேவன் மெதொடிஸ்டு போதகர்களுக்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை கொடுப்பதை விசுவாசிக்காத யாராவது இருந்தால், அங்கே ஒருவர் உட்கார்ந்திருக்கிறார், தேவன் அவருக்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் கொடுத்தார்: அவர் ஒரு - ஒரு மெதொடிஸ்டு போதகர், அவர் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ள கென்டக்கி மெதொடிஸ்டு போதகராயிருக்கிறார், மேலும் அவர் இப்பொழுது தேவனுடைய தாழ்மையான ஊழியக்காரன். ஆகையால் பரிசுத்த ஆவி அதை வாஞ்சிக்கிற எவருக்குமாக இருக்கிறது என்பதற்காக நாம் மகிழ்ச்சியாயிருக்கிறோம். தேவனுடைய நிபந்தனைகளுக்கு வர விருப்பமுள்ள யாருமே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆம், ஐயா. அது. மொதொடிஸ்டுகளுக்காகவும்,பாப்டிஸ்டுகளுக்காகவும், பிரெஸ்பிடேரியன்களுக்காகவும்,லூத்தரன்களுக்காகவும், கத்தோலிக்கர்களுக்காகவும், யூதர்களுக்காகவும், புரட்டஸ்டன்ட்களுக்காகவும், மஞ்சள் நிறத்தினருக்காகவும், கறுப்பு நிறத்தினருக்காகவும், வெள்ளை நிறத்தினருக்காகவும், பழுப்பு நிறத்தினருக்காகவும் ஏழைகளுக்காகவும் இருக்கிறது, நாமனைவரும் ஒன்றாயிருக்கிறோம். பரிசுத்த ஆவி எல்லாருக்குமாக உள்ளது. 10இப்பொழுது, நான் ... வணங்கியிருக்க விரும்புகிறேன். நாம் ஜெபிக்கையில் சிறிது நேரம் உங்களுடைய தலைகளைத் தாழ்த்துவீர்களானால். நீங்கள் தலைகளைத் தாழ்த்தினவர்களாய் ஜெபிப்பதற்கு முன்பு, உங்களுக்கு விசேஷமான ஜெப விண்ணப்பங்கள் ஏதுமிருந்தால், உங்களுடைய கரங்களை தேவனுக்கு நேராக உயர்த்தி, நீங்கள் அதை அறியச்செய்வீர்களா? உங்கள் இருதயத்தில் உங்களுடைய விண்ணப்பங்களை வைத்துக் கொள்ளுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் ஒவ்வொருவருடைய விண்ணப்பங்களையும் தேவன் உங்களுக்கு அருளுவாராக. 11எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் உம்முடைய கிருபையின் சிங்காசனத்தை அணுகுகிறோம், உம்முடைய நீதியின் சிங்காசனத்தை அல்ல, கர்த்தாவே, உம்முடைய நீதியின் சிங்காசனத்தில் எங்களால் நிற்க முடியாது. நாங்கள் நீதிக்காக வேண்டிக்கொள்ளவில்லை; நாங்கள் இழக்கப்பட்டிருந்தோம்; ஆனால் நாங்கள் உம்முடைய கிருபைக்காக வேண்டிக்கொள்கிறோம். மேலும் நாங்கள் வருகிறோம், ஏனென்றால் வரும்படிக்கு நீர் எங்களுக்கு சொல்லியிருக்கிறீர், நாங்கள் தைரியமாய் வந்து, சந்தேகப்படாமல், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அதைக் கேட்போமானால், நாங்கள் கேட்பதைப் பெற்றுக்கொள்வோம் என்ற வாக்குத்தத்தத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம். 'வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் இயேசுவின் நாமத்தில் செய்யுங்கள்' என்று எழுதப்பட்டுள்ளது. அவர் தாமே பூமியில் இருந்தபோது, 'என் நாமத்தினால் நீங்கள் பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், அதை நான் செய்வேன்' என்று சொல்லியிருக்கிறார். நாங்கள் கேட்டுக்கொள்வதைப் பெற்றுக் கொள்வோம் என்ற நிச்சயத்தை நாங்கள் உடையவர்களாயிருக்கிறோம், விசுவாசிக்கும்படியாக எங்கள் இருதயத்திலுள்ள எல்லாவற்றோடும் விசுவாசித்தவர்களாய் நாங்கள் விசுவாசத்தோடு வருகிறோம். இன்றிரவு கிருபையும் இரக்கமும் தைரியமும் எங்களை சூழ்ந்து கொள்ளும்படியாகவும், நாங்கள் விரும்புகிறபடி உம்முடைய ஆவியின் ஒரு மகத்தான பாகத்தை எங்களுக்கு எங்கள் இருதயங்களில் அருளும்படியாகவும் நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். தங்களுடைய கரங்களை உயர்த்தியிருப்பவர்களுக்கு - எங்களுடைய இருதயங்களில் இருந்த (ஜெப) விண்ணப்பங்களுக்காக விசுவாசத்தைத் தாரும், நானும் அவர்களில் ஒருவனாய் இருக்கிறேன், எங்களுடைய விண்ணப்பங்களை நீர் அருளிச்செய்வீர் என்று எங்கள் முழு இருதயத்தோடும் நாங்கள் விசுவாசிக்கிறோம். உமது பார்வைக்கு ஏற்றபடி நீர் எங்களுக்குச் செய்யும்படியாக இந்த ஆராதனையையும் எங்களையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். நாங்கள் வார்த்தையைப் போதிக்கும்படி அணுகிக் கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் வந்து இந்த வார்த்தைகளை அபிஷேகித்து, எங்கள் எல்லாருடைய இருதயங்களிலும் அவைகளை விதைப்பாராக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 12இப்பொழுது, வழக்கமாக வேதவாக்கியங்களை பற்றிக்கொள்பவர்களாகிய நீங்கள் இன்றிரவு பாடத்திற்காக உபாகமம் 2ம் அதிகாரம், 3ம் வசனத்திற்குத் திருப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இந்த மலைநாட்டில் இருந்தது போதும்; வடக்கே திரும்புங்கள். நான் பழைய ஏற்பாட்டிலிருந்து போதிக்க விரும்புகிறேன், ஏனென்றால் பழைய ஏற்பாடானது புதிய ஏற்பாட்டிற்கு ஒரு முன்னடையாளமாக (type) உள்ளது. இன்றிரவு மிகவும் புனிதமான கனத்திற்கு பாத்திரமான இப்பாடத்தை நாம் அணுகிக்கொண்டிருக்கையில், (அவருடைய எல்லா வார்த்தையும் புனிதமாகவும் கனத்திற்கு பாத்திரமாகவும் உள்ளது), கடந்த காலங்களிலும் தற்போதைய நாட்களிலும் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் இணையாக ஒத்திருக்கிறது என்பதை நான் ஒருமித்து காண்பிக்க விரும்புகிறேன். 13இஸ்ரவேலர் சிவந்த சமுத்திரத்தின் மறுகரையில் ஆவியில் பாடிக்கொண்டும், சத்தமிட்டுக்கொண்டும், நடனமாடிக்கொண்டும் இருந்த போது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு போவதற்கு நாற்பது வருடங்கள் ஆகும் என்று யாராவது அவர்களிடம் கூறியிருப்பார்களானால், இஸ்ரவேலர் அதை கொஞ்சமே விசுவாசித்திருப்பார்கள். அவர்கள் அதை ஒருபோதும் விசுவாசித்திருக்க மாட்டார்கள். யாராவது ஒருவர் அவர்களிடம், 'நீங்கள் இப்பொழுது உபத்திரவத்தை விட்டும் துன்பத்தை விட்டும் வெளிவந்திருக்கிறீர்கள். தேவன் உங்களை விடுவித்து கடந்து வரச் செய்திருக்கிறார்' என்று கூறியிருப்பாரானால். ஒரு சில நாட்கள் பிரயாண தூரம் தான் இருந்தது என்பதைத் தவிர வேறு அதிக தூரம் இருக்கவில்லை. ஆயினும் அவர்களுடைய அவிசுவாசமானது நாற்பது நீண்ட வருடங்களாக வனாந்தரத்திலேயே அவர்களை வைத்திருந்தது. மேலும் நம்முடைய பிதாக்களும் ஏறக்குறைய நாற்பது வருடங்கள் அல்லது இன்னும் கொஞ்சம் அதிகமான வருடங்களுக்கு முன்பு அதே இடத்தில் வந்தார்கள், அதே நிலைமையே அங்கிருந்தது. இஸ்ரவேலருக்கு ஒரு மகத்தான எழுப்புதல் உண்டாயிருந்தது. அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒரு-ஒரு-ஒரு தேசத்திற்குப் போகும் தங்களுடைய பாதையில் இருந்தார்கள், தேவன் அவர்களுக்கு அதை கொடுப்பதாக பிதாவாகிய ஆபிரகாமுக்கு ஆணையிட்டிருந்தார். அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், தங்கள் மேல் ஆசீர்வாதங்களையும் கொண்டவர்களாய் இந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் போய்க்கொண்டிருந்தார்கள், விடுதலையின் நேரமானது சமீபமாயிருந்தது, தேவன் தாம் செய்யப்போவதாக வாக்குப்பண்ணியிருந்த எல்லாவற்றையும் செய்திருந்தார், அவர்கள் அந்த தேசத்திற்குப் போகும் தங்கள் பாதையில் இருந்தார்கள். அது ஒரு சில மைல்கள் தூரம் தவிர அதிகம் இருக்கவில்லை. அதை பூகோள வரைபடத்தில் அளந்து பாருங்கள். என்னால் அதை ஐந்து நாட்களைக் காட்டிலும் குறைவான நாட்களில் நடந்து (கடக்க) முடியும் என்று நான் உண்மையாகவே நம்புகிறேன்: அவர்கள் சிவந்த சமுத்திரத்திலிருந்து துரிதமாக ஐந்து நாட்களில் நடந்து சென்று, அவர்கள் யோர்தானைக் கடந்து பாலஸ்தீனாவுக்குள் பிரவேசிக்குமிடத்தில் இருந்தார்கள். வெறுமனே சிறு பிரயாணம் தான், இருப்பினும், அவர்களுடைய அவிசுவாசத்தின் காரணமாக, அது அவர்களை வனாந்தரத்தில் நாற்பது வருடங்கள் தொடர்ந்து இருக்கச் செய்தது. 14இப்பொழுது, அது ஒரு புனிதமான காரியமாகும்; நாம் சிறிது நேரம் அதன் பேரில் சிந்திப்போம். மாராவின் தண்ணீர் அவர்களுக்கு முன்பாக இருந்ததை அவர்கள் கொஞ்சமே விசுவாசித்தனர்; அல்லது சீன் வனாந்தரத்தையோ, சீனாய் மலையையோ, காதேஸ் பர்னேயாவையோ (அங்கு தான் அவர்கள் முற்றிலுமாக தேவனை விட்டு விட்டனர்) அவர்கள் கொஞ்சமே நம்பினர்; காதேசிலிருந்து கடந்து செல்ல 11 நாட்கள் பிரயாண தூரம் மாத்திரமே இருந்தது. அவர்களால் அதை விசுவாசிக்க முடியவில்லை, ஏனெனில் அனேக மகத்தான காரியங்கள் செய்யப்பட்டிருந்ததை அவர்கள் ஏற்கனவே கண்டிருந்தனர். அவர்கள் தேவனுடைய சித்தத்தில் இருந்தனர் என்பதைக் குறித்த நிச்சயம் உள்ளவர்களாயிருந்தனர். நம்முடைய பிதாக்கள் ஒரு சில வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போன்று. மேலும் அவர்கள் அவ்விதமே இருந்தனர், ஆனால் அவர்கள் அங்கே தான் தங்களுடைய மரணத்துக்குரிய பெருந்தவறைப் புரிந்தனர். அவர்கள்... இஸ்ரவேலர் செய்த தவறுகளிலேயே மிகப்பெரிய தவறு என்னவென்றால், கிருபையை விட்டு விட்டு நியாயப்பிரமாணத்தை ஏற்றுக் கொண்ட போது தான். இஸ்ரவேலர் தங்களுடைய மிகப்பெரிய தவறை யாத்திராகமம்19-ம் அதிகாரத்தில் செய்தனர், அதுதான் இஸ்ரவேலர் புரிந்த மரணத்துக்கேதுவான தவறுகளில் ஒன்றாக இருந்தது. தேவன் ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கையானது முற்றிலுமாக கிருபையாக இருந்தது. ஆனால் கிருபையானது அவர்களுக்காக ஒரு இரட்சகனையும், ஒரு தீர்க்கதரிசியையும், ஒரு பலியான ஆட்டுக்குட்டியையும் அருளியிருந்தது. அவர்கள் எப்பொழுதும் கொண்டிருந்ததிலேயே மிகப்பெரிய எழுப்புதலை அது அவர்களுக்கு அருளியிருந்தது. இருப்பினும் அவர்கள் அதைக்கொண்டு திருப்தியாயிருக்கவில்லை. அவர்கள் அதைக்குறித்து விவாதிக்கக்கூடிய ஏதோவொன்றை விரும்பினர். அவர்கள் அதற்குள் செய்யும்படியாக ஏதோவொன்றை கொண்டிருக்கக்கூடியதான ஒரு இடத்தை விரும்பினர். 15இன்றும் அதேவிதமாகத்தான் உள்ளது. நாற்பது வருடங்களுக்கு முன்பு நம்முடைய பிதாக்களோடும், நம்முடைய பெந்தெகோஸ்தே பிதாக்களோடும் அதேவிதமாகத்தான் இருந்தது. கிருபையானது அவர்களுக்கு ஒரு எழுப்புதலைக் கொடுத்திருந்து, அவர்களை உலகத்தை விட்டும், அவர்கள் இருந்த பெருங்குழப்பத்தை விட்டும், அவர்களுடைய சடங்காசாரமான ஸ்தாபனங்களை விட்டும், அமைப்புகளை விட்டும், மற்றவைகளை விட்டும் வெளியே கொண்டு வந்து, அவர்கள் எப்பொழுதும் கொண்டிருந்ததிலேயே மிகப்பெரிய ஒரு எழுப்புதலுக்கு அவர்களை வழிநடத்தியிருந்தது, அவர்கள் மேல் பரிசுத்த ஆவியைப் பொழிந்து அவர்களை ஆவியினால் நிரப்பியிருந்தது. அவர்கள் ஆவியில் பாடிக்கொண்டும், நடனமாடிக்கொண்டும் ஒரு அற்புதமான நேரத்தைக் கொண்டிருந்தனர். (ஆனால்) அவர்கள் இந்த வருடங்கள் எல்லாம் வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் விட்டு அகன்று சென்று விடுவார்கள் என்பதை அவர்கள் கொஞ்சமே அறிந்திருந்தார்கள். ஆனால் இஸ்ரவேலருக்கு இயற்கையாக சம்பவித்தது போல, ஆவிக்குரிய பிரகாரமாகவும் இஸ்ரவேலருக்கு சம்பவித்தது. நாம் இஸ்ரவேலர்களாய் இருக்கிறோம், ஏனென்றால் நாம் ஆபிரகாமின் சந்ததியாராயிருக்கிறோம். மாம்சத்தின்படி இஸ்ரவேலர் இஸ்ரவேலர் அல்ல, ஆனால் ஆவியின்படி இஸ்ரவேலரே இஸ்ரவேலர். 'கிறிஸ்துவுக்குள் மரித்த நாம் ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரராயும் இருக்கிறோம்.' ஆகையால் நாம்... ஆபிரகாம் ஒரு யூதனல்ல. ஆபிரகாம் கல்தேயா தேசத்து, ஊர் பட்டணத்தை விட்டு வெளியே வந்த ஒரு புறஜாதியான் ஆவான். அவன் முற்றிலுமாக ஒரு புறஜாதியானாயிருந்தான். 1616.இப்பொழுது, கவனியுங்கள், ஆனால் அவர்கள் யாவருமே இவ்விதமாக இருந்தனர், ஏனென்றால் தேவன் அவர்களுக்காக அருளியிருந்தவைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து, அதனோடு ஏதோவொன்றை சேர்த்துக்கொள்ள விரும்பினர். அங்கு தான் நாம் எப்போதுமே நம்முடைய தவறுகளைச் செய்கிறோம், அது எப்போதென்றால் தேவன் செய்திருப்பவைகளோடும், தேவன் சொல்லியிருப்பவைகளோடும் ஏதோவொன்றை சேர்த்துக்கொள்ள நாம் முயற்சிக்கும் போதுதான். அதை அப்படியே தனியே விட்டு விடுங்கள். கர்த்தருடைய ஜெபத்தோடு ஒரு வார்த்தை கூட்டியோ அல்லது அதை விட்டு ஒரு வார்த்தையை எடுத்துப்போட்டு விட்டோ அதை சிறந்த முறையில் மேலானதாக செய்யும்படியாக அவர்கள் 2000 வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். உங்களால் அதைச் செய்ய முடியாது, ஏனென்றால் அவர் உரைக்கும் போது, அது பரிபூரணமாயுள்ளது. நீங்கள் பரிபூரணத்தோடு ஏதோவொன்றைக் கூடுதலாக சேர்த்துக்கொள்வீர்களானால், நீங்கள் அதை தொடர்ச்சி இல்லாமல் உடைத்துப் போடுகிறீர்கள். தேவன் செய்கிற எதுவும் பரிபூரணமாயுள்ளது. அவருக்கு நம்முடைய உதவி தேவைப்படுகிறது என்று நாம் சிந்திக்க முயற்சிக்கும் போது... அவருக்கு நம்முடைய உதவி தேவையில்லை. அவர் தேவனாயிருக்கிறார். நீங்கள், 'நல்லது, அவர் வார்த்தையைப் பிரசங்கிப்பதற்கு மனிதர்களையே உபயோகிக்க வேண்டியுள்ளதே' என்று கூறலாம். யோவான், 'தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்' என்று சொன்னது போன்று. நாம் அவருக்குத் தேவையில்லை. அவர் சிருஷ்டிகராயிருக்கிறார்; அவர் விரும்புகிற எதையும் அவரால் செய்ய முடியும், ஏனெனில் அவர் தேவனாயிருக்கிறார். 17இப்பொழுது, இந்த எல்லா காரியங்களையும் நாம் கண்டுகொள்ளுகிறோம்... அருளப்பட்ட ஒரு பஸ்கா ஆட்டுக்குட்டி அவர்களுக்கிருந்தது. அவர்களுடைய பிரயாணத்திற்காக வானத்திலிருந்து மன்னாவை தேவன் அவர்களுக்குக் கொடுத்திருந்தார். அவர்களுக்குத் தாகமெடுத்த போது, கன்மலையிலிருந்து குடிப்பதற்கு தேவன் அவர்களுக்கு ஒரு கன்மலையைக் கொடுத்திருந்தார், அவர்கள் வியாதியாயிருந்த போது, அவர்களை சுகப்படுத்த ஒரு வெண்கல சர்ப்பத்தை அவர்களுக்குக் கொடுத்திருந்தார். அவையெல்லாம் இருந்த போதிலும், அவர்கள் ஒரு நியாயப்பிரமாணத்தைக் கொண்டிருக்க வேண்டியதாயிருந்தது. அவர்கள் ஒரு-ஒரு வேதசாஸ்திர அனுபவத்தை விரும்பினர், அப்படியானால் குழப்பம் உண்டாக்குவதற்கும், தங்களைத் தாங்களே ஸ்தாபிக்கவும், தங்களைத் தாங்களே உடைத்துப் போடுவதற்கும் ஏதோவொன்றை அவர்கள் கொண்டிருக்க முடிந்தது. நாற்பது வருடங்களுக்கு முன்பு, நம்முடைய பெந்தெகோஸ்தே பிதாக்களுக்கும் அதேவிதமான ஒரு காரியம் சம்பவித்தது. ஒரு மாறுகண்ணுடைய ஒரு நீக்ரோ மனிதரை கலிபோர்னியாவிலிருந்து தேவன் அழைத்து, அவருக்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நான அனுபவத்தை கொடுத்தார். அங்கிருந்து அசுசா தெருவிலுள்ள பழமையான அசுசா வீதி மிஷன் ஊழியங்கள் உருவாக்கப்பட்டது. அங்கிருந்து அது தேசம் முழுவதும் தீவிரமாய் பரவிச் செல்லும் அளவுக்கு நாலாபுறமும் பரவியது. பெந்தெகோஸ்தே எழுப்புதலானது எல்லாவிடங்களிலும் கொழுந்து விட்டு எரியும் அளவுக்கு ஒரு தேசத்திலிருந்து வேறு தேசத்திற்கும் பிற தேசங்களுக்கும் பரவியது. தேவன் கிருபையினாலே எவ்வளவு ஆசீர்வாதங்களை அருளியிருந்தார்! அவர்களில் அநேகருக்கு தங்களுடைய சொந்த பெயரையும் எழுத முடியவில்லை. அவர்களில் சிலர் சபைக்கு கந்தை துணிகளை உடுத்திக் கொண்டு வந்தனர். அவர்கள் ரயில் இருப்புப்பாதையின் மேல் நடந்து சென்று, சிறிய தாய்மார்கள் தங்களுடைய பிள்ளைகளைப் போஷிக்க சோளத்தை கைகள் நிறைய எடுத்து, அந்த பாதைகளில் அவைகளைப் புடைத்தனர், ஆகையால் அவர்களுடைய கணவன்மார்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முடிந்தது. அவர்கள் அலைந்து திரிந்தனர்; அவர்கள் பரிகாசம் செய்யப்பட்டு, கேலி செய்யப்பட்டு, பரிசுத்த உருளையர்கள் என்று அழைக்கப்பட்டு, தினமும் இராமுழுவதும் சிறைச்சாலையில் காலத்தைக் கடத்தினர். அவர்களில் சிலரை பைத்தியக்காரர்கள் என்று சொல்லி, பைத்தியக்கார மருத்துவமனைகளில் அவர்கள் அடைத்து வைக்க விரும்பினர். இந்த தேசம் எப்பொழுதும் அறிந்ததிலேயே மிகப்பெரிய எழுப்புதல்களில் ஒன்றை தேவன் அவர்களுக்குக் கொடுத்திருந்தார். அது எப்பொழுது இருந்ததென்று எனக்குக் கவலையில்லை; பெந்தெகோஸ்தே எழுப்புதலைப் போன்று, ஒரு எழுப்புதலும் ஒருபோதும் இருந்ததில்லை. அது உண்மை. வெஸ்லி அதைக் கொண்டிருக்கவில்லை; அவர்களில் யாருமே அதைக் கொண்டிருக்கவில்லை. ஸ்பர்ஜன், கால்வின், நாக்ஸ், மற்றும் மகத்தான சீர்திருத்தக்காரர்கள் யாருமே பெந்தெகோஸ்தே எழுப்புதலைப் போன்ற எழுப்புதலை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை; பரிசுத்த ஆவி பெந்தெகோஸ்தே நாளில் விழுந்தது முதற்கொண்டு பூமியில் விழுந்த மிகப்பெரிய காரியம் அதுவே. (வேறு) எதுவுமில்லை... இப்பொழுது கடந்த வருடத்தில் அதிகமான மனமாற்றங்களை (மனமாற்றமடைந்தவர்களை) அவர்கள் - அவர்கள் பெற்றிருக்கிறார்கள், மற்ற சபைகள் எல்லாம் சேர்ந்து பெற்ற மனமாற்றமடைந்தவர்களைக் காட்டிலும், அதிக மனமாற்றமடைந்தவர்களை அந்த சபை தானே பெற்றுள்ளது. சமீபத்தில் பில்லி கிரஹாம் அதைக் குறித்து பேசினதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்; நீங்கள் அதைக் கண்டும் காணாதது போல விட்டு விட முடியாது. 18நாம் எங்கே தவறு செய்தோம்? இஸ்ரவேலர் செய்தது போலவே நாமும் செய்தோம், நாம் பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துகிறவிதமாக போய், நாம் சேருமிடத்தை நோக்கி தொடர்ந்து செல்ல முடியவில்லை, வெறுமனே பெற்றிருக்கிறோம்.... அவிசுவாசமானது உள்ளே வருவதற்கு காரணமான ஏதோவொன்றை நாம் கூடுதலாக சேர்த்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது. கர்த்தர் இஸ்ரவேலரை வழிநடத்திக் கொண்டிருந்தவிதமாக அவர்கள் தொடர்ந்து போயிருந்தால், இரண்டு வாரத்திற்குள்ளாக அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் ஏதோவொன்றை பதிலீடாகக் கொண்டிருக்க வேண்டியதாயிருந்தது. பெந்தெகோஸ்தே சபையானது, தேவன் அதற்குள் இருந்தார் என்பதை ஏற்கனவே நிரூபித்து, அது போகும்படி தேவனால் நியமிக்கப்பட்ட வழியில் ஆவியில் தொடர்ந்து போயிருக்குமானால், நாம் ஆயிர வருட அரசாட்சியில் ஜீவித்துக் கொண்டிருப்போம். ஆனால் அவர்கள் அங்கே முற்காலத்தில் செய்த அதே காரியத்தை இவர்களும் செய்தார்கள், கொரிந்தியர் புத்தகத்தில் வேதம் உரைப்பது போல, அவைகள் நமக்கு திருஷ்டாந்தங்களாக உள்ளன. அவர்களுக்கு என்ன சம்பவித்ததோ அதுவே நமக்கும் சம்பவிக்கிறது. முதலாவதாக என்ன சம்பவித்தது? நம்மால் ஒரு கூட்டம் விசுவாசிகளோடு ஆவியினால் வழிநடத்தப்பட்டு தொடந்து போக முடியவில்லை; நம்மோடு கூட ஒரு பெயரைச் சேர்த்துக் கொள்வதற்காக நாம் ஏதோவொன்றைக் கொண்டிருக்க வேண்டியதாய் இருந்தது. நாம் ஒரு அமைப்பை உருவாக்க விரும்பினோம். 19எனவே அவர்கள் உண்டாக்கிக் கொண்டனர் மேலும் அதைச் செய்தது என்ன. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திற்குப் பதிலாக ஜனங்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்ற வெளிப்பாட்டை யாரோ ஒருவர் பெற்றுக் கொண்டார். அதற்குப் பதிலாக பெற்றுக் கொண்டார், பிறகு என்ன சம்பவித்தது? அதன்பிறகு பழங்கால பொது சபையானது (General Council) அசம்பிளிஸ் ஆஃப் காட் ஆக மாற வேண்டியதாயிருந்தது. என்ன சம்பவித்தது: இயேசுவின் நாமத்தார் ட.அ. ர்ச் ர., ட.அ.ஒ.இ மற்றும் எல்லா வித்தியாசமான பெயர்களாலும் அழைக்கப்பட்ட ஒரு அமைப்பை அவர்களுக்கு உண்டாக்க வேண்டியதாயிருந்தது: அவர்களில் ஒரு அமைப்பினர் குதிரையின் மேல் வருகிறார் என்றும், மற்றொரு அமைப்பினர் மேகத்தின் மேல் வருகிறார் என்றும் (கூறினர்). அங்கே தான் நீங்கள் உங்களுடைய தவற்றைச் செய்தீர்கள். அங்கே தான் நீங்கள் பயங்கரமான பாவத்தைச் செய்தீர்கள். நீங்கள் ஏன் அதைத் தனியே விட்டுவிட வில்லை? இயேசு என்ற நாமமும், நீங்கள் பெற்றிருக்கிற அவர்களுடைய சிறு காரியங்கள் எல்லாமும், மற்றவைகளும் சரியல்ல, தேவன் சொன்னார், ஒவ்வொரு... இயேசு, 'என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்'என்று கூறினார். அது தேவனுடையதாக இல்லையென்றால், ஒன்றுமற்றதாக ஆகிவிடும். அது தேவனுடையதாக இருக்குமானால், யார் அதை நிறுத்தப் போகிறார்கள்? அதுதான் அது. அதைத் தனியே விட்டு விடுங்கள். தேவனே ஆளுகை செய்பவராக இருக்கட்டும். ஆனால் நாம் ஸ்தாபனம் உண்டாக்க வேண்டியதாயிருந்தது. இப்பொழுது, நாம் ஒருத்துவக்காரர், இருத்துவக்காரர், திரித்துவக்காரர், மேலும் ஓ, என்னே, அவர்கள் துண்டுகளாக உடைந்து விட்டனர், ஒருவர் மற்றவரிடம் வம்புக்குப் போகிறார்கள். சிறு குழுக்களோ, 'நாங்கள் தான் பெரியவர்கள்; நாங்கள் தான் சிறுபான்மை கூட்டம்; நாங்கள் தான் பெரும்பான்மை கூட்டத்தார்; நாங்கள் இது; நாங்கள் அது; எங்களிடம் சிறந்தது உள்ளது; எங்களிடம் அதிக பணம் உள்ளது; எங்களிடம் அதிக மிஷனரிமார்கள் உண்டு, நாங்கள்.... பெற்றிருக்கிறோம்' என்கின்றனர். ஓ, என்னே. நாம் பிரிந்திருக்கவில்லை. நாம் அவ்வாறு இருக்கக் கூடாது. 'நாமனைவரும் ஒரே சரீரமாயும், ஒரே நம்பிக்கையைக் கொண்டவர்களாயும், ஒரே உபதேசத்தைக் கொண்டவர்களாயும், ஒரே அன்பைக் கொண்டவர்களாயும், இருக்க வேண்டும்.' ஆம், அன்பு. 'யுத்தத்திற்கு அணிவகுத்து செல்வதைப் போல கிறிஸ்தவ போர்வீரர்கள் முன்னோக்கி அணிவகுத்துச் சொல்ல வேண்டும்,' நமக்கு முன்னே ஒரு காரியத்தை (மட்டுமே) கொண்டிருக்க வேண்டும், ஒரு அமைப்பையல்ல, 'ஆனால் இயேசுவின் சிலுவையையே முன்னே வைத்துக் கொண்டு அணிவகுத்துச் செல்ல வேண்டும்.' 20மனிதன் தங்கள் பாகத்தை சேர்த்துக்கொள்ள விரும்பி, அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அது செய்யப்பட வேண்டும் என்பதாக அது எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. இஸ்ரவேலர் ஒரு இராஜாவைக்கொண்டிருக்க வேண்டுமென்று விரும்பி, அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தைப் பெற்றுக்கொண்ட போதும், அதே காரியமே சம்பவித்தது. தேவன் அவர்களுடைய இராஜாவாக இருந்தார். தேவன் எப்போதுமே தம்முடைய ஜனத்திற்கு எல்லாவற்றிற்கும் எல்லாமுமாக இருக்க வேண்டுமென்றே விரும்புகிறார். ஆனால் மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே அதனோடு ஏதோவொன்றை செய்ய வேண்டுமென்று விரும்புகின்றனர், ஏனெனில் நாம் மாவட்ட கண்காணிப்பாளர்களைக் கொண்டிருக்க வேண்டியதாய் இருக்கிறது, நாம் டட்.ஈ. -களைக் கொண்டிருக்க வேண்டியதாய் இருக்கிறது, யாரோ ஒருவர் நம்மை நோக்கிப்பார்க்கும்படி செய்வதற்காக, நாம் இந்த மற்ற எல்லா மகத்தான பட்டப்பெயர்களையும், மற்றவைகளையும் கொண்டிருக்க வேண்டியதாய் இருக்கிறது, மற்ற சகோதரர்கள், 'நல்லது, அவர்கள் தங்களுடைய தொப்பிகளில் ஒரு இறகுக்குஞ்சத்தை பெற்றுக்கொள்வதற்காக, குழப்பம் உண்டாக்கி, சண்டையிட்டு, மட்டுமீறிய அமளி உண்டாக்கி, எளிதான குறுக்கு வழியில் அதைச் செய்கிறார்கள்' என்று கூறுகின்றனர், நாம் அதை அவ்வாறு தான் அழைக்கிறோம். ஏன், அது ஒரு அவமானம். அது அவிசுவாசத்தைக் கொண்டு வருகிறது. 'ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?' என்று வேதம் கூறுகிறது, மற்றும் அவ்விதமான காரியங்கள். 'மாவட்ட கண்காணி (district man) அதில் இருக்கிறார். நாம் அவருக்குச் செவி கொடுத்தாக வேண்டும். பிஷப் அதில் இருக்கிறார், நாம் அவருக்கு செவி கொடுத்தாக வேண்டும். கண்காணி அதில் இருக்கிறார்; நாம் அவர் கூறுவதற்கு செவிகொடுத்தாக வேண்டும்' என்று கூற நீங்கள் முயற்சிக்கும் போது, நீங்கள் அதை எப்படி செய்ய முடியும்? உங்களுடைய ஸ்தாபனத்தில் யாரோ ஒருவராக இருக்க முயற்சிக்கிறீர்கள், உங்களால் அதைச் செய்ய முடியாது, அப்படியானால் தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருங்கள். நீங்கள் யாவற்றையும் விற்று விட்டு, தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு தான் பெந்தெகோஸ்தே துவங்கினது. அவ்வாறு தான் பெந்தெகோ... உங்களை பெந்தெகோஸ்தேயினனாக ஆக்குகிறது. சபை என்னும் வார்த்தைக்கு 'வெளியே அழைக்கப்பட்டவர்கள்' என்று அர்த்தம். இஸ்ரவேலர் வெளியே அழைக்கப்பட்டிருந்தனர். பெந்தெகோஸ்தே வெளியே அழைக்கப்பட்டு பிரித்தெடுக்கப்பட்டனர். இஸ்ரவேலர் தேவனுடைய சபையாக இருந்தனர். பெந்தெகோஸ்தேயானது வெளியே அழைக்கப்பட்டு பிரித்தெடுக்கப்பட்ட போது, அது தேவனுடைய சபையாய் இருந்தது. ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் மற்ற - மற்ற ஜனங்களைப் போல செய்ய வேண்டியுள்ளது. அவர்கள் செய்கிற காரியங்களை நீங்களும் செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் - நீங்கள் அவர்களைப்போன்று இருக்கவே விரும்புகிறீர்கள். 21இஸ்ரவேலர் ஒரு இராஜாவை விரும்பினபோது, நல்லவனாயிருந்த வயதான தீர்க்கதரிசியாகிய சாமுவேல் அவர்களை அழைத்து, 'கவனியுங்கள், நான் ஒரு காரியத்தை உங்களிடம் கூற விரும்புகிறேன்' என்றான். வேறு வார்த்தைகளில் கூறினால்: 'நீங்கள் பெலிஸ்தியர்களைப் போல இருக்க விரும்ப வேண்டாம்; உலகத்திலுள்ள மற்ற தேசங்களைப்போன்று நீங்கள் இருக்க விரும்பாதீர்கள். அவர்கள் தங்கள் இராஜாக்களைக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் உங்களுக்கு ஒரு இராஜா தான் உண்டு, அவர் தான் யேகோவா' என்பதைப் போன்று கூறினான். எந்த உண்மையான தீர்க்கதரிசியும் அவ்விதமே உங்களிடம் கூறுவான், மற்ற ஏதோவொன்றிற்குள் உங்களை வழிநடத்த மாட்டான்; உங்களை யேகோவாவினிடத்தில் தான் திருப்புவான்; அவரே உங்களை வழிநடத்தட்டும்; அவரே உங்களுக்கு வழிகாட்டட்டும். நல்லது, அவர்கள் எப்படியாயினும் மற்ற தேசங்களைப் போன்று இருக்கவே விரும்பினார்கள். வயதான சாமுவேல் எழுந்து நின்று, 'தேவனே உங்கள் இராஜா' என்றான். தேவனே நம்முடைய இராஜாவாக இருக்கிறார். உலக காரியங்களின் பிறகேயும், மற்ற தேசங்களின் பிறகேயும் (சென்று) அவர்கள் உதாரணத்தைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டாம். அவர்கள் அதை விரும்பினால் தொடர்ந்து செல்லட்டும். மற்ற ஜனங்கள் தங்களுடைய பெரிய வேறுபட்ட குழுக்களுடன் இசைவாயிருக்கவும், பிஷப்புகள் மற்றும் பகட்டான கல்வி கற்ற பிரசங்கிமார்களுடனும், இந்த எல்லா வகையான ஹாலிவுட் சரக்குகளோடும் பொருந்தியிருக்கும்படி விரும்புவார்களானால், அவர்கள் அதைக் கொண்டிருக்கட்டும். ஆனால் அது தேவனுடைய பிள்ளைகளுக்கானதல்ல. பரிசுத்த ஆவியானவரே நம்முடைய வழிகாட்டியாயிருக்கிறார், அவர் தான் நம்முடைய ஆவிக்குரிய தலைவராயிருக்கிறார். உங்களுக்கு இக்காரியங்கள் அவசியமில்லை. அவர்கள் அவைகளை விரும்புகிறார்கள், அவர்கள் அவைகளைக் கொண்டிருக்கட்டும்; அவைகள் உங்களுக்கானதல்ல, அவைகள் உங்களுக்குப் பொருந்துவதில்லை. 22இப்பொழுது, என்ன சம்பவித்தது என்று நாம் காண்கிறோம், சாமுவேல் இஸ்ரவேலரிடம் சொன்னான்; அவன், 'தேவன் என்னை உங்களுடைய தீர்க்கதரிசியாக அனுப்பினார். சம்பவிக்காத எதையாவது நான் எப்பொழுதாவது கர்த்தருடைய நாமத்தில் உங்களிடம் கூறினதுண்டா?' என்றான். அதைக்குறித்து சிந்தித்துப் பாருங்கள். மேலும் அவன், 'நான் உங்களுடைய பணத்திற்காக உங்களிடம் எப்பொழுதாவது பிச்சையெடுத்ததுண்டா? நான் எப்பொழுதாவது உங்களிடமிருந்து பணத்தை எடுத்ததுண்டா?' என்று கேட்டான். அரிசோனாவிலுள்ள ஒரு சகோதரனிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது, அங்கே ஒரு மகத்தான குறிப்பிட்ட தலைவர் ஒரு கூட்டத்தை வைத்திருந்தார். ஒரு சிறு சபையாக அது இருந்தது, இங்கே இந்த கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஜனங்களைக் காட்டிலும் அதிகமான ஜனங்கள் அங்கே இல்லை, அந்த மனிதரை பேச அழைப்பதற்கு அச்சபைக்கு 6000 டாலர்கள் செலவானது, இம்மனிதர் வாரிய குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். அதை ஒளிபரப்புவதற்காக 10,000 செலவானது. சகோதரனே, அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது, ஒரு மிஷன் ஊழியக்களத்தில் 6000 டாலர்கள் என்ன செய்யும், அங்கே மிஷன் ஊழியக்களங்களில் சகோதரர்கள் தங்கள் கால்களில் காலணிகள் இல்லாமல் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். நாமோ மகத்தான பெரிய கட்டிடங்களுக்காக மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழிக்கிறோம். நான் எந்த குறிப்பிட்ட நபரையும் குறித்துப் பேசிக் கொண்டிருக்கவில்லை; நான் முழு காரியத்தையும் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். மகத்தான கட்டிடங்கள்... ஒரு மகத்தான ஸ்தாபனமானது ஒரு அலுவலக கட்டிடத்தைக் கட்டுவதற்காக ஆறு மில்லியன் செலவழித்திருந்ததாக சமீபத்தில் கண்டேன், 3 முதல் 6 மில்லியன் டாலர்கள் என்று நம்புகிறேன், மிஷனரிகள் ஊழியக்களங்களில் பசியோடிருக்கின்றனர். மேலும் இயேசு சீக்கிரமாய் வருகிறார் என்று நாம் பிரசங்கிக்கிறோம். ஜனங்களே, நீங்கள் அதிலிருந்து என்ன அறிந்து கொள்ள முடியும்? நான் வெறுமனே... நான் மிகவும் துயரத்தில் இருக்கிறேன், நான் அதைப் புரிந்து கொள்ளவில்லை. உங்களுடைய வாழ்க்கையானது, நீங்கள் உங்கள் இருதயத்தில் உண்மையாகவே என்ன நினைக்கிறீர்கள் எனபதை உங்களுடைய ஜீவியம் சொல்லுகிறது. இயேசு, 'நீங்கள் ஒன்றைப் பேசி மற்றொன்றைச் செய்வீர்களானால்... நீங்கள் மாய்மாலக்காரர்களாய் இருக்கிறீர்கள், உங்களுடைய இருதயம் வேறு ஏதோவொன்றைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது, நீங்கள் எப்படி உங்களுடைய வாயிலிருந்து நல்ல காரியங்களைப் பேச முடியும்' என்றார். உங்களுடைய வார்த்தைகளைக் காட்டிலும் உங்களுடைய கிரியைகள் அதிக சத்தமாக பேசுகின்றன. நாம் ஏன் இயேசு வருகிறார் என்று விசுவாசித்து இக்காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறோம்? அக்காரியங்களுக்காக நமக்கு சமயமில்லை. 23சாமுவேல், 'இப்பொழுது, சம்பவிக்காமல் போன எதையாவது நான் உங்களிடம் கர்த்தருடைய நாமத்தில் எப்போதாவது கூறியிருப்பேனென்றால், என்னிடம் கூறுங்கள்' என்றான். அவர்கள், 'இல்லை, நீர் எங்களிடம் கூறின யாவுமே சம்பவித்தது' என்றனர். 'நான் எப்பொழுதாவது உங்களுடைய பணத்தை எடுத்திருந்தால் என்னிடம் சொல்லுங்கள். என்னிடம் கூறுங்கள்...' என்றான் சாமுவேல். மேலும் அவன், 'இப்பொழுது, நீங்கள் மற்றவர்களைப் போன்று நடந்து கொள்ளும்படிக்குப் போவீர்களானால், நீங்கள் இங்கே ஒரு இராஜாவைக் கொண்டு வரும்போது, யேகோவாவின் கீழாக ஏதோவொன்றை பதிலீடாக வைக்கிறீர்கள்...' என்றான். அவர்களோ, 'நல்லது, நீர் பாரும், இவரே எங்கள் இராஜாவாக இருப்பார், நாங்களும் மற்றவர்களைப் போல இருப்போம். ஏன், அது - அது நன்றாக இருக்கும். நாங்கள் அவரிடம் பேசக்கூடிய ஏதோவொரு மனிதனை, எங்களுக்கு ஆறுதலளிக்கக் கூடிய ஒரு மனிதனை, எங்களுக்காக வித்தியாசமான இக்காரியங்களாக இருந்து, எங்களிடம் திரும்பவும் பேசக்கூடிய ஒரு மனிதனை நாங்கள் கொண்டிருப்போம்' என்றனர். ஓ, சகோதரனே, நீங்கள் போதுமான ஆவிக்குரியவர்களாக இருந்தால், தேவன் உங்களிடம் திரும்பவும் பேசுவார். 24அவர்கள் புதிய பிறப்பின் மிக முக்கிய விஷயத்தை புறக்கணிக்க முயற்சிக்கிறார்கள். அதுதான் சம்பவிக்கிறது. இப்பொழுது, ஜனங்களால் இந்தப் புதிய பிறப்பையும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையும், மற்றவைகளையும் குறித்து சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. இயற்கையான பிறப்பில்லாமல் நீங்கள் இங்கே எப்படி வந்தீர்கள்? உங்களால் அவ்வாறு வர முடியாது. அதைச் செய்ய உங்களுக்கு எந்த வழியுமே கிடையாது, நீங்கள் ஜீவனுக்குள் வரும்படி (வேறு) எந்த வழியுமே கிடையாது அல்லது... சுற்றிலும் நடந்து சென்று, இயற்கையான பிறப்பைக் கொண்டிருக்காமல் அறிய இயலுமா. அது சரியா? நல்லது, ஆவிக்குரிய பிறப்பிலும் அதே காரியம் தான். நீங்கள் மறுபடியும் பிறவாவிட்டால், நீங்கள் அதைக் குறித்து எதையுமே அறிய மாட்டீர்கள். 'எனக்கு இங்கே வெளியே ஒரு வேலை உள்ளது' என்று கூறிக்கொண்டு, ஒரு பெருங்கூட்ட ஜனங்களை கூலிக்கு அமர்த்தப்போகிற ஒரு மனிதனை உங்களால் எப்படி உடன் அழைத்துச்செல்ல முடியும்? ஒரு மனிதன் அவனால் கூடுமானவரை, கல்லறை தோட்டத்தை நோக்கி, மிக வேகமாக கல்லறைத் தோட்டத்தை (graveyard) நோக்கி ஓடிப் போய்க் கொண்டிருக்கிறான். 'ஐயா, நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்?' 'ஓ, எனக்கு இங்கே ஒரு மகத்தான பெரிய திட்டம் இருக்கிறது; எனக்கு உதவி செய்யும்படிக்கு கொஞ்சம் ஜனங்களை நான் பெற்றுக்கொள்ளப் போகிறேன்.' 'அந்த கொஞ்சம் ஜனங்கள் எதற்காக?' 'எனக்கு உதவி செய்ய.' 'நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்?' 'கல்லறை தோட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன். ஓ, அந்த எல்லா இடங்களிலும் பெயர்களைக் கண்டேன்.' அதுதான் இதுவாக இருக்கிறது; வெறுமனே பெயர்கள். அதுவாகத்தான் நாம் ஆகிறோம், ஒரு கூட்டம் பெந்தெகோஸ்தே பெயர்கள். அது உண்மை. அதிலுள்ள ஜீவனோடு நமக்கு ஏதோவொன்று அவசியமாயுள்ளது. நீங்கள் ஒரு கல்லறை தோட்டத்தில் (ஞ்ழ்ஹஸ்ங்ஹ்ஹழ்க்) ஜீவனைப் பெற்றுக் கொள்வதில்லை, நிச்சயமாக நீங்கள் அங்கே ஜீவனைப் பெற்றுக் கொள்வதில்லை. இரவு முழுவதும் பகல் முழுவதும் உங்களால் அவர்களுக்குப் போதிக்க முடியும்; அங்கே அசைப்பதற்கு எதுவும் கிடையாது. 25கர்த்தர் வருகிறார் என்று நீங்கள் ஜனங்களிடம் கூறி, சுவிசேஷம் சொல்லும் போதும், நீங்கள் வெளியே தெருக்களில் சென்று சாட்சி கூறி, தேவனுக்காக ஏதோவொன்றை செய்யும் போதும் உங்களுடைய வேலை ஒருபோதும் முடிந்து விடாது. அவர்கள் மரித்திருக்கும் போது, உங்களால் எவ்வாறு அதைச் செய்ய முடியும்? ஜீவன் இருக்கும் ஏதோவொரு இடத்திற்கு நீங்கள் போயாக வேண்டும். ஒரு மனிதன் மறுபடியும் பிறந்தாக வேண்டும். சபையானது கிறிஸ்துவின் கொள்கைகளுக்கும், புதுப்பிறப்பிற்கும், பரிசுத்த ஆவியினிடத்திற்கும், முழு இரவு ஜெபக்கூட்டங்களுக்கும், தேவனுக்காக அக்கினியைப் பற்ற வைப்பதற்கும் திரும்பி வர வேண்டியுள்ளது. நாம் அதை செய்வோமாக. நீங்கள், 'நல்லது இப்பொழுது, நான் இதைச் சேர்ந்தவன், நான் அதைச்சேர்ந்தவன்' என்று கூறலாம். நீங்கள் ஒரு கிறிஸ்தவரா? 'ஆமாம், நான் இன்ன இன்னதைச் சேர்ந்தவன்.' அது உலகத்தினால் உண்டான ஓர் காரியம், அது எவ்வளவு நன்றாக இருக்குமோ அவ்வளவு நன்றாக அதனுடைய நிபந்தனையை நிறைவேற்றுகிறது. ஆனால் சகோதரர்களே, நான் இப்பொழுது ஒரு முக்கிய கருத்தைத் தெளிவாகக் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்; சற்று ஒரு நிமிடம் அமைதியாக உட்கார்ந்திருங்கள். உங்களில் சிலர் தோல்வி அடைந்த பிறகு ஆரம்ப நிலைக்கு திரும்பிச் சென்ற நல்ல ஸ்தாபன சகோதரர்களாக இருக்கிறீர்கள். அவமானம் அல்லது குழப்பத்தால் புழு போல் நெளிந்து, வீறிட்டு அழ வேண்டாம், ஏனெனில் நீங்கள் நல்ல சகோதரர்களாக இருக்கிறீர்கள் என்பதை நான் - நான் - நான் அறிவேன். சிறு பையன் உள்ளே வந்து தன்னுடைய சான்ட்விச்சை சாப்பிடுவதைப் போல, அவன் அதை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான், மேலும் ஒரு - ஒரு - ஒரு வயதான பூனை அங்கு வந்து அவனைச் சுற்றி அழுது கொண்டிருந்தது என்று அவன் கூறினான். அப்பூனையினுடைய வால் தரையில் கிடந்ததை அவன் கண்டான், எனவே அவன் ஒரு சிறு கனமான பொருளை (weight) அதன் மேல் கட்டி வைத்தான். அந்த வயதான பூனையோ சத்தமாக அழத் தொடங்கியது, அவனுடைய தாய் அவனிடம், 'மகனே, நீ அந்த பூனையின் வாலை இழுப்பதை நிறுத்தவில்லை என்றால், நான் வந்து உன்னுடைய தாடையில் அடிப்பேன்'என்று கூறினாள். அவனோ, 'அம்மா, நான் அதனுடைய வாலை இழுக்கவில்லை; நான் ஒரு சிறு கனமான பொருளை அதன் மேல் மாட்டி வைத்திருக்கிறேன்; அதுவோ அழுது கொண்டிருக்கிறான்; அதுதான் இழுத்து கொண்டிருக்கிறது' என்றான். அது சரியே. 26இப்பொழுது, கவனியுங்கள், ஓ, சுவிசேஷத்தின் மேல் வெறுமனே ஒரு சிறு கனமான பொருள்... நாம் என்ன செய்ய விரும்ப வேண்டும் என்றால் அப்பொருள் எதைச் சேர்ந்ததோ அந்த இடத்தில் அதை வைக்க வேண்டும். சபையானது அதனுடைய முதலாவது ஸ்தாபனத்தை உண்டாக்கின போது, அதன் மரணத்திற்குரிய தவற்றை அது செய்தது. நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள், 'நல்லது, அவர்கள் - அவர்கள் பிரச்சனைகளை உண்டாக்கத் தொடங்குகிறார்கள்' என்று கூறலாம். நல்லது, நீங்கள் தேவனை விசுவாசிக்கும் உண்மையான ஒரு விசுவாசியாக இருந்தால், அவர் அதை நடாதிருப்பாரானால், அது எப்படியும் எங்குமே ஒருபோதும் போகப் போவதில்லை என்று தேவன் நமக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அதைத் தனியே விட்டு விடுங்கள், அது அதனுடைய முடிவுக்கு வந்து விடும். 'என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.' அது முற்றிலும் சரியே. ஆனால் அவர்கள் வெறுமனே அதைச் செய்ய வேண்டியிருந்தது. 27இப்பொழுது, இந்த எல்லா ஆசீர்வாதங்களும் இஸ்ரவேலருக்கு வந்திருந்த பிறகும், அவர்கள் விரும்பினார்கள் (யாத்திராகமம் 19) - அவர்கள் ஒரு நியாயப்பிரணமாணத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்று விரும்பினார்கள் -அவர்கள் அதைக் கொண்டிருக்க விரும்பினார்கள் என்று பார்க்கிறோம். அவர்கள் தாங்களாகவே செய்யக்கூடிய ஏதோவொன்றைக் கொண்டிருக்க வேண்டுமென்று விரும்பினார்கள், அவர்கள் அனுசரிக்கக்கூடிய சில ஓய்வு நாட்களையோ, அல்லது அவர்கள் செய்யக்கூடிய சில சடங்குகளையோ, அல்லது - அல்லது அவர்கள் தாங்களாகவே செய்யக்கூடிய - அவர்களுக்குள்ளே ஏற்படுத்தப்பட்ட வேறு ஏதோவொன்றை விரும்பினார்கள். நீங்களாகவே உங்களை இரட்சிக்கக்கூடிய ஒரு காரியத்தை உங்களால் செய்யக்கூடுமானால், அங்கே ஒரு சிறு கிருபையும் இருக்காது. உங்களை இரட்சித்ததன் மூலமாக தேவன் உங்களுக்குக் காண்பித்திருக்கிற கிருபையைப் குறித்து நீங்கள் செய்வது தான் நியாயப்பிரமாணம். நான் அடிக்கடி கூறுவது போல, என் மனைவி என்னை விவாகரத்து செய்து விடுவாள் என்று நான் பயப்படுகிற காரணத்தால் நான் மற்ற பெண்களுடன் சுற்றித்திரிவதில்லை. நான் என் மனைவியை நேசிக்கிற காரணத்தால் நான் மற்ற பெண்களுடன் சுற்றித்திரிய மாட்டேன். அதுதான் அது. நீங்கள் சுற்றித்திரிய வேண்டும் என்று நான் நம்புவதில்லை. ஆனால் ஒரு நியாயப்பிரமாணம் என்பது என் விவாகப் பொருத்தனையைக் காத்துக் கொள்வதல்ல; அது என்னுடைய அன்பாக உள்ளது. நான் தேவனை நேசிக்கிற காணரத்தினால் அவ்வாறு செய்கிறேன். அவர் என்னை நரகத்துக்கு அனுப்பி விடுவாரோ என்று பயப்படுகிற காரணத்தினால் அல்ல; அவர் அதைச் செய்வார் என்று நம்புவதில்லை. ஆனால் நான் அவரை அதிகமாக நேசிக்கிற காரணத்தால், நான் அதைச் செய்ய விரும்ப மாட்டேன். நான் அதைச் செய்வதற்கு என்னிடத்தில் எதுவும் கிடையாது. நான் அவரை மிக அதிகமாக நேசிக்கிறேன்; எதற்காகவும் நான் அவரைப் புண்படுத்த மாட்டேன். நிச்சயமாகவே, நான் அவரை நேசிக்கிறேன். 28மனிதர்களும் ஸ்திரீகளும்: 'நல்லது, நான் உண்மையாகவே இன்றிரவு வீட்டிலேயே தங்கியிருந்து, இந்த சிறந்த ஆட்டத்தை காண்பேன்... ஆனால் நான் - நான் உங்களிடம் கூறுகிறேன்; நான் சபைக்கு போகாவிட்டால், நான் பின்வாங்கிப் போய் விட்டேன் என்று அவர்கள் நினைப்பார்களே' என்று சொல்லுகிற ஒரு நிலைக்கு வரும் போது. மேலும் நீங்கள் அங்கேயே உட்கார்ந்து எப்படியும் தூங்கத்தான் செய்வீர்கள். நீங்கள் வீட்டிலேயே தங்கியிருந்து, நீங்கள் இன்னும் சந்தோஷம் அனுபவிக்கும் ஏதோவொன்றைக் காண்பது நல்லது. ஆனால் கர்த்தரே உங்கள் சந்தோஷமாக மாறும் போது, கர்த்தர் உங்கள் ஆனந்தமாக இருக்கிறார், உங்களால் சபையை விட்டு வெளியே தங்கியிருக்க முடியாது, அப்பொழுது நீங்கள் ஏதோவொரு நிலையை அடைகிறீர்கள். சபையானது கர்த்தராகிய இயேசுவின் வருகைக்காக இன்றிரவு இருப்பதைக் காட்டிலும் 40 வருடங்களுக்கு முன்பு மேலான நிலையில் இருந்தது. அவர்கள் தேவனோடு நெருக்கமாக இருந்தனர். அவர்கள் தங்கள் மத்தியில் தேவனை இன்னும் அதிகமாகக் கொண்டிருந்தனர்; அவர்கள் இன்றிரவு பெற்றிருப்பதைக் காட்டிலும் பரிசுத்த ஆவியை தங்கள் மத்தியில் இன்னும் அதிகமாகக் கொண்டிருந்தனர். 29அதைச் செய்தது என்ன? நாம் நம்மைப் பிரித்துக் கொண்ட காரணத்தினால் தான், ஒவ்வொரு சிறு குழுவும் தங்களைத் தாங்களே பிரித்துக் கொண்டனர். அங்கே வெளியே போய் மற்றவர்களிடம் சொல்லுகிறார்கள் - மற்றவரிடம், 'நல்லது அது அங்கேயுள்ள பருந்துக் கூண்டு தான்; இதுவும் அங்கேயுள்ள அதுதான். அவர்களிடம் அது கிடையாது; நாங்கள் அதைப் பெற்றிருக்கிறோம்' என்று கூறுகின்றனர். உங்களுடைய சிறு வித்தியாசமான உபதேசங்களின் பேரிலும் மற்றவைகளின் பேரிலும் தேவன் அதிகமாகக் கவனம் செலுத்த மாட்டார் (சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய விரல்களைச் சொடுக்குகிறார் - ஆசிரியர்.). நம்மிடம் அன்பு இல்லாவிட்டால், எப்படியும் அது என்ன நன்மை செய்யும்? 'நான் சகல இரகசியங்களையும் அறிந்தாலும், தேவனைக் குறித்த சகல இரகசியங்களையும் அறிந்து கொண்டாலும்; மலைகளைப் பேர்க்கத்தக்கதாக விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், என்னுடைய... எனக்கு உண்டான யாவற்றையும் ஏழைகளுக்குக் கொடுத்தாலும், என் சரீரத்தை பலியாகச் சுட்டெரிப்பதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால், நான் ஒன்றுமில்லை' என்று 1 கொரிந்தியர் 13ம் அதிகாரத்தில் பவுல் கூறியுள்ளான். பாருங்கள், நீங்கள் வெளிப்படையாக விசுவாசம் இல்லாமல் உங்களை நீங்களே பிரித்துக்கொள்ளத் தொடங்கும்போது, நீங்கள் - நீங்கள் அதே காரியத்தை இழந்து விடுகிறீர்கள். நீங்கள் உங்களை பிரித்துக்கொள்ளத் தொடங்கும்போது... 'நாங்கள் இந்த குழுவில் இருக்கிறோம், நாங்கள் இதைச்சேர்ந்தவர்கள், எங்களுக்கு அவர்களோடு எந்த சம்பந்தமும் கிடையாது.' அவையெல்லாமே பரிசுத்த ஆவி தான். அந்தக் குழுக்கள் யாவுமே அந்நிய பாஷையில் பேசுகின்றன. அந்தக் குழுக்கள் ஒவ்வொன்றுமே நல்லதையும் கெட்டதையும் அவர்கள் மத்தியில் கொண்டிருக்கின்றன, முதலாவது குழு செய்த அதேவிதமாகவே, அவர்கள் எப்போதுமே அதைச் செய்வார்கள். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியை அருளுகிறார். எனவே யார் அவருக்குக் கீழ்ப்படிந்தார்கள்? அவரை விசுவாசித்து அதை ஏற்றுக் கொண்டவன் தான் அவருக்குக் கீழ்ப்படிந்தவன். 30பாருங்கள், ஆனால் நாமே அதைச் செய்வதற்கான ஏதோவொன்றை நாம் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. நாம் மெதோடிஸ்டுகளைப் போன்றோ, பிரஸ்பிடேரியன்களைப் போன்றோ, பாப்டிஸ்டுகளைப் போன்றோ, கத்தோலிக்கர்களைப் போன்றோ இருக்க விரும்புகிறோம். நாம் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க வேண்டியுள்ளது. நாம்... மார்டின் லூத்தர் தோல்வியடைந்ததும் அதே காரியத்தில் தான். மார்டின் லூத்தரல்ல, அவர் அதைத் தொடங்கவில்லை. ஜான் வெஸ்லியும் அதைத் தொடங்கவில்லை. அவர்களுக்குப் பிறகு வந்த குழுக்கள் தான் அதைத் தொடங்கின. அது சரியே. அவர்கள் அதை ஆரம்பிக்கவில்லை. இல்லை, ஐயா, அவர்கள் அதைத் தொடர்ந்து சுத்தமாக வைத்திருந்தனர். ஆனால் அவர்கள் போன போது, அவர்களுக்கு அடுத்து வந்தவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கத் தொடங்கினர். அதேவிதமாகத்தான் முற்காலத்தில் ஆதியிலேயும் இருந்தது. அது தேவன் என்றும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்றும் முதலாவது வந்த குழுவினர் தெளிவாக உணர்ந்து கொண்டவர்களாய், அவர்கள் அதனோடு தரித்திருந்தனர். ஆனால் இரண்டாவது வந்த குழுவினர், 'நல்லது, நாம் இதைச் செய்ய வேண்டும், நாம் அவர்களிடமிருந்து நம்மை நாமே பிரித்துக் கொள்ள வேண்டும், அவர்களுக்கு வெளிப்படையாக விசுவாசம் கிடையாது, நாம் அதைப் பெற்றிருக்கிறோம். நாம் இங்கே நம்முடைய குழுவை அமைத்து முன்னேறிச் செல்வோம்' என்று கூறுகின்றனர். அதன்பிறகு ஏதோவொரு தலைவரை உண்டாக்கிக் கொண்டு, இதோ போகிறார்கள், அவர்கள் இந்த ஒன்றுக்கு முன்னேறிச் செல்கிறார்கள், இதிலிருந்து இங்குள்ள இதற்கும், இங்குள்ள இதற்கும் முன்னேறிச் செல்கிறார்கள், பாருங்கள், இஸ்ரவேலர் செய்த அதேவிதமாகவே செய்கிறார்கள். அவர்கள் விரும்பினார்கள்... யாத்திராகமம் 19. அவர்கள் ஓர் நியாயப்பிரமாணத்தை விரும்பினார்கள். அவர்கள் தாங்களாகவே செய்யக்கூடிய ஏதோவொன்றை விரும்பினார்கள். அவர்கள் அதற்குள் செய்யும்படியாக ஏதோவொன்றைக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. அவர்கள் பெரிய ஆட்களைப் பெற்றுக்கொண்டு, அவர்கள் தாங்களாகவே செய்யக்கூடிய சில கிரியைகளை கொண்டிருக்க வேண்டியிருந்தது. 31தேவனே கிரியைகளை அருளுவார். நீங்கள் அப்படியே கிருபையில் நடப்பீர்களானால், பெண்கள் உதவி சங்கங்களோடும், சபைக்குள் சேர்க்கப்பட்டிருக்கிற இந்த எல்லா மற்ற அர்த்தமற்ற காரியங்களோடும் நீங்கள் இப்பொழுது இருக்கிறதைக் காட்டிலும் அதிகமான கிரியைகளைக் கொண்டிருப்பீர்கள். போதகருக்கு சம்பளம் கொடுக்க சூப் விருந்துகளை நடத்துகிறீர்கள், அப்படிப்பட்ட ஒரு காரியத்தை நீங்கள் வேதவாக்கியத்தில் எப்பொழுதாவது கண்டிருக்கிறீர்களா? போதகருக்கு தசமபாகம் செலுத்த வேண்டும். அவர் ஜனங்களுடைய தசமபாகத்தின் மூலம் ஜீவிக்க வேண்டும். ஆனால் அதைச் செய்வதற்காக வேறு ஏதோவொன்றை நாம் பெற்றிருக்க வேண்டியதாயுள்ளது. நாம் அதற்குள் நம்முடைய பாகத்தைக் கொண்டிருக்க வேண்டிதாயுள்ளது. அப்போது அவர்கள் அதைச் செய்ய முடியவில்லை என்றால், அதைச் செய்யக்கூடிய வேறொரு சங்கம் அங்கே உள்ளது, வேறொரு சங்கம் உள்ளது. தேவனுடைய வழியே சரி. தசமபாகங்களும் காணிக்கைகளும் லேவிக்குப் போகிறது, அவர் தான் ஊழியக்காரர் (minister). யாவரும் தங்களுடைய தசமபாகங்களை செலுத்துவார்களானால், நீங்கள் எந்த சூப் விருந்துகளையும் (soup suppers) கொண்டிருக்க வேண்டியதில்லை. பாருங்கள், நீங்கள் வேறு ஏதோவொன்றை ஏற்றுக்கொண்டு, தசமபாகங்களை விட்டு விட்டீர்கள். அது ஒரு பழைய ஏற்பாட்டு ஆதாரம் என்று கூறலாம். நீங்கள் அதை எனக்கு நிரூபிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அது உண்மை. தேவனுடைய வார்த்தையின் மூலமாக உங்களால் அதை நிரூபிக்க முடியாது; அது புதிய ஏற்பாட்டு ஒழுங்காகவும் கூட இருக்கிறது. தேவன் ஒரு ஒழுங்கைச் செய்கிறார், அதை ஒருபோதும் மாற்ற முடியாது. அது தொடர்ந்து அதேவிதமாக இருக்க வேண்டும். 32அந்த இரத்தத்தைப் போன்று. யாரோ ஒருவர், 'நல்லது, நாம் - நாம்... நான் உங்களுக்குக் கூறுகிறேன், நாம் - நாம் இதையும் அதையும் செய்கிறோம், நமக்கு மதக்கோட்பாடுகள் உண்டு, நாம் கிறிஸ்துவுக்காக ஜனங்களுக்குக் கல்வி புகட்ட முயற்சிக்கிறோம், கிறிஸ்துவுக்காக அவர்களுக்குப் பட்டமளிக்க முயற்சிக்கிறோம்' என்று கூறலாம். நாம் வெறுமனே காற்றோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்; அது நல்லதல்ல. கிறிஸ்துவுக்கு ஒரே வழி மாத்திரமே உண்டு; அதுதான் இரத்தத்தின் வழியாக. அதுதான் தொடக்கத்திலேயே தேவனுடைய திட்டமாக இருந்தது, அவர் மாற முடியாது. நாம் இரத்தத்தின் மூலமே கிறிஸ்துவின் வழியாக வருகிறோம். மேலும் இரத்தத்தை ஏற்றுக் கொண்ட பிற்பாடு, நாம்... இரத்தத்திலுள்ள இரசாயனம் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு எடுத்துப் போட்டு, நம்முடைய அக்கிரமங்களிலிருந்து நம்மை சுத்திகரிக்கிறது, அதன்பிறகு நாம் இரத்தத்திலுள்ள ஆவியைப் பெற்றுக் கொள்ளுகிறோம், அது நம்மேல் திரும்பவும் வந்து நம்மை தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாக்குகிற பரிசுத்த ஆவியாகும். அது சரியே. அப்போது நீங்கள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாயிருக்கிறீர்கள். அப்போது அவர்கள் ஆதியில் கொண்டிருந்த அதே அனுபவத்தை நீங்களும் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் அதே விதமான ஜீவியம் செய்து, அவர்கள் ஆதியில் செய்த அதேவிதமான கிரியைகளை செய்கிறீர்கள். ஆம், யாத்திராகமம் 19. 33பிறகு சீனாய் மலையிலிருந்து காதேசுக்கு 11 நாட்கள் பிரயாண தூரம் தான் இருக்கிறதாக வேதம் கூறுகிறது. பதினொன்று நாட்கள், அவர்கள் தங்கள் எழுதப்படாத ஆதாரமற்ற (indocument) வேதசாஸ்திரத்தையும், அவர்கள் செய்ய விரும்பிய தங்கள் கிரியைகளையும் பெற்ற பிற்பாடு, அவர்கள் எப்பொழுதும் செய்ததிலேயே மிகப்பெரிய தவறைச் செய்தனர். காதேசில் தான் அவர்கள் தேவனுடைய வார்த்தையை சந்தேகித்தனர். அவர்கள் ஆதாரமற்ற காரியங்களைப் பெற்றுக்கொண்ட நேரம் மட்டுமாக தேவனைப் பின்பற்றி வந்து கொண்டிருந்தார்கள். அதன்பிறகு அவர்கள் அதைச் செய்தபோது, தேவனுடைய வார்த்தையே சத்தியமாயுள்ளது என்பதை விசுவாசிப்பதற்குப் பதிலாக மரணத்திற்கேதுவான தங்கள் தவற்றைச் செய்தனர். அவர்கள் தங்கள் ஸ்தாபனங்களை ஏற்றுக் கொண்டனர், அந்த தேசத்துக்குப் போய் அதைச் சுற்றிப்பார்க்கும்படி வெவ்வேறான 12 கோத்திரங்கள் ஒவ்வொரு பிரதிநிதிகளை அனுப்பினார்கள். அவர்களில் இரண்டு பேர் அங்கு சென்று அத்தாட்சியைத் திரும்ப கொண்டு வந்தனர். அது ஒரு நல்ல தேசம் என்ற ஒரு அத்தாட்சியை அவர்கள் கொண்டு வந்தனர். யோசுவாவும் காலேபும் இந்த திராட்சக் குலையைக்கட்டி அநேகமாக தங்கள் தோளில் வைத்து கொண்டு வந்தனர். ஒவ்வொருவரும் ருசிபார்த்து விட்டு, 'உம் என்னே, அது மிகவும் நன்றாக உள்ளது, அற்புதமாயுள்ளது' என்றனர். ஆனால் அவர்கள் சபையோருக்கு முன்பாக திரும்பி வந்தபோது, அவர்கள், 'மிகப்பெரிய எதிர்ப்பு உள்ளது; நம்மால் அதை செய்யவே முடியாது. நாம் அதை முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை. ஏன், அங்கேயுள்ள அந்தக் கல்வி கற்ற பெரிய இராட்சதர்களின் பக்கத்திலும், அந்த மகத்தான பிஷப்புகளின் பக்கத்திலும், இறையியலில் டாக்டர் பட்டம் பெற்றவர்களின் பக்கத்திலும் நாங்கள் வெட்டுக்கிளிகளைப் போலக் காணப்பட்டோம். அங்கே ஒரு காரியம் மாத்திரமே உள்ளது, நம்முடைய இரண்டாம் - இரண்டாம் வகுப்பு பள்ளிப்படிப்பும், நம்முடைய கொஞ்சமான இலக்கணப் பள்ளிப்படிப்பும், டாக்டர், Ph.D., L- Double L.D., S.Q.U.T மற்றும் இந்த எல்லாவற்றோடும் எவ்வாறு ஒப்பிட முடியும்? இந்த மகத்தான பெரிய மனிதர்களோடு நாம் அதை எவ்வாறு ஒப்பிட முடியும்?' என்றார்கள். அது அதுவல்ல. தேவன் அத்தேசத்தை வாக்குத்தத்தம் பண்ணி விட்டார். கல்விக்கு அதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது. 34தேவன் பரிசுத்த ஆவியை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார், விருப்பமுள்ளவன் வரக்கடவன். காப்பியிலிருந்து கொட்டைகளைப் (எவ்வாறு) பிரித்தெடுப்பது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணும்? நீங்கள் உங்களுடைய அஆஇகளை சொல்ல முடியவில்லை என்றால், நீங்கள் ஒரு அனுபவத்தைப் பெற்றிருக்கும் காலம் வரை அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணும்? அலங்கார வாசலில் பேதுருவும் யாக்கோபும் அல்லது யோவானும் எதிர்பாராதவிதமாகக் கண்டுபிடிக்கப்பட்ட போது, அங்கே ஊனமுற்றிருந்த ஒரு மனிதனை அவர்கள் நடக்கப்பண்ணினார்கள், அவனை நடக்கப்பண்ணினார்கள், அவன் தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய் பிறந்திருந்தான், அவர்கள் அறியாமையுள்ளவர்கள் என்றும், கல்வி கல்லாதவர்கள் என்றும் வேதம் கூறுகிறது, இருப்பினும் அவர்கள் இயேசுவோடு இருந்தனர் என்று அவர்கள் அக்கறை செலுத்தினர். அதுதான் ஒரு உண்மையான பெந்தெகோஸ்தேயினனுடைய தகுதியாகும், நீங்கள் எவ்வளவு பட்டங்களைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதல்ல, நீங்கள் எவ்வளவு பட்டங்களை வைத்திருக்கிறீர்கள் என்பதல்ல, இளங்கலை பட்டம் (Bachelor of Art) பெற்றிருக்கிறீர்கள் என்றோ, நீங்கள் டட்.ஈ, கக.ஈ. பட்டங்களைப் பெற்றிருக்கிறீர்களா என்றோ, அல்லது அது என்னவாயிருந்தாலும் அதுவல்ல, அதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது. நீங்கள் இயேசு கிறிஸ்துவோடு இருந்திருக்கிறீர்கள் என்பதை ஜனங்கள் அறியட்டும். உங்களுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து கொழுந்து விட்டு எரியச் செய்யும்படியாக அதற்குப் பின்னால் ஏதோவொன்று உள்ளது என்பதை ஜனங்கள் அறியட்டும். அதுதான் பெந்தெகோஸ்தே. சிலசமயங்களில் சபையானது... பெற்றுக்கொள்ளும் விதத்தை நான் காண்கிறேன். நான் ஒரு பெந்தெகோஸ்தேயினனான ஆவதற்காக பாப்டிஸ்டு சபையை விட்டு விட்டேன். இவர்களிடம் ஏதோவொன்று உள்ளது என்று நான் அறிந்து கொண்ட காரணத்தால் நான் அதை விட்டு விட்டேன். ஆனால் நான் இங்கே வந்த போது, பாப்டிஸ்டுகள் எவ்வளவு இறுக்கமாக ஸ்தாபனமாயிருக்கிறார்களோ அவ்வளவு இறுக்கமாக இவர்களும் ஸ்தாபனமாயுள்ளனர். மேலும் மோசம்! அது உண்மை. 35இப்பொழுது, நாம் இதை விட்டு விட்டு சுற்றிலும் கவனித்துப் பார்ப்போம், பாருங்கள்: வேதசாஸ்திரத்திலிருந்து முற்றிலுமான அவிசுவாசத்திற்கு 11 நாட்கள் பிரயாணம், அவர்கள் அந்த நியாயப்பிரமாணத்தைப் பெற்ற நாட்கள் முதற்கொண்டு, இறுதியாக முற்றிலுமான அவிசுவாசத்திற்குள் போகும் வரையில். இதோ இரண்டு பேர் அத்தாட்சியைப் பெற்றவர்களாய் திரும்பி வருகின்றனர். நாற்பது வருடங்களுக்கு முன்பு, பெந்தெகோஸ்தே சபையானது அங்கே அதற்கப்பால் ஒரு தேசம் இருந்தது என்ற ஒரு நல்ல அத்தாட்சியைத் திரும்பக் கொண்டு வந்தது, ஏனென்றால் அந்நிய பாஷையில் பேசுகிற ஒரு அத்தாட்சி அவர்களிடம் இருந்தது. ஆனால் சகோதரனே, அது மட்டுமே அத்தாட்சியல்ல. அதில் நல்ல திராட்சப் பழங்கள் மட்டும் இருக்கவில்லை, ஆனால் பாலும் தேனும் ஓடுவதும் கூட இருந்தது; அதில் யாவுமே இருந்தன. ஆனால் அவர்களோ வெறுமனே திராட்சப்பழங்களோடு திருப்தியடைந்து விட்டு, 'அதாவது, அதில் உள்ளதெல்லாமே அவ்வளவு தான் என்று நினைக்கிறேன்' என்று கூறி விட்டனர். அதைத்தான் பெந்தெகோஸ்தே சபையானது செய்திருந்தது. அப்போஸ்தலர் 2:4, அப்போஸ்தலர் 2:4, அப்போஸ்தலர் 2:4, நீங்கள் அநேக திராட்சப் பழங்களைப் பெறும் மட்டுமாக, அது உண்மையான திராட்சப் பழங்களிலிருந்து வட அமெரிக்காவின் திராட்சப்பழங்களாகவோ (possum grapes), புளிப்பான திராட்சைப்பழங்களாக ஆகிவிடும் என்று நம்புகிறேன். அப்போஸ்தலர் 2:4, அப்போஸ்தலர் 2:4, நீங்கள் அநேகமாக ஒரு ஸ்தாபனத்தைச் சுற்றி இழுத்துக்கொள்ளப்படுகிற 2க்கு 4 பிரசங்கியாராக (அது உண்மை) ஆகும் அளவுக்கு. ஊ. ஒரு காரியம் என்னவெனில்: எனக்கு சம்பளம் கொடுக்க வேண்டாம். நான் வேதத்தைப் பிரசங்கிக்க சுயாதீனமாயிருக்கிறேன் (free). தேவன் என்னை ஜீவிக்கச் செய்யும் காலம் வரையில், தவறானதற்கு விரோதமான ஒரு சாட்சியாக நான் சரியாக அங்கேயே நிற்பேன். எனக்குக் கவலையில்லை... 36ஸ்தாபனங்களைக் குறித்து தவறேதும் கிடையாது; ஸ்தாபனங்கள் சரிதான். நியாயப்பிரமாணம் சரிதான்; அது அதனுடைய நோக்கத்தை நிறைவேற்றியது, அது உண்மை. ஆனால் நியாயப்பிரமாணமானது அவர்களுக்கு எதையுமே செய்யவில்லை; அது அவர்களுக்கு எந்த கிருபையையும் கொடுக்கவில்லை. நியாயப்பிரமாணம் அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குக் கொண்டு செல்லவில்லை. இல்லை, ஐயா. நியாயப்பிரமாணமானது முடிந்து போயிற்று. யோசுவா அவர்களை அங்கே கொண்டு சென்றான், நியாயப்பிரமாணத்தைக் கொடுத்த மோசே மரித்துப் போனான். அதேவிதமாக சபை ஸ்தாபனமானது மரிக்கப் போகிறது, கிருபையும் தேவனுடைய வல்லமையும் பரிசுத்த ஆவியும் சபையை எடுத்துக்கொள்ளப் படுதலுக்கும், சபையை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கும் திரும்ப கொண்டு செல்லப் போகிறது. ஆமாம். ஆம், அது அதனுடைய நோக்கத்தை நிறைவேற்றியது, ஆனால் தேவன் விரும்பின காரியம் அதுவல்ல. நியாயப்பிரமாணம் மரித்துப் போய், முடிந்து போக வேண்டியது. நியாயப்பிரமாணத்தைக் கொடுத்த மோசே மரித்துப் போனான். வாக்குத்தத்தத்தை விசுவாசித்த யோசுவா தான் தொடர்ந்து சென்றான். 37இப்பொழுது, கவனியுங்கள், அவர்கள் அனைவரும், 'ஓ, எங்களால் அதைச் செய்ய முடியாது' என்று கூறினர். அது என்ன செய்யும்? 'அது நம்முடைய சுதந்தரத்தை முழுவதும் பாழ்ப்படுத்தி விடும்.' மெதோடிஸ்டுகளாகிய நீங்கள் நினைத்ததும் அதுதான். பாப்டிஸ்டுகளாகிய நீங்கள் எல்லைக் கோடு வரையில் நடந்து சென்று அதை நோக்கிப் பார்த்து: 'ஓ, என்னால் அதைச் செய்ய முடியாது... நான் - நான் உங்களுக்குக் கூறுகிறேன், அவர்கள் அதைச் செய்வார்களானால், அவர்கள்... என்னுடைய மெதோடிஸ்டு ஸ்தாபனம் என்னை வெளியே தள்ளி விடும்.' 'என்னுடைய பாப்டிஸ்டு ஸ்தாபனம் என்னை வெளியே தள்ளிவிடும்.' 'என்னுடைய பிரஸ்பிடேரியன் ஸ்தாபனம் என்னை வெளியே தள்ளிவிடும்.' 'நான் என்னுடைய பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு அந்நிய பாஷைகளில் பேசப்போவதாக இருந்தாலோ, என்னுடைய சபையோரில் யாராவது ஒருவர் அந்நிய பாஷைகளில் பேசப் போவதாக இருந்தாலோ, அவர்களை நான் (சபையை விட்டு) வெளியே தள்ளவில்லை என்றால், ஏன், அவர்கள் என்னை ஸ்தாபனத்தை விட்டு வெளியே தள்ளி விடுவார்கள்' என்று நீங்கள் கூறின போதும், அதையே தான் எண்ணினீர்கள். அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். அதே காரியம் தான்... நான் அதனால் ஏற்பட்ட விவைவை உங்களிடம் கூறட்டும். எபிரெயர் 6ம் அதிகாரத்திற்கும், எபிரெயர் 10ம் அதிகாரத்திற்கும் திருப்புவோம், அந்த வசனங்களை ஒன்றாக வைத்து ஒப்பிட்டுப் பாருங்கள். 'ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும் (பாருங்கள், சத்தியத்தைக் குறித்த அறிவை அடைந்து, பின்பு மறுதலித்துப் போனவர்கள்) மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய்...' 38இதோ அது உள்ளது. ஒரு மனிதன் பிரசங்கியாக இருக்க வேண்டுமென்று அழைக்கப்பட்டான், ஆம், ஐயா. 'கர்த்தர் என்னை அழைத்தார்.' அது அருமை, சரி. அவன் வந்து தன்னுடைய பாவங்களுக்காக மனஸ்தாபப்படுகிறான்: நீதிமானாக்கப்பட்டு, ஒரு நல்ல விசுவாசியாக மாறுகிறான். இப்பொழுது, அவன் செய்கிற அடுத்த காரியமானது, அவன் இன்னும் புகைபிடிக்கிறான்; அவன் இன்னும் இச்சிக்கிறான்; உலகப்பிரகாரமான ஜனங்களை, உலகப்பிரகாரமான ஸ்திரீகளைப் பார்க்கிறான், மேலும் அவன்... அவன் தன் இருதயத்தில் (அவர்களைக் கண்டு) இச்சிக்கவும் மற்ற காரியங்களைச் செய்யவும் செய்கிறான். அது சரியல்லவென்று அவனுக்குத் தெரியும். அது அவனை ஒரு பிரசங்கியாக ஆக்குவதில்லை. எனவே அவன் சென்று அவனைப் பரிசுத்தமாக்கும்படியாக தேவனிடம் வேண்டுகிறான். அப்போது அவன் இரண்டாவது படிநிலையில் (step) இருக்கிறான். அந்த காரியம் அவனை விட்டு எடுக்கப்படுகிறது. இப்பொழுது, அவன் எல்லைக்கோட்டில் இருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் நோக்கிப் பார்க்கிறான். அவனால் அதற்கு மேலும் போக முடியாத நிலைக்கு வருகிறான்; அவன் யோர்தானைக் கடந்து போயாக வேண்டும்; அவ்வளவு தான், அல்லது பின்னிலையிலேயே நிலைத்திருக்க வேண்டும். புரிகிறதா? '(பரிசுத்த ஆவியைப்) பெற்றும், பிரகாசிப்பிக்கப்பட்டும், சத்தியத்தைக் குறித்த அறிவை அடைந்தும்.' கிறிஸ்துவே சத்தியமாக இருக்கிறார். நாம் எவ்வாறு கிறிஸ்துவுக்குள் வருகிறோம்? அமைப்பின் மூலமாகவா? கைகுலுக்குவதின் மூலமாகவா? ஸ்தாபனத்தின் மூலமாகவா? தண்ணீர் ஞானஸ்நானத்தின் மூலமாகவா? இல்லை, ஐயா. ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக நாமெல்லாரும் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம்: மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், லூதரன்கள், ஒருத்துவக்காரர்கள், இருத்துவக்காரர்கள், ஐந்துத்துவக்காரர்கள், நீங்கள் யாராக இருந்தாலும்; நாம் ஒரே ஆவியினாலே அந்த சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். 39ஆனால்... ஒருதரம் அறிவை பெற்றும், அவன் அங்கு வந்து, அதை நோக்கிப்பார்த்து, 'ஆமாம், ஓ, அது அற்புதமானது. ஆனால் நான் அதைப் பெற்றுக் கொண்டால், என்னுடைய ஸ்தாபனம் என்னை வெளியே தள்ளி விடும். என்னால் அதைச் செய்ய முடியாது, ஏனென்றால் அவர்களுக்கு அதில் விசுவாசம் கிடையாது. என் ஜனங்கள் அதைச் செய்யும்படி என்னால் அனுமதிக்க முடியாது. நான் அதை என்னுடைய சபையில் போதித்தால், அவர்கள் எதைக் கொண்டிருப்பார்கள்? மாவட்ட கண்காணிகள் ஒன்று கூடிவிடுவார்கள்; பெரிய மனிதர்கள் நடந்து வந்து, “நீ அதைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்தால், நீ அதை அனுமதித்தால், நீ ஸ்தாபனத்தை விட்டு வெளியே தான் போவாய். நீ இங்கே இன்ன இன்னாரைக் கொண்டிருப்பாயானால், நாங்கள் உன்னை ஐக்கியத்தை விட்டு நீக்கி விடுவோம்' என்று கூறும் அப்படிப்பட்டவர்களைத்தான் அவர்கள் கொண்டிருப்பார்கள்' என்று கூறுகிறான். ஓ, தேவனே, அவ்விதமான உபயோகமில்லாத (wishy washy) ஒரு பிரசங்கி கல்வாரிக்குத் திரும்பிச் செல்வதே அவனுக்கு அவசியமாயுள்ளது. அவனிடத்தில் ஏதோ தவறுள்ளது, அது தேவனுடைய வார்த்தை என்ற விசுவாசம் உங்களுக்கு இருக்கும் போது, எது சரி என்பதன் பேரில் நிலைத்து நிற்பதற்கு உண்மையான பரிசுத்த ஆவியானவரின் போதுமான கடிந்து கொள்ளுதல் (conviction) இருக்காது. அல்லேலூயா. ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயை கனம் பண்ணுவான், அவளோ கரிக்கட்டையைப் போன்று எவ்வளவு கறுப்பாக இருக்கலாமோ அவ்வளவு கறுப்பாக இருக்கலாம்; ஆனால் அவன் அந்த ஸ்திரீயை ஒரு ஸ்திரீயாகக் காண்கிறான்; ஒரு ஸ்திரீக்கு ஏற்றபடியான கௌரவத்திற்காக அவள் நிற்கிறாள். ஒரு உண்மையான மனிதன் அவளைப் பார்த்து தன்னுடைய தொப்பியைக் கழற்றி (take off) (அவளை கனம் பண்ணுவான்) (அது சரியே.), காரணம் என்னவென்றால் எது சரியென்ற நல்நடத்தைக்காக அவள் நிற்கிறாள். அது முற்றிலும் சரியே. அவளை முற்றிலுமாக அசட்டை செய்யும் அளவுக்கு, அவள் அவ்வளவு விகாரமாக தோற்றமளிக்கலாம்; இந்த ஹாலிவுட் இராணிகளில் (அல்லது அது என்னவாகவும் இருக்கலாம்), ஒருவளுக்கு கொடுக்கப்படும் கனத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கனத்தை அவள் கொண்டிருப்பாள், ஒருவன் உண்மையான மனிதனாக இருப்பதற்கேற்ற காரியத்தை பெற்றிருப்பான் என்றால். அது உண்மை. 40எனவே தேவனும் அதேவிதமாகத் தான் செய்கிறார், திடமான வேதாகம விசுவாசத்தில் நிலைத்து நின்று, 'எனக்கு அதை நிரூபித்துக் காட்டும்' என்று கூறி, அசையாமல் நிற்கும் ஒரு மனிதனை அவர் கண்டுபிடித்து, அவனுக்கு அவர் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தும்படியாக அவனிடத்தில் போதுமான நம்பிக்கையை அவரால் வைக்க முடியும் நேரத்தில் தேவனும் அவ்வாறே செய்கிறார். அது சரியே. அதன்பிறகு நீங்கள் தேவனுடைய வார்த்தையை எடுக்கிறீர்கள், அது எழுதப்பட்ட பிரகாரமாகவே ஒவ்வொரு வார்த்தையையும் எடுத்து அது எழுதப்பட்ட விதமாகவே அதைப் பிரசங்கிக்கிறீர்கள், (அப்பொழுது) தேவன் அதற்கு பின்னால் வந்து, அவர் நடப்பிப்பார் என்று சொல்லியிருக்கிற அடையாளங்களும் அற்புதங்களும் அதைப் பின்தொடரும்படி செய்து, அதை உறுதிப்படுத்துவதில் கடமைப்பட்டிருக்கிறார். ஒரு அத்தாட்சியோடு மட்டும் நிற்பதில்லை, அங்கே அநேக அத்தாட்சிகள் இருக்கின்றன. அங்கே வீடுகள் உள்ளன; அங்கே ஸ்தலங்கள் உள்ளன; அங்கே தோட்டங்களும், பாலும் தேனும், நல்ல ஆகாரங்களும், அநேக காரியங்களும், கன்மலைகளிலிருந்து பாய்கிற தண்ணீர்களும் உள்ளன. அங்கே யாவும் நன்றாக உள்ளன, வெறுமனே ஒரு திராட்சைக்குலை அல்ல. ஆனால் அங்கே தான் நின்று விடுகிறோம். 'தேவனுக்கு ஸ்தோத்திரம், அந்நிய பாஷையில் பேசும் அத்தாட்சியோடு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு விட்டேன்' (என்று கூறி விடுகிறோம்). அதெல்லாம் சரிதான், அது அங்கு போன யாரோ ஒருவரை காண்பிக்கிறது. ஆனால் இந்த எல்லைக்கோட்டிலேயே ஏன் நீங்கள் நிற்கிறீர்கள்? புரிகிறதா? 'பரிசுத்த ஆவியைப் பெற்றும், இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (பாருங்கள், மெதோடிஸ்டுகள் விழுந்து போன, பாப்டிஸ்டுகள் விழுந்து போன, பிரஸ்பிடேரியன்கள் விழுந்து போன அதே பழைய குழியில் அவர்கள் பின்னிட்டு விழுந்து போனார்கள்); தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால்.' நாம் லவோதிக்கேயா சபைக்காலத்தில், அவர் பெந்தெகோஸ்தே சபைக்கு வெளியே நின்று கொண்டு, திரும்பவும் உள்ளே வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் கண்டுகொண்டோம். 'அவரை அவமானப்படுத்துகிறபடியால்.' ஓ தேவனே, இரக்கமாயிரும். சகோதரனே. நீங்கள் இக்காரியங்களின் பேரில் என்னோடு இணங்காமலிருந்தால், வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். நாம் ஜீவித்துக் கொண்டிருக்கும் நாளைக் கண்டுகொள்ளுங்கள்; அது எங்கேயுள்ளது என்று காணுங்கள். 41நான் ஒரு அறிவுரையைப் பெற்றுக் கொண்டேன்; நான் அதை இப்பொழுது வாசிக்க மாட்டேன், ஆனால் இதோ அது இருக்கிறது. டீமாஸ் சகரியான் அவர்கள் அதை எழுதி வைத்துள்ளார்கள். ஒரு மனிதர், ஒரு ஹாலிவுட் மனிதர் என்னுடன் கரங்களைக் குலுக்குவதற்கு மேலே வந்து, பிரெஞ்சு பாஷையில் பேசத் தொடங்கினார், மேலும் ஒரு பிரெஞ்சு பெண்மணியோடு வியாக்கியானம் கொடுத்த ஐக்கிய நாடுகளின் மொழிபெயர்ப்பாளரும் அங்கிருந்தார். 'நீ கடினமான பாதையைத் தெரிந்து கொண்டாய், ஆனால் அது என்னுடைய வழியாய் இருக்கிறது; ஜனங்கள் உன்னைக் குறித்து கூறுவதைக் குறித்து நீ பயப்பட வேண்டாம், நான் உன்னோடு இருக்கிறேன், நான் உன்னோடு இருப்பேன், மிகவும் அபரிமிதமாக அதை சம்பவிக்கப் பண்ணுவேன்'என்று அதில் எழுதப்பட்டிருந்தது. எழுதப்பட்டு கையொப்பமிடப்பட்டுள்ள அதை நான் இங்கே வைத்திருக்கிறேன்... மேலும் - மேலும் சகோதரன் டீமாஸ் சகரியான் அவர்கள் அதை ஒரு நோட்டரி பப்ளிக்கின் மூலமாக ஆவணமாக தயாரித்து வைத்திருக்கிறார். ஒரு பாப்டிஸ்டாக இருந்த அம்மனிதன் அதைக் குறித்து எதையுமே அறிந்திருக்கவில்லை, ஆனால் நான் அங்கே நின்று கொண்டு பெந்தெகோஸ்தே ஜனங்களுடைய கண்களைக் குருடாக்கியிருக்கிற அந்த காரியத்தை கடிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன்: சபைக்குள்ளிருக்கிற ஹாலிவுட்டையும், ஹாலிவுட் சுவிசேஷத்தையும் கடிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன். 42ஒரு நபர் சில கடித உறைகளை விநியோகித்து, 'இதில் இருபத்தைந்து டாலர்கள் பணத்தை வைத்துக்கொடுங்கள். நான் உங்களுக்காக ஜெபிப்பேன்' என்று உங்களிடம் கூறி விட்டு, நீங்கள் அவ்வாறு செய்யாதிருந்தால், உங்கள் விளைச்சல்கள் பாழாய்ப் போய்விடும் என்று கூறுகிறார்... அதிகமாக காணிக்கை கொடுக்கப்படுகிறது. பெந்தெகோஸ்தேயினர் பணத்திற்கு பிறகே போக நேரிட்டது எப்போது? ஏன், சகோதரனே, வேதாகம நாட்களில், அவர்கள் தாங்கள் கொண்டிருந்தவைகளை விற்று, அதை சபையோருக்கு பகிர்ந்தளித்தனர். இன்றோ வேகமாக செல்கிற காடிலாக் கார்களைக் கொண்டிருக்க வேண்டியதாயுள்ளது அல்லது நீங்கள் ஆவிக்குரியவர்களல்ல. அது ஒரு பாவமாகும்; அது ஒரு அவமானம். அங்கே அவர்களிடம் இருப்பதைக் காட்டிலும் ஒரு சிறந்த சபையை நம்மால் கட்ட முடியவில்லை என்றால் - மெதோடிஸ்டுகளைக் காட்டிலும் பிரஸ்பிடேரியன்களால் ஒரு சிறந்த சபையை கட்ட முடியுமா என்று காணவே நாம் முயற்சிக்கிறோம், அப்படியிருந்தும் இயேசு சீக்கிரமாய் வருகிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் உங்கள் முகத்துக்கு முன்பாகவே நகைக்கிறார்கள். அது உண்மை. இன்று நமக்கு தேவை என்னவென்றால், ஒரு சிறந்த சபையல்ல; நீங்கள் ஒரு மிஷன் ஊழியத்தைக் கொண்டிருந்தாலும், உங்களுக்கு நன்றாகவே இருக்கும். சமரசம் செய்வதைக் காட்டிலும், உங்கள் தலை சாய்க்க ஒரு இடமும் இல்லாமல், இங்கேயுள்ள இந்த ஓக் அல்லது பைன் மரங்களில் ஒன்றின் கீழ் நின்று கொண்டு, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல் உங்களுக்கு மேலானதாக இருக்கும். 43நாம் ஒரு பயங்கரமான நிலையில் இருக்கிறோம், சபையே அவ்வாறுள்ளது. அதை செய்தது என்ன? நாம் நம்மையே பிரித்துக் கொண்ட காரணத்தினால் தான் அவ்வாறானது. ஒருவர் இதை விட்டும், ஒருவர் அதை விட்டும் பிரிந்து போய் விட்டனர்; நாம் பெரிய ஸ்தாபன சிந்தையைக் கொண்டும் மற்றும் எல்லாமாகவும் ஆகி விட்டோம். அவர்கள் அப்போது என்ன செய்தார்களோ அது முன்னடையாளமாக உள்ளது, நீங்களும் சரியாக அவ்வாறே ஆனீர்கள் என்பதை அது காட்டுகிறது. நாம் தொடர்ந்து சென்று ஆயிர வருட அரசாட்சியில் இருந்திருப்போம். இயேசு கிறிஸ்துவின் வருகை ஏற்கனவே காலதாமதமாகி விட்டது (past due) என்று நான் விசுவாசிக்கிறேன். வேதத்தைக் கொண்டு என்னால் அதை நிரூபிக்க முடியும். வேதம் சொல்லுகிறது... இயேசு கிறிஸ்து தாமே, 'நோவாவின் நாட்களில் எப்படி நடந்ததோ அப்படியே...' என்றார். தேவன் யாரும் கெட்டுப்போக விரும்பாமல் நீடிய பொறுமையாய் இருந்தார், தேவன் நீடிய பொறுமையாய் இருந்து, காத்திருந்து, காத்திருந்து, கோபத்தை நிறுத்தி வைத்துக் கொண்டிருந்தார், வேறு யாராவது (வருவார்களா) என்று பார்த்துக் கொண்டு, காத்திருந்து, காத்திருந்து, காத்திருந்து, காத்துக் கொண்டேயிருந்தார். 'நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.' தேவன் நீடிய பொறுமையுள்ளவராய், தம்முடைய சபை குறிப்பிட்ட நிலையை அடையும்படியாக காத்துக் கொண்டிருக்கிறார். அது என்ன? அது என்ன? அது குறிப்பிட்ட நிலையை அடைவதற்குப் பதிலாக, நாம் எல்லா நேரமும் தூரமாக விலகிப் போய்க் கொண்டேயிருக்கிறோம். நாம் ஆயிர வருட அரசாட்சியில் இருந்திருக்க வேண்டும்; நாம் தேவனுக்காக ஏதோவொன்றை செய்து கொண்டிருக்க வேண்டும். நாம் 40 வருடங்களுக்கு முந்தைய நிலைக்கு போயாக வேண்டும். ஆனால், நாம் அவ்வாறில்லை, அவர்கள் செய்த அதே தவற்றையே நாமும் செய்திருக்கிறோம். அவர்கள் 40 வருடங்கள் காதேசுக்கு வந்தனர், அவர்களுடைய அவிசுவாசத்தின் காரணமாக தேவன் அவர்களைத் திரும்பிப் போகப் பண்ணினார். அது என்னவாயிருந்தது? ஸ்தாபனம். ஜனங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்... அதை சம்பவிக்கப் பண்ணினது என்ன? இப்பொழுது, 'எந்த ஸ்தாபனம்?' என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் எல்லாருமே உங்களை நீங்களே பிரித்துக் கொண்டீர்கள். நீங்கள், 'நான் ஒரு-ஒரு சபையாக இருந்து, ஆவிக்குரியவனாகவும் இருக்க முடிகிறதே?' என்று கூறலாம். நிச்சயமாக. 'நான் ஒரு ஒருத்துவக்காரனாயிருந்தும் ஆவிக்குரியவனாயிருக்க முடிகிறதே?' நிச்சயமாக. நீங்கள் ஒரு கத்தோலிக்கனாயிருந்தாலும் தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுக்கிறார். நீங்கள் என்னவாயிருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் பரிசுத்த ஆவிக்குள் பிறப்பதன் மூலமாக ஒரு தேவனுடைய பிள்ளையாக இருக்கும் காலம் வரை, நீங்கள் ஒரு தேவ பிள்ளை தான். அப்படியானால் அவ்வாறு செய்ய வேண்டாம்... 44கொஞ்சம் போர்வையை மற்ற சகோதரனும் கூட போர்த்துக் கொள்கிறான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். போர்வையானது உங்கள் இருவருக்குமே போதுமான அளவு பெரிதாக உள்ளது. தேவன் அதை அவ்விதமாகவே செய்துள்ளார். அதெல்லாவற்றையும் சட்டென இழுத்து வைத்து, அதைக்கொண்டு உங்களையே போர்த்துக்கொண்டு, 'மரிக்கும் அளவுக்கு குளிராயுள்ளதே' என்று கூறாதீர்கள். உங்களுக்கு குளிராயிருந்தால், நான் உங்களுக்கு உதவி செய்யட்டும். நீங்கள் விழுந்து போன ஒரு சகோதரனுக்கு உதவி செய்ய விரும்பாத ஒரு நிலைக்கு வரும் போது... அவன் விழுந்து கிடக்கிறான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஏதாவது ஒரு வழியில் நீங்கள் அவனுக்கு உதவலாமே; இடைவெளியில் நில்லுங்கள். அன்போடு கூடிய விதத்தில் இடைவெளியில் நில்லுங்கள் (gap up). தேவனுடைய சபையை ஒன்று சேர்க்கக்கூடிய சிமென்ட் அதுதான், சகோதரர்கள் மத்தியிலுள்ள பரிசுத்தமான தேவ அன்பு தான் அந்த சிமென்டாக உள்ளது. 'இதனாலே நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லா மனுஷரும் அறிந்து கொள்வார்கள்' நீங்கள் அசெம்பிளி சபையை சேர்ந்து கொள்ளும் போதா? 'நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லா மனுஷரும் அறிந்து கொள்வார்கள், எப்போது...' நீங்கள் ஒருத்துவக்காரராய் இருக்கும் காரணத்தினாலா, நீங்கள் சர்ச் ஆஃப் காட் சபையை சேர்ந்தவர்களாய் இருக்கும் காரணத்தினாலா? 'நீங்கள் ஒருவர்பேரில் ஒருவர் அன்பாயிருந்தால், நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லா மனுஷரும் அறிந்து கொள்வார்கள்.' அதாவது அவர்கள் அதை அறியும்போது; அதாவது நாம் கிறிஸ்தவர்களென்று உலகமானது அறியும் போது. அதாவது, நாம் ஒருவர் பேரில் மற்றவர் அன்பாயிருந்து, நாம் சகோதர சகோதரிகளாய் இருக்கிறோம் என்பதை உலகமானது அறிந்து கொள்ளும் போது. அதுதான் கிறிஸ்தவத்தின் முத்திரையாயுள்ளது, அதாவது ஒருவர் பேரில் மற்றவர் அன்பாயிருப்பது தான் கிறிஸ்தவத்தின் முத்திரை. நாம் அந்நிலையை அடையும்போது, தேவன் நம் மத்தியில் கிரியை செய்யத் தொடங்கி, பாலையும் தேனையும், மகத்தான காரியங்களையும் நம்மிடம் கொண்டு வருவார். ஏன், நாம் தேவனுடைய திட்டத்தை கண்டறிந்து அதற்குள் போகும் போது, அதுவே நன்றாயுள்ளது. 45இப்பொழுது, நாம் அதை அறிந்து கொள்கிறோம்... எல்லைக்கோட்டு விசுவாசிகளாகிய அவர்கள் என்ன செய்தனர்? 'ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரிசுத்த ஆவயைப் பெற்றும், இனிவரும் நல்ல உலகத்தை ருசிபார்த்தும், சத்தியத்தைக் குறித்த அறிவை அடைந்தும் - கூடாத காரியம்,' அவர்கள் சத்தியத்தைக் குறித்த அறிவை அடைந்து, அதிலே நடந்து, அத்தேசத்துக்குள் நோக்கிப் பார்த்து, 'நல்லது, என்னால் அதை சற்றும் செய்ய முடியாது' என்று கூறிவிட்டு திரும்பிப் போய் விடுகிறார்கள். அவ்வாறு தான் சரியாக எல்லைக்கோட்டு விசுவாசிகள் அந்நாளிலும் செய்தனர். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் ஒவ்வொருவரும் வனாந்தரத்திலேயே அழிந்து போயினர். நாம் இன்னார் இன்னாராய் (மெதொடிஸ்டுகளுக்கு அதனோடு செய்ய எதுவும் கிடையாது, பாப்டிஸ்டுகளுக்கு அதனோடு செய்ய எதுவும் கிடையாது, ஒருத்துவக்காரருக்கு அதனோடு செய்ய எதுவும் கிடையாது, அசெம்பிளிஸ் சபையோருக்கு அதனோடு செய்ய எதுவும் கிடையாது.) இருப்பதன் காரணத்தினால் தேவன் நமக்குக் கடமைப்பட்டிருக்கிறார் என்று நாம் எண்ணும்போது, நாம் தவறாய் இருக்கிறோம். (ஒலிநாடாவில் காலியிடம் -ஆசிரியர்.) 46உங்கள் ஸ்தாபனத்தைக் கவனிக்க வேண்டாம்; ஆவியானவர் வழிநடத்துகிற விதத்தைக் கவனியுங்கள். ஆவியானவர் உங்களை வழிநடத்துவாரானால், அவர் வார்த்தைக்கு முரண்பாடானதற்கு உங்களை ஒருபோதும் வழிநடத்த மாட்டார். அவர் தாமே ஒருபோதும் வழக்கத்திற்கு மாறாக தவறாக நடந்து கொள்ள மாட்டார், அவர் எக்காலத்திலும் வார்த்தையிலேயே தரித்திருக்கிறார். தேவன் என்ன செய்தார்? அவர்களை 40 வருடங்களாக அங்கே வனாந்தரத்திலேயே விட்டு விட்டார். அதைத்தான் சரியாக அவர் பெந்தெகோஸ்தேயினருக்கும் செய்தார். நாம் அந்நிய பாஷையில் பேசுதலை ஆரம்ப அடையாளமாகக் (initial evidence) கொண்டிருந்தோம். ஓ, 'தெய்வீக சுகமளித்தல் எங்களிடம் உண்டு' என்றனர். அவர்களும் கூட அதைச் செய்தனர். அவர்களிடம் வெண்கல சர்ப்பம் ஒன்று இருந்தது; அடிக்கப்பட்ட கன்மலையும் அவர்களிடம் இருந்தது. ஓ, நிச்சயமாக. 'ஓ, சகோதரன் பிரன்ஹாமே, நான் உம்மிடம் கூறட்டும், நாங்கள் ஒருத்துவக்காரர்கள், நாங்கள் அசெம்பிளிஸ் சபையைச் சேர்ந்தவர்கள், நாங்கள் இன்னார் இன்னார், நாங்கள் சத்தமிட்டிருக்கிறோம்; நாங்கள் ஆவியில் நடனமாடியிருக்கிறோம்.' ஓ நிச்சயமாக, அவர்களும் கூட அதைச் செய்தனர். ஆனால் அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வெளியே 40 வருடங்கள் தங்கியிருந்தனர். அவர்கள் என்ன செய்தனர் என்று நீங்கள் எப்பொழுதாவது எண்ணிப்பார்த்ததுண்டா? ஓ, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார், இல்லையா? அவர் அவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளார். அவர்கள் நல்ல பயிர்களை வளர்த்தனர்; அவர்களுக்கு நல்ல குடும்பங்கள் இருந்தன; அவர்கள் அங்கேயே தங்கியிருந்தனர்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, செழிப்படைந்திருந்தனர். ஏன், பெந்தெகோஸ்தேகாரர்களாகிய நம்மில் சிலரும்... இளம் வாலிபனே, அவர்களில் சிலர், ஏன், நாம் 10 இலட்சம் டாலர்கள் ஐசுவரியமுள்ளவர்களாயிருக்கிறோம், அவர்களில் அநேகர் அவ்வாறு இருக்கின்றனர். நிச்சயமாக, நாம்... தேவன் நம்மை விருத்தியடையச் செய்துள்ளார். 47சமீபத்தில் நான் ஒரு - ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தேன். இப்பொழுது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் சகோதரன் ஃபிரட் சாத்மன் அவர்கள் அக்கூட்டத்தில் இருந்தார்கள், நான் ஜமாய்க்காவிலுள்ள கிங்ஸ்டனில் ஒரு இரவு பேசிக் கொண்டிருந்த போது, நான் முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்களோடு இருந்தேன், வியாபார புருஷர்களின் இந்த ஸ்தாபனம் முழுவதிலும் உள்ள ஜனங்களுக்குக் காண்பிக்கும் படியாக என்னுடைய செய்தியைக் கொண்டு வர நான் வழக்கமாக முயற்சிக்கும் நேரத்தில், அதே மனிதர்கள்... ஏன், அப்போது அந்த சபையினுடைய வியாபார புருஷர்கள் அக்கூட்டத்தை விட்டு வெளியே போய் விடுகிறார்கள், அது... கொண்டு வரும். நல்லது, மேய்ப்பர் வரவில்லை என்றால், அது அவரை ஒருவிதத்தில் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விடும். ஆகையால் என் சகோதரர்களே, என் சகோதரர்களே, நான் காண்கிற ஜனங்களுக்கு கர்த்தருடைய செய்தியைக் கொண்டு வரும்படி முயற்சிப்பதற்கு அவ்விதமாகத்தான் அங்கே காரியங்களை என்னால் செய்ய முடிகிறது. அதன்பிறகு என்ன சம்பவித்தது? நான் - நான் அதற்கு விரோதமாக ஒருவிதத்தில் கடினமாகப் பிரசங்கம் பண்ணினேன். இந்த குறிப்பிட்ட தலைவர் எழுந்து நின்று, 'சகோதரன் பிரன்ஹாமே, நான் உங்களிடம் கூறுகிறேன்...' என்றார். நான், 'வியாபார புருஷர்களாகிய உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் அந்த வியாபார கூட்டத்தில் இன்றிரவு இருந்து; நீங்கள் யாவரும் அந்த ஜமாய்க்கா வாசிகளிடம், “எனக்கு அந்த மூலையில் சிறு வியாபாரம் தான் இருந்தது; அது விருத்தியடையவேயில்லை. அல்லேலூயா, நான் பரிசுத்த ஆவியைப் பெற்று விட்டேன். தேவன் எனக்கு நிறைய கத்தோலிக்ஸ் அல்லது வித்தியாச...., அல்லது காடிலாக் வாடகை கார்களையும், மகத்தான பெரிய கார்களையும், மகத்தான பெரிய இதையும் கொடுத்திருக்கிறார், அவர் எனக்கு ஒரு புதிய வீட்டைக் கொடுத்தார்; அவர் எனக்கு இவை அனைத்தையும் கொடுத்திருக்கிறார்' என்று சாட்சி கூறினீர்கள். அந்த மனிதர்களிடமும் அந்த காரியங்கள் உண்டு. அவர்கள் அதற்கு செவிகொடுக்க விரும்பமாட்டார்கள். அது பெந்தெகோஸ்தேவுக்கு முரண்பாடானது. பெந்தெகோஸ்தேயினர், அவர்கள் தாங்கள் கொண்டிருந்த யாவற்றையும் விற்று, ஏழைகளுக்கு அதை பகிர்ந்து கொடுத்து விட்டு, எதுவுமின்றி வெளியே போயினர். அவர்கள் இயேசுவை மாத்திரமே உடன் கொண்டு சென்றனர்'என்றேன். அது சரியே. 48அவ்விரவில் இந்த தலைவர் எழுந்து நின்று, 'ஆனால் சகோதரன் பிரன்ஹாமே, நான் இப்பொழுது ஒரு காரியத்தை உம்மிடம் கூற விரும்புகிறேன். அது பெந்தெகோஸ்தேவின் போது நடந்ததாகும், அந்த ஜனக்கூட்டத்தார் தங்களுடைய வீடுகளை விற்று, ஏழைகளுக்குக் கொடுத்த போது, அவர்கள் அவ்வாறு செய்த போது, தங்களுடைய மிகப்பெரிய தவற்றைச் செய்தனர்'என்றார். உங்களுடைய வீடுகளை விற்பதற்கு நான் யாரிடமும் கேட்கவில்லை; நான் வெறுமனே நீங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள் என்று தான் உங்களைக் கேட்கிறேன். ஆனால் நான் உங்களிடம் கூறிக் கொண்டிருக்கிறேன்... நான் அப்படியே வேதவாக்கியங்களை மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கிறேன். அதன்பிறகு அவர், 'நல்லது...' என்றார். நான், 'நல்லது, சகோதரனே, அவர்கள் பரிசுத்த அவியினால் வழிநடத்தப்பட்டார்கள்' என்றேன். 'நல்லது, அவர்கள் தவறு செய்தனர்' என்றார். நான், 'பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனை தவறு செய்யும்படி வழிநடத்துவார் என்று என்னிடம் கூறுகிறீரா?' என்று கேட்டேன். அவர் 'அது அதை நிரூபிக்கிறது. வேதவாக்கியங்களின் மூலம் என்னால் அதை உங்களுக்கு நிரூபிக்க முடியும்' என்றார். நான், 'காலூன்றி எழுந்து நின்று அதை செய்யுங்கள்' என்றேன். நான் 'இப்பொழுது... ' என்றேன். அவர், 'இங்கே நீங்கள் இருக்கிறீர்கள்: சபைக்கு விரோதமாக உபத்திரவம் எழுந்தவுடனே அந்த ஜனங்கள் போக எவ்விடமும் இல்லாதிருந்ததே. அவர்கள் தங்கள் வீடுகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விட்டனர். அவர்கள் சற்றேறக்குறைய அலைந்து திரிந்தனர்.' என்றார். நான், 'அவர்கள் அதைச் செய்ய வேண்டும் என்று தான் முற்றிலுமாக தேவன் விரும்பினார். சகல தேசங்கள் முழுவதும் செய்தி பரவினது. அவர்களுக்கு ஒரு வீடு இருந்திருந்தால், அவர்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்றிருப்பார்கள். ஆனால் அவர்கள் போக எந்த இடமும் இல்லாதிருந்தது; ஆகையால், அவர்கள் அலைந்து திரிந்து, செய்தியைப் பரவப்பண்ணினார்கள். அவர்கள் அதைத்தான் செய்ய வேண்டும் என்று முற்றிலுமாக தேவன் விரும்பினார்' என்றேன். ஜனங்கள் இனிமேலும் அப்பாதையை எடுத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள். ஓ, இல்லை, ஐயா. அமெரிக்கர்களாகிய நாம் அனைவரும் இறுகுகளால் முடிக்கொண்டு, கொழுத்திருக்கிறோம், நாம் - நாம் வெறுமனே நெருக்கமாகப் படுத்துக் கொண்டிருக்கிறோம், நாம் அமர்ந்திருந்து, அதன் மேல் கவனம் செலுத்த கூட மாட்டோம். நாம் அப்படியே எழுந்து, வீட்டிற்குப் போய் விடுகிறோம். நிச்சயமாக, அது சரியே. அவர்கள் அதை விரும்புவதில்லை. 49அதைக் குறித்த காரியம் என்னவெனில், கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியானவர் யாரை முத்திரையிடப்போகிறார் என்று உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? வேதாகமம் என்ன கூறுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? 'பட்டணத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டழுகிற (மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு)' என்று எசேக்கியேல் 9ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது... ஜனங்களாகிய உங்களில் சிலரிடம் நான் கேட்க விரும்புகிறேன். இந்தப்பட்டணத்திலோ அல்லது நீங்கள் புறப்பட்டு வந்திருக்கின்ற பட்டணத்தைச் சேர்ந்த ஏதாவது மனிதர்களாக நீங்கள் இருந்து, அப்பட்டணத்தினுடைய அருவருப்புகளுக்காக இரவும் பகலும் பெருமூச்சு விட்டழுகிற எத்தனை பேர் இன்றிரவு உங்களுடைய விரல்களை மேலே உயர்த்த முடியும்? உங்கள் கரங்களை உயர்த்தி, 'என் பட்டணத்தினுடைய 5 நபர்களை என்னால் சுட்டிக் காண்பிக்க முடியும். இரண்டு பேரை என்னால் சுட்டிக் காட்ட முடியும், அல்லது ஒரு நபரை என்னால் சுட்டிக் காட்ட முடியும்' என்று என்னிடம் கூறுங்கள். உங்களால் முடியாவிட்டால், உங்கள் கரங்களைக் கீழே போடுங்கள். ஒரு கரமும் உயர்த்தப்படவில்லை. அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். 'நோவாவின் நாட்களில் எப்படி நடந்ததோ அப்படியே மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்.' நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று புரிகிறதா? நாம் வைராக்கியத்தை இழந்து விட்டோம். பெந்தெகோஸ்தே சபையானது அதனுடைய மூல நிலைக்கு திரும்பி வர வேண்டியதாய் உள்ளது. 50நாம் என்ன செய்துள்ளோம்? நாம் கொழுத்து மயிரினால் போர்த்தப்பட்டு, உட்கார்ந்திருக்கிறோம், அது போகட்டும், அவர்கள் உலகத்தைப் போன்று உடையுடுத்திக் கொண்டு, உலகத்தைப் போன்று நடந்து கொண்டு, உலப்பிரகாரமான கேளிக்கைகளுக்குப் போய், உலகம் செய்கிற காரியங்களைச் செய்து, நம்முடைய அமைப்புகளையும் ஸ்தாபனங்களையும் கொண்டிருந்து, நம்முடைய சபைக் கட்டிடம் மற்றும் யாவற்றிலும் அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு, பிரசங்கம் பண்ணுகிறோம்... 'ஓ, ஆம், அல்லேலூயா.' டேவிட் டுப்ளஸிஸ் அவர்கள் ஒருமுறை, 'அது பேரப்பிள்ளைகள்; அது தேவனுடைய குமாரர்கள் அல்ல. தேவனுக்கு எந்த பேரப்பிள்ளைகளும் கிடையாது' என்று கூறினது போல. தேவன் ஒரு தாத்தா அல்ல; அவர் பிதாவாயிருக்கிறார். சரி. நாம் என்ன செய்கிறோம்? நாம் நம்முடைய பிள்ளைகளைக் கொண்டு வந்து, அவர்களை பெயர்ப்பட்டியலில் சேர்த்துக் கொள்கிறோம். அங்கே வெளியே இருக்கும் பாவி பெந்தெகோஸ்தே சபையைச் சேர்ந்து கொள்கிறான், நாமோ, 'அது அற்புதம் அல்லவா, அவன் பெந்தெகோஸ்தேயினனாக இருக்க வந்திருக்கிறானே' என்று கூறுகிறோம்: ஒரு பேரப்பிள்ளை. ஒரு உண்மையான தேவனுடைய குமாரன் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறான். அவன் கவர்ச்சிகரமான பேச்சுத்திறனால் கவர்ந்திழுக்க மாட்டான். அவன் கிறிஸ்துவையும் அவருடைய சிலுவைமரணத்தையும் தவிர வேறு எதையும் அறியாதவனாக அங்கே நிற்கிறான். தேவனைத்தவிர வேறு எதுவும் அவனைப் பற்றிக் கொள்வதில்லை. அவன் ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறான். வேறு எதுவும் அவனைத் தொல்லைப்படுத்துவதில்லை. ஆவியானவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் அவன் அவரைப் பின்பற்றுகிறான். எசேக்கியேல் புஸ்தகத்திலுள்ள ஜீவனுள்ள சிருஷ்டிகளைப் போன்று, சக்கரங்கள் எங்கே போனதோ, ஏன், அங்கே அந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளும் அதை பின்தொடர்ந்தன; இப்பொழுது, கவனியுங்கள், ஜீவனுள்ள சிருஷ்டிகள், மரித்தவைகள் அல்ல, அவைகள் ஜீவனுள்ள சிருஷ்டிகள். 51அப்படியே ஒரு நிமிடம் கவனியுங்கள். அவர்கள் அங்கேயே தங்கியிருந்தனர்; அவர்கள் மனைவிகளை விவாகம் பண்ணினார்கள்; அவர்கள் பிள்ளைகளை வளர்த்தனர்; அவர்கள் நல்ல விளைச்சலைக் கொண்டிருந்தனர்; அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தனர், ஆமாம். அவர்கள் -அவர்கள் ஒரு மகத்தான நேரத்தைக் கொண்டிருந்தனர். அவர்கள் அங்கே இருந்தனர்... அவர்கள் எவ்வளவு காலம் அங்கே தங்கியிருந்தனர்? 'அந்த பழைய யுத்த வீரர்கள் (fighters) எல்லாரும் மரிக்கும் வரை.' அது உண்மை. அவர்கள் எல்லாரும், 'தேவனுக்கு மகிமை; நாங்கள் அசெம்பிளிஸ் சபையைச் சேர்ந்தவர்கள். நல்லது, தேவனுக்கு மகிமை, நாங்கள் இன்னார் இன்னார். தேவனே, நாங்கள் ஒருத்துவக்காரர், அல்லேலூயா, மற்றவர்கள் தவறாயிருக்கிறார்கள் தேவனுக்கு ஸ்தோத்திரம், நாங்கள் தீர்க்கதரிசன தேவ சபையைச் (Church of God of Prophecy) சேர்ந்தவர்கள். அல்லேலூயா, நாங்கள் இன்னார் இன்னார்' என்று கூறுகிறார்கள். சரி, தொடர்ந்து செல்லுங்கள். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அங்கேயே தங்கியிருந்து, அவர்கள் மரிக்கும் மட்டுமாக, தங்களுடைய உபதேசங்களைக் குறித்து தொடர்ந்து வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். சரியாக அதுவே தான் இப்பொழுதும் சம்பவிக்கிறது. அவர்கள் மரித்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் ஸ்தாபனத்தோடு மரித்து விட்டார்கள். இதை ஆராயும்படியாக நான் எந்த வேதசாஸ்திரியையும் கொண்டு வருவேன். ஒரு சரித்திர ஆசிரியர், தேசத்திலுள்ள நல்ல வரலாற்றாசிரியர்களைப் போன்ற நல்ல வரலாற்றாசிரியர்களில் இருவர் சரியாக இப்பொழுது இங்கே அமர்ந்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். தேவன் எப்பொழுதாவது ஒரு எழுப்புதலை ஆரம்பிக்கும் எந்நேரத்திலும் இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்கள் பின்தொடருகின்றன என்பதை என்னிடம் கூறும்படி எந்த வரலாற்றாசிரியரையும் நான் கேட்கிறேன். அவர் எப்பொழுதும் அதைத் தொடங்கும் போது, இயற்கைக்கு மேம்பட்டவைகள் பின்தொடரவில்லையா? அவர்கள் எப்பொழுதாவது ஒரு ஸ்தாபனத்தை ஸ்தாபித்த போது, அது மரித்துப்போய் மறுபடியும் ஒருபோதும் எழும்பவில்லையே? ஒரு ஸ்தாபனமாவது எப்பொழுதாவது மறுபடியும் அதனுடைய ஆரம்ப நிலைக்கு எழும்பின ஒரு நேரத்தையாவது எனக்கு காண்பியுங்கள். அது ஸ்தாபிக்கப்பட்ட உடனேயே மரித்துப் போய் விட்டது. அதுவே தான் பெந்தெகோஸ்தேயினருக்கும் சம்பவித்தது. பழங்கால யுத்தவீரர்களாகிய (fighters) நீங்கள், 'அல்லேலூயா, நமக்கு அந்த பழமையான புது பிரச்சனையோடு எந்த தொடர்பும் கிடையாது. தேவனுக்கு மகிமை, அது தீர்க்கதரிசனத்தின் மூலமாக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அல்லேலூயா, நாம் அசெம்பிளிஸ் சபையாரோடு அல்லது ஒருத்துவக்காரரோடு, இரண்டில் ஒருவரோடோ எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டோம். அல்லேலூயா, நாங்கள் வித்தியாசமானவர்கள்' என்று கூற விரும்புகிறோம். அவர்கள் மரித்திருக்கிறார்கள். அது எவரும் அதிர்ச்சியோ மனக்கலக்கமோ அடையாதவாறு கவனமாக ஒன்றைக் கூறச் செய்யாது (not pulling any punch). அவர்கள் மரித்திருக்கிறார்கள். X எழுத்தால் குறிக்கப்பட்டு தள்ளுபடியாகி விட்டது (marked out: X). அவர் அங்கேயே தங்கியிருந்து, அவர்கள் எல்லாவிதத்திலும் மரித்துப் போகும் மட்டுமாக அவர்களை மரித்துப் போகும்படி விட்டு விட்டார். 52அது என்னவாக இருந்தது? 'இவையெல்லாம் இங்கே எழுதப்பட்டிருக்கவில்லை' என்று கூறின ஒருவன் அவர்கள் மத்தியிலிருந்து ஒருநாள் வருகிறான். அவர்கள் என்ன செய்தனர்? மீண்டும் மீண்டும் அதே பழைய இடத்தை ஒவ்வொரு இரவும் அவர்கள் நிரப்பினவர்களாய், அந்த மலையைச் சுற்றி சுற்றி பிரயாணம் செய்து கொண்டிருந்தனர், இதே பழைய காரியத்தைச் சுற்றி, சுற்றி, சுற்றி, சுற்றி, பிரயாணம் செய்து வந்தனர், 'அப். 2:4, அப். 2:4, அப். 2:4, அப். 2:4. அல்லேலூயா. பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டேன்; ஆவியானவர் உரைக்கும் போது, அந்நிய பாஷையில் பேசுகிறேன். தேவனுக்கு மகிமை. தேவன் இக்கடைசி நாட்களில் அழைத்த கடைசி நபராக நான் இருக்கிறேன் என்பதற்காக எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். அப். 2:4. நான் பரிசுத்த ஆவியைப் பெற்று, அந்நிய பாஷையில் பேசுகிறதற்காக சந்தோஷமடைகிறேன்.' அது சரியே; அதெல்லாம் சரிதான். ஆனால் உங்களுக்கு முன்பாக ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் இருக்கும்போது, நீங்கள் ஏன் இந்த அதே பழைய மலையிலேயே பிரயாணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? 'தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் அசெம்பிளிஸ் சபையைச் சேர்ந்து விட்டேன். நான் ஒருத்துவக்காரரை சேர்ந்து விட்டேன். நான் இதை சேர்ந்து விட்டேன். நான் அதை சேர்ந்து விட்டேன்.' மெதோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், பிரஸ்பிடேரியன்களும், கத்தோலிக்கர்களும், லூத்தரன்களும், மற்றவர்களும் செய்த அதே பழைய காரியம் தான்: அவர்கள் தங்கள் பாதையிலேயே மரித்துப் போயினர். அவர்கள் மரித்துப் போயினர். சகோதரனே, அது கடினமாக இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அது ஆமணக்கு எண்ணையைக் குடிப்பது போன்றது, ஆனால் அது உங்களுக்கு நன்மை செய்யும். அது உண்மை. சபைக்கு இன்று என்ன தேவையாயிருக்கிறது என்றால், ஒரு நல்ல - நல்ல அளவுடைய (dose) சுவிசேஷ மருந்து தான், அது மந்தமான நிலையையும், உலகத்தையும், அசுத்தத்தையும் உங்களை விட்டு வெளியேற்றி விடும். நமக்கு இன்று என்ன தேவையாயுள்ளது என்றால், மீண்டும் பரிசுத்த ஆவியின் வல்லமையும், ஆவியினால் வழிநடத்தப்படுதலும் தான். 53அது என்னவாக இருந்தது? அது இன்றுள்ள பெந்தேகோஸ்தே சபைக்கு நிழலாட்டமாகவும் முன்னடையாளமாகவும் இருந்தது. நாற்பது வருடங்கள் கழித்தும் நாம் இங்கே அப். 2:4லில் இன்னும் இருப்பதையே காண்கிறோம். தேவன் தமது ஆசீர்வாதத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலான வேறு ஏதோவொன்றோடு உள்ளே வர வேண்டும், அவர்களோ, 'தேவனுக்கு மகிமை, நாங்கள் அதைக் கொண்டிருக்க மாட்டோம். அல்லேலூயா, நாங்கள் அப். 2:4ஐயே விசுவாசிக்கிறோம். நல்லது... இதோ, நம்முடைய முற்பிதாக்கள் இதை ஸ்தாபித்தார்கள்; அவர்கள் இதற்கு வரவில்லை என்றால், தேவனுக்கு ஸ்தோத்திரம், நாங்கள் - நாங்கள் அதனோடு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்' என்கின்றனர். சீரழிந்து பின்வாங்கிப் போன பரிதாபத்திற்குரியவனே... என்ன காரியம்? பரிதாபத்திற்குரியவன்... உங்களால் எப்படி தேவனைப் பின்பற்ற முடியும்? பரிசுத்த ஆவி எங்கு போகிறாரோ அங்கே உங்களால் எவ்வாறு போக முடியும்? நீங்கள் உங்களுடைய உபதேசத்தை ஒரு காற்புள்ளியோடு (comma) முடிப்பீர்களானால், உங்களுடைய ஸ்தாபனம் அருமையாக இருக்கும். 'நாங்கள் இதை விசுவாசிக்கிறோம், அதோடு கூட தேவனால் கூட்டப்படக்கூடியதையும் இதோடு சேர்த்துக் கொள்ள முடியும்.'ஆனால் நீங்களோ இதை ஒரு முற்று புள்ளியோடு (.) முடித்து விடுகிறீர்கள். 'நாங்கள் இதை விசுவாசிக்கிறோம், நீங்கள் இதனோடு செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கப்படும் ஒன்றை செய்யுங்கள் அல்லது அதுவே அதன் முடிவு.'அதைத்தான் லூத்தர் செய்தார். அதைத்தான் வெஸ்லி செய்தார். அதைத்தான் ஜான் ஸ்மித் செய்தார். அதைத்தான் அலெக்ஸôண்டர் காம்பெல் செய்தார். அவர்கள் எல்லாரும் அதைத்தான் செய்தனர். பெந்தெகோஸ்தேயினரும் அதைத்தான் செய்தனர். அவ்விதமாகத்தான் காரியங்கள் உள்ளன: நாற்பது வருடங்களாக உங்கள் வழியிலேயே மரித்துப் போய் விட்டீர்கள். தேவனுடைய ஆசீர்வாதத்தின் நிறைவேறுதலாகிய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமானது சரியாக உங்கள் முன்னால் இருக்கிறது. 54அது என்னவாக இருந்தது? அது இன்றுள்ள பெந்தேகோஸ்தே சபைக்கு நிழலாட்டமாகவும் முன்னடையாளமாகவும் இருந்தது. நாற்பது வருடங்கள் கழித்தும் நாம் இங்கே அப். 2:4லில் இன்னும் இருப்பதையே காண்கிறோம். தேவன் தமது ஆசீர்வாதத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலான வேறு ஏதோவொன்றோடு உள்ளே வர வேண்டும், அவர்களோ, 'தேவனுக்கு மகிமை, நாங்கள் அதைக் கொண்டிருக்க மாட்டோம். அல்லேலூயா, நாங்கள் அப். 2:4ஐயே விசுவாசிக்கிறோம். நல்லது... இதோ, நம்முடைய முற்பிதாக்கள் இதை ஸ்தாபித்தார்கள்; அவர்கள் இதற்கு வரவில்லை என்றால், தேவனுக்கு ஸ்தோத்திரம், நாங்கள் - நாங்கள் அதனோடு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்' என்கின்றனர். சீரழிந்து பின்வாங்கிப் போன பரிதாபத்திற்குரியவனே... என்ன காரியம்? பரிதாபத்திற்குரியவன்... உங்களால் எப்படி தேவனைப் பின்பற்ற முடியும்? பரிசுத்த ஆவி எங்கு போகிறாரோ அங்கே உங்களால் எவ்வாறு போக முடியும்? நீங்கள் உங்களுடைய உபதேசத்தை ஒரு காற்புள்ளியோடு (comma) முடிப்பீர்களானால், உங்களுடைய ஸ்தாபனம் அருமையாக இருக்கும். 'நாங்கள் இதை விசுவாசிக்கிறோம், அதோடு கூட தேவனால் கூட்டப்படக்கூடியதையும் இதோடு சேர்த்துக் கொள்ள முடியும்.'ஆனால் நீங்களோ இதை ஒரு முற்று புள்ளியோடு (.) முடித்து விடுகிறீர்கள். 'நாங்கள் இதை விசுவாசிக்கிறோம், நீங்கள் இதனோடு செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கப்படும் ஒன்றை செய்யுங்கள் அல்லது அதுவே அதன் முடிவு.'அதைத்தான் லூத்தர் செய்தார். அதைத்தான் வெஸ்லி செய்தார். அதைத்தான் ஜான் ஸ்மித் செய்தார். அதைத்தான் அலெக்ஸôண்டர் காம்பெல் செய்தார். அவர்கள் எல்லாரும் அதைத்தான் செய்தனர். பெந்தெகோஸ்தேயினரும் அதைத்தான் செய்தனர். அவ்விதமாகத்தான் காரியங்கள் உள்ளன: நாற்பது வருடங்களாக உங்கள் வழியிலேயே மரித்துப் போய் விட்டீர்கள். தேவனுடைய ஆசீர்வாதத்தின் நிறைவேறுதலாகிய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமானது சரியாக உங்கள் முன்னால் இருக்கிறது. 55ஞாபகம் கொள்ளுங்கள், அவர், 'இப்பொழுது, உங்கள் பிரயாணத்தில், நீங்கள் எல்லைக்கோடு பக்கமாகச் சென்று கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் ஏசாவைத் தொட வேண்டாம். இப்பொழுது, ஏசாவுடைய சேயீர் மலையில் இருக்கிறீர்கள். நீங்கள் அவனைத் தொட வேண்டாம். நான் அதை அவனுக்குக் கொடுத்திருக்கிறேன். நீங்கள் அதன் பக்கமாக போகும்போது, நீங்கள் - நீங்கள் எதையாவது புசித்தால், அதற்கான பணத்தை அவனுக்குக் செலுத்துங்கள். நீங்கள் தண்ணீர் ஏதாகிலும் குடித்தால், அதற்காக அவனுக்குக் கிரயம் செலுத்துங்கள், எல்லைக்கோட்டு விசுவாசியைத் தொட வேண்டாம், ஏனென்றால் நான் அவ்விடத்தில் உங்களை ஆசீர்வதிக்க மாட்டேன்' என்றார். பாருங்கள்? 'இனிமேல் அவனோடு மோத வேண்டாம்; அப்படியே அமைதியாகக் கடந்து செல்லுங்கள்.' இப்பொழுது, மொதோடிஸ்டுகளும் பாப்டிஸ்டுகளும் எல்லைக்கோட்டில் வசித்துக் கொண்டிருப்பார்களானால்... எப்போதுமே ஒவ்வொரு எழுப்புதல் வருகிற போதும், அது இரட்டையர்களைப் பிறப்பிக்கிறது. அந்த எழுப்புதல் எங்கு நடந்தாலும் எனக்குக் கவலையில்லை, அது இரட்டையர்களையே பிறப்பிக்கிறது. அவர்களில் ஒருவன்... அது அப்படியே ஏசாவையும் யாக்கோபையும் போன்றுள்ளது. அவர்கள் இருவருமே ஈசாக்கின் புத்திரர்களாக குறிப்பிடப்பட்டனர். ஏசா ஓர் உலக மனுஷனாயிருந்தான். அவன் ஒரு பக்தியான மனிதன், அவன் தன்னுடைய தகப்பனாரின் காரியங்களுக்காக அக்கறை கொண்டிருந்து அக்காரியங்களைச் செய்த ஒரு அருமையான மனிதனாக இருந்தான். ஆனால் யாக்கோபிடத்தில் பகுத்தறிதல் இருந்தது. அந்த சேஷ்ட புத்திர பாகமானது எல்லாவற்றையும் கொண்டு வரும் என்பதை அவன் அறிந்திருந்தான், அதை எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவனுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை, அவன் வெறுமனே அதைப் பெற்றுக் கொண்டான். அதுதான் இன்றைக்குள்ள ஆவிக்குரிய மனிதன். 56அங்கே ஏசா தன்னுடைய சுதந்தரத்தை எல்லைக்கோட்டின் பக்கத்தில் கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் கடந்து போய்க் கொண்டிருந்த யாக்கோபிடத்தில் தேவன் கூறினார், அவர், 'ஏசாவோடு உங்களை முட்டாளாக்கிக் கொள்ள வேண்டாம். அவனுடைய எந்த ஸ்தாபனத்திலும் சேர்ந்து கொள்ளாதீர்கள். இங்குள்ள இக்காரியங்கள் எதையும் செய்யாதீர்கள். இப்பொழுது, நீங்கள் இங்கே 40 வருடங்களாக இருக்கும் போது, உங்களை நீங்களே கண்டிருக்கிறீர்கள். நீங்கள் இன்னுமொரு 40 வருடங்கள் தங்கியிருக்க விரும்புகிறீர்களா?' என்றார். சகோதரர்களே, நீங்கள் இன்னுமொரு 40 வருடங்களை ஸ்தாபன குழப்பத்தில் செலவழித்து, உங்கள் சகோதரனோடு குழப்பம் உண்டாக்க விரும்புகிறீர்களா? நாம் எழுந்து போவோம். நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிப் போவோமாக, அங்கே புத்தகத்திலுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உங்களுடையது. யோர்தான் என்பதற்கு 'மரணம்' என்று அர்த்தம். நீங்கள் அதைக் கடப்பதற்கு முன்பு, நீங்கள் உங்களுக்கு நீங்களே மரிக்க வேண்டியுள்ளது. அது உண்மை. அங்கே புறப்பட்டு செல்லுங்கள்; ஜனங்கள் வெதுவெதுப்பான நிலையில் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள். வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. அங்கே மலையின் மேலிருந்த அச்சகோதரர்கள், அவர்கள் - அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள்... அவர்கள் செழித்திருந்தனர். நல்லது, அவர்களுக்குப் புசிக்க அநேகம் இருந்தது. மன்னா வானத்திலிருந்து விழுந்தது. அதெல்லாம் சரிதான், ஆனால் அவர்கள் இன்னும் வாக்குத்தத்தத்திற்கு வெளியே இருந்தனர். லவோதிக்கேயா சபைக்காலத்தைப் போலவும், பெந்தெகோஸ்தே சபைக்காலத்தைப் போலவும் அது இருக்கிறது. அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் தேவன் அவர்களோடு இடைபடவில்லை; அவரால் அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குக் கொண்டு செல்ல முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் தங்களுடைய கோட்பாடுகளில் மரித்து விட்டனர் என்று அவர்கள் உணரும் ஒரு நிலையை அவர்கள் அடையும் வரை அவர்கள் போகும்படியான நிலையில் இருக்கவில்லை. அதன்பிறகு தான் தேவன் அவர்களை கொண்டு சென்றார். 57இப்பொழுது, அவன் ஏசாவினுடைய மலையின் அருகில் கடந்து சென்ற போது, அந்த ஸ்தாபனத்தின் பக்கமாகக் கடந்து சென்ற போது, அவன் என்ன செய்தான்? இப்போது, அங்கே மோவாப் இருந்தான். நிச்சயமாகவே, மோவாப் ஒரு ஸ்தாபனமாக இருந்தான். 'நீங்கள் அவனுடைய தேசத்தின் வழியாகக் கடந்து செல்வீர்கள். அவனோடு ஒரு வார்த்தையும் பேச வேண்டாம் - பேசவே வேண்டாம். நான் அவனுக்கு அதைக்கொடுத்திருக்கிறேன்' என்றார். இப்பொழுது, அவர் மெதோடிஸ்டுகளுக்கு அவர்களுக்கான இடத்தைக் கொடுத்தார். அவர் பாப்டிஸ்டுகளுக்கு அவர்களுக்கான இடத்தைக் கொடுத்தார். அவர் பெந்தெகோஸ்தே ஸ்தாபனங்களுக்கு அவர்களுக்கான இடத்தைக் கொடுத்தார். அவர்களோடு ஒரு வார்தையும் பேச வேண்டாம். 'சகோதரனே, எப்படி இருக்கிறீர்கள்? எப்படி இருக்கிறீர்கள்?'என்று கேட்டு விட்டு, அதன் பக்கமாக அப்படியே கடந்து சென்று விடுங்கள். 'ஆனால் யாக்கோபே, நாம் யோர்தானுக்குப் போகிற நம்முடைய பாதையில் இருக்கிறோம்.' ஆமென், யோர்தானுக்குப் போகிற நம்முடைய பாதையில் இருக்கிறோம். அவர்கள், 'நல்லது இப்பொழுது, கவனியுங்கள். என்ன...'என்று கூறுவார்களானால், நல்லது, அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதில் எந்த வித்தியாசமும் உண்டாக்காமல், 'சகோதரனே, உங்களுக்கு நன்றி. தேவன் உம்மோடு இருப்பாராக, சகோதரனே' என்று கூறிவிட்டு, அப்படியே அமைதியாகக் கடந்து சென்று விடுங்கள். யோர்தானை நோக்கி தொடர்ந்து செல்வதைத் தவிர வேறொன்றும் பேசாதீர்கள், ஏனென்றால் நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரித்துக் கொள்ளும்படி போய்க் கொண்டிருக்கிறோம்; அது நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, தேவனுடைய நிறைவான வல்லமை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசு, 'நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்' என்றார். 58தரிசனங்களும், மகத்தான வல்லமையான காரியங்களும், அதிகமான சுகமளித்தல்களும், மற்றவைகளும் சபைகளில் ஏன் நடக்கவில்லை என்று ஜனங்கள் வியப்படைய முயற்சிக்கிறார்கள். சபையை மேலே எடுத்துச் செல்ல தேவன் விரும்புகிறார், நாமோ மீண்டும் இங்கே கீழேயுள்ள இம்மலையில் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறோம். அது என்ன மாதிரியான ஒரு மலை? அது ஒரு ஸ்தாபன மலை. 'ஓ, ஒரு நிமிடம் பொறுங்கள், சகோதரன் பிரன்ஹாமே, நீர் புரிந்து கொள்வீர்...' ஓ, இல்லை நானில்லை. சேயீர் மலை என்பது ஏசாவுக்கு சொந்தமான ஒரு மலை, அதுதான் அவனுடைய மகத்தான ஸ்தாபனமாகும். இஸ்ரவேலர் தங்களுக்குத் தாங்களே ஒரு மலையை உருவாக்கிக் கொண்டனர். அவர்களும் கூட ஒரு மலையில் இருந்தனர். ஆனால் ஒரு நாள் தேவன், 'இம்மலையை விட்டு போங்கள். நான் உங்களை அதோ அங்கேயுள்ள அத்தேசத்திற்கு அழைத்துக் கொண்டு போகப் போகிறேன். இங்கேயுள்ள இந்த பழமையான கற்களுள்ள மலைகளில் உங்களால் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது. நன்மையான எதையும் உங்களால் செய்ய முடியாது. அதோ அங்கேயுள்ள பாலோடும் தேனோடும் நான் உங்களை ஆசீர்வதிக்கக் கூடியதும், உங்கள் மேல் தேவனுடைய நன்மைகள் ஊற்றப்படுவதுமான இடத்திற்குப் போய், அங்கே ஸ்திரமான ஜீவியம் செய்யுங்கள்' என்றார். இன்றிரவு சபைக்கு அதுதான் தேவையாயுள்ளது, இந்த மலையை விட்டு விலகி, வடக்கு நோக்கித் திரும்பிச் செல்வது தான் சபைக்குத் தேவையாயுள்ளது. இந்த குளிர்ந்த சம்பிரதாய நிலைமையை விட்டு விலகிச் சென்று விடுவோம். அசெம்பிளி சபையைச் சேர்ந்த சகோதரர்களே, ஒருத்துவ சகோதரர்களே, சர்ச் ஆஃப் காட் சகோதரர்களே, சகோதரர்களாகிய நீங்கள் எல்லாரும், நாம் இங்கே இதைச் சுற்றிலும் போதுமான நீண்ட காலம் இருந்திருக்கிறோம், இல்லையா? நம்முடைய வித்தியாச பேதங்களை மறந்து விடுவோம். நம்முடைய இருதயங்களையும், நம்முடைய கரங்களையும், நம்முடைய முயற்சிகளையும், நம்முடைய நோக்கங்களையும், குறிக்கோள்களையும் ஒன்றாக வைத்துக் கொண்டு, யோர்தானை நோக்கிச் சென்று, இந்த காரியங்களுக்கு மரித்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் கடந்து செல்வோம், அங்கே தேவன் நம்மோடு நடப்பதாகவும், நம்மை ஆசீர்வதிப்பதாகவும், 'மிகவும் அதிகமாய்' நமக்குக் கொடுப்பதாகவும் வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். 59தேவனுடைய முன்னடையாளங்களையும் நிழலாட்டங்களையும் உங்களால் முறித்துப் போட முடியாது. அதைத்தான் இயற்கையான பிரகாரமாக இஸ்ரவேலர் செய்தனர். அவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாகவும் அதையே செய்துள்ளனர். அந்த காரியங்கள் இஸ்ரவேலருக்கு நேரிட்டன என்று நாம் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம். அவர்கள் அப்போது செய்த காரியங்களே, இன்றும் இப்போது சபையில் சம்பவித்துள்ளன. சகோதரர்களே, நாம் இப்பொழுது அநேகமாக பாதையின் முடிவில் இருக்கிறோம். ஏதோவொன்று சம்பவிக்க வேண்டிய நேரம் இதுவே. நான் யோர்தானைக் கடந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் போக விரும்புகிறேன் (நீங்களும் அவ்வாறு விரும்பவில்லையா?) அங்கே நாம்... காண முடியும். நாம் நன்மைகளைக் கண்டிருக்கிறோம். தேவன் நமக்கு நல்லவராகவே இருந்து வந்திருக்கிறார்; நாம் குறை கூறிக் கொண்டிருக்கவில்லை. நான் இங்கே உங்களோடு இருக்கிறேன். நான் இங்கே இக்காரியங்களின் பேரில் உங்களோடு இருக்கிறேன். ஆனால், சகோதரர்களே, நாம் ஒன்று சேர்ந்தே செல்வோம். நாம் போயாக வேண்டும். தேவனிடமிருந்து வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்த மகத்தான யோசுவா, பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்தி வருகிறார், அவர் ஒருபோதும் அதை சந்தேகிக்கவில்லை. யோசுவா அதை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை; அவன் தேவனுடைய படைத்தலைவனாயிருந்தான். அது முற்றிலும் சரியே; அவன் தேவனுடைய இராணுவத் தலைவனாயிருந்தான் (God's general). (இஸ்ரவேல்) புத்திரர்களை வழிநடத்தினவன் அவன் தான். அது தேவனுடைய இராணுவத் தலைவராயிருந்த அதே பரிசுத்த ஆவியானவர் தான், யோசுவா மேலே வந்த போது, எரிகோ வாசலில் நின்று கொண்டிருந்த சேனாதிபதி (Chief Captain) அவர் தான். நம்முடைய சேனைதலைவராயிருக்கிற அதே சேனாதிபதி தான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் நம்மை வழிநடத்திச் செல்ல விரும்புகிறார், அதைச் செய்யக்கூடியவர் அவர் மாத்திரமே. நம்முடைய ஸ்தாபனங்கள் அதைச் செய்யாது: அது கர்த்தர் உரைக்கிறதாவது. அதைக் குறித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய புத்தகத்தில் அதை எழுதி வைத்து, அது சரியா இல்லையா என்று பாருங்கள். எந்த ஸ்தாபனமும் உங்களை ஒருபோதும் அங்கே கொண்டு செல்லாது. அது உங்களை இந்த மலையிலேயே வைத்திருக்கும். ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் அழைத்துச் செல்வார். 60ஓ, நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? நீங்கள் அவரை விசுவாசிக்க மாட்டீர்களா? நீங்கள் அவரை சேவிக்க விரும்ப வில்லையா? ஓ, நான் அதை அறிந்தால், அதுவே என் இருதயத்தின் நோக்கமாயுள்ளது. கர்த்தாவே, நான் இயேசுவை காண்பேனாக. அவரை மாத்திரமே நான் காணட்டும். நான் கையை நீட்டி, அசெம்பிளி சபையைச் சேர்ந்த ஒவ்வொரு சகோதரனுடைய பின்னாலும் போய், அவர்களைக் கூட்டிக் கொண்டு வருவேனாக. நான் கையை நீட்டி ஒருத்துவக்கார சகோதரருடைய பின்னால் சென்று, அவர்களைக் கூட்டிக் கொண்டு வருவேனாக. நான் கையை நீட்டி, சர்ச் ஆஃப் காட் சபையோரை பெற்றுக் கொள்ளட்டும். நான் கையை நீட்டி, இந்த மற்ற எல்லா சகோதரர்களையும் பெற்றுக் கொள்வேனாக, அவர்கள் யாராயிருந்தாலும், 'சகோதரர்களே, சகோதரர்களே, நாம் இந்த மலையை விட்டு போய் விடுவோம்' என்று கூறுவேனாக. அசெம்பிளிஸ் ஆஃப் காட் சபையோரே வாருங்கள், சர்ச் ஆஃப் காட் சபையோரே வாருங்கள், ஒருத்துவக்காரரே, இருத்துவக்காரரே வாருங்கள், நீங்கள் யாராயிருந்தாலும் வாருங்கள், நம்முடைய இருதயங்கள் ஒன்றாயிருக்கட்டும்; யுத்தத்தின் நாட்கள் முடிந்துவிட்டன. நாம் கானானை நோக்கி அணிவகுத்துச் செல்வோம். அல்லேலூயா. புயலடிக்கும் யோர்தானின் கரையில் (இன்றிரவு விசுவாசத்தினாலே)நான் நின்று கொண்டு, எனக்கு சுதந்தரமான அந்த அருமையான, மகிழ்ச்சியான கானான் தேசத்தை என் ஆசை ததும்பும் கண்களால் கண்டேன். ஓ, யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான் இந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். அது என்னுடைய ஜீவியத்தின் ஒவ்வொன்றையும், ஒவ்வொரு சிநேகிதனையும், மற்ற எல்லாவற்றையும் உடன் அழைத்துச் செல்லுமானால், நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன். நீங்கள் போக விரும்புகிறீர்களா? நீங்கள் விரும்புகிறீர்கள்... அப்படியானால், நாம் சிறிது நேரம் எழுந்து நிற்போம். புயலடிக்கும் யோர்தானின் கரையில் நான் நின்று கொண்டு, எனக்கு சுதந்தரமான அந்த அருமையான, மகிழ்ச்சியான கானான் தேசத்தை என் ஆசை ததும்பும் கண்களால் கண்டேன். இப்பொழுது நீங்கள் பாடும்போது, உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். ஓ, யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். அந்த பரந்த சமவெளிகளின் மேல் நித்திய நாள் ஒன்று பிரகாசிக்கும்; அங்கே தேவ குமாரன் என்றென்றைக்கும் அரசாளுவார், இரவை சிதறடிப்பார், நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன், நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன்; ஓ, யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். 61நம்மை வழிநடத்துகிற எதையும் நாம் விரும்ப வேண்டாம். தேவ குமாரன் என்றென்றுமாக அரசாளுகிறார், அவர் சபை ஐக்கியத்திலிருந்து தள்ளி வைக்கும் மற்ற அனைத்து காரியங்களையும் சிதறடிக்கிறார். ஓ, நாம் அவரை சந்திக்க விரும்புகிறோம். நீங்கள் அவரைக் காண விரும்பவில்லையா? இப்பொழுது, நாம் அதைப் பாடுகிற நேரத்தில், ஒருத்துவக்காரர்கள், இருத்துவக்காரர்கள், திரித்துவக்காரர்கள், மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், அசெம்பிளிஸ் சபைக்காரர்கள், ஆகிய நீங்களும், மற்றும் நீங்கள் யாவரும் கரங்களைக் குலுக்குங்கள்; ஒருவருக்கொருவர் கரங்களைக் குலுக்கி, 'சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிய என்னுடைய பாதையில் இருக்கிறேன்' என்று கூறுங்கள். நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன், (சுற்றிலும் திரும்பி கரங்களைக் குலுக்குங்கள்.) நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன்; ஓ, யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். 62ஓ, அது உங்களை நலமாக உணரச் செய்யவில்லையா? நான் உங்களுக்கு ஒன்றைக் காண்பிக்கட்டும். ஏறக்குறைய மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு முன்பு, நம்முடைய முக்கியமான ஸ்தாபனங்களில் ஒன்றில் நான் இருந்தேன். என்ன நடந்தது? நான் ஒரு பீட அழைப்பைக் கொடுத்தேன். பீடத்தைச் சுற்றி நான்கு அல்லது ஐந்து பாவிகள் வந்தனர். நான் அவ்வாறு செய்த போது, 'யாராவது வந்து இந்த ஜனங்களுக்காக ஜெபிப்பீர்களா?' என்று கேட்டேன். அது ஒரு பெந்தெகோஸ்தே சபையில் நடந்தது, யாருமே வரவில்லை. நான், 'பரிசுத்தவான்களாகிய உங்களில் யாராவது ஒருவர் தயவுசெய்து வந்து ஜெபிப்பீர்களா...' என்றேன். நானோ களைப்படைந்திருந்தேன். நான், 'தயவுசெய்து பரிசுத்தவான்களாகிய நீங்கள் யாராவது வந்து இந்த ஜனங்களுக்காக ஜெபிப்பீர்களா?' என்று கேட்டேன். என்ன நடந்ததென்று உங்களுக்குத் தெரியுமா? நான் அவர்களை அங்கு வரும்படி சம்மதிக்கச் செய்யவே முடியவில்லை. ஆ... ஓ, சகோதரனே, நாற்பது வருடங்களுக்கு முன்பு, அவர்களில் ஒருவர் பீடத்தண்டை வரத் துவங்கும்போது, அவர்கள் அங்கு போய் சேரும் முன்பே அவர்களைச் சுற்றிலும் 50 பேர் கூடி விடுவார்கள். அவர்களுடைய இருதயங்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன. பாருங்கள்? பாப்டிஸ்டுகளைக் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள். இங்கே கென்டக்கி மாகாணத்திலுள்ள (அங்கே பின்புறமிருக்கிற) பழமையான மிஷனரி பாப்டிஸ்டு சபைக்கு நான் உங்களை அழைத்துப் போவேன், வடக்கத்திய பாப்டிஸ்டுகளாகிய உங்களில் சிலரைப்போல அவர்கள் குளிர்ந்த சம்பிரதாயமானவர்களாக இருப்பதில்லை, அவர்கள் பீடத்தண்டை முழங்கால்படியிட்டு, அவர்கள் வந்து சேரும்வரையில் ஒருவர் மற்றவரின் முதுகைத் தட்டிக் கொண்டேயிருப்பார்கள். அவர்கள் அங்கே ஏதோவொன்றைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆம், ஐயா. 63சமீபத்தில் நான் அங்கே அலங்காரம் செய்து கொண்டு (decoration) இருந்தேன், அங்கே தான் என்னுடைய பாட்டி மற்றும் அவர்கள் எல்லாருமே அடக்கம் செய்யப்பட்டனர்; தேவன் வருகிறார் என்பதைக் குறித்தும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்தும் நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். வயதான ஸ்திரீகள் அகன்ற குல்லாய்களை (sunbonnets) முன்னும் பின்னும் அசைத்தபடி, சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அங்கே அந்த மலைகளின் மேலே அவர்கள் ஒரு... பயணம் செய்யக்கூட முடியவில்லை. அதன் மேல் ஒரு காரில் உங்களால் 30 மைல்கள் வேகத்தில் கூட பிரயாணம் செய்ய முடியாது. அங்கே பின்புறமிருக்கிற அந்த மலைப்பாங்கான இடங்களில், அந்த வயதான ஸ்திரீகள் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் தரையில் மேலும் கீழுமாக தேவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். அங்கே ஒரு பெரிய வயதானவர் இருந்தார்... நான் ஒரு பீட அழைப்பைக் கொடுத்தேன். நான், 'என்னுடைய வயதான பாட்டி அங்கேயுள்ள கல்லறையில் படுத்திருக்கிறார்கள், அவர்கள் தேவனைத் துதித்தவாறே என்னுடைய கரங்களில் இருந்து மரித்துப் போனார்கள். அங்கேயிருக்கிற என்னுடைய வயதான மாமியார் தங்களுடைய மரண வேளையில் என்னுடைய கன்னத்தில் முத்தமிட்டு, “பில்லி, நான் அங்கேயுள்ள ஆற்றின் மறுகரையில் உன்னை சந்திப்பேன்' என்று கூறினார்கள். அவர்கள் உயிர்த்தெழுதலின் காலை நேரத்திற்காக படுத்துக் கொண்டே காத்திருக்கிறார்கள். அல்லேலூயா. இங்கேயிருக்கிற உங்களில் யாராவது பாவிகளாக இருந்தால், உள்ளே வாருங்கள்; இயேசு உங்களை அழைக்கிறார்'என்றேன். முடிவில், அங்கே தம்முடைய தொப்பியை அணிந்திருந்தவாறு நின்று கொண்டிருந்த ஒரு வயதானவர் இவ்விதமாக ஆழ்ந்து யோசனை செய்து கொண்டிருந்தார். அவர் தம்முடைய தலையைத் தாழ்த்தியவாறு, 'தேவனே, நான் ஒரு பாவி, என் மேல் இரக்கமாயிரும்' என்றார். அவர் பீடத்தண்டை வருவதற்கு முன்பே அங்கிருந்த அந்த வயதான 20 தாய்மார்கள் அவரைச் சுற்றிலும் கூடி விட்டார்கள். ஏறக்குறைய இருபது அல்லது முப்பது பேர் அங்கிருந்த பீடத்தைச் சுற்றிலும் ஓடி வந்து விட்டார்கள், பாவிகள் எல்லாரும் அவ்விடத்தை நோக்கி ஓடி வந்தார்கள். மேலும் நாங்கள் ஆகாரத்தை 11 மணிக்கு சாப்பிட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், (ஆனால்) ஏறத்தாழ பிற்பகல் 3:30 மணிக்கு அதைப் புசித்தோம்: அவர்கள் அழுது கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும், தேவனை துதித்துக் கொண்டும், அந்த காடுகளின் வழியாக மேலும் கீழுமாக நடந்து கொண்டு, சத்தமிட்டுக் கொண்டும், தேவனைத் துதித்துக் கொண்டும் இருந்தனர். பெந்தெகோஸ்தேயினரைக் குறித்துப் பேசுகிறீர்கள். அது மிஷனரி பாப்டிஸ்டு சபையில் நடந்தது. 64மேலும் நான் இங்கிருக்கும் ஒரு பெந்தெகோஸ்தே சபைக்கு வந்தேன், பாவிகள் பீடத்தைச் சுற்றிலும் தங்களுடைய இருதயத்தை ஊற்றினவர்களாய் இருந்தனர், (ஆனாலும்) கிறிஸ்துவின் ஒரு ஊழியக்காரனாக, யாராகிலும் வந்து, அவர்களைச் சுற்றி முழங்கால்படியிட சம்மதிக்கக்கூட அவர்களால் முடியவில்லை. நான் என் சிந்தையை இழந்து விட்டேனா? என்னிடம் ஏதாகிலும் தவறு உள்ளதா? நான் என் மனைவியிடம், 'தேனே, இது என்ன காரியம் என்று என்னிடம் சொல்லு' என்றேன். நான் சகோதரன் மூரிடமும், ஊழியக்காரர்களிடமும், 'எனக்கு பித்து பிடித்து விட்டதா? இந்த வார்த்தை... என்ன காரியம்? அகரிப்பா பவுலிடம் சொன்னது போல, அதிக கல்வி எனக்கு பயித்தியமுண்டாக்கி விட்டதா?' என்று கேட்டேன். நான், 'இல்லை, ஐயா. இல்லை, ஐயா. யாராவது ஒருவர் அதற்கு எதிர்த்து நின்றாக வேண்டும்' என்றேன். 65சமீபத்தில் மகத்தான முக்கியமான ஊழியக்காரர் ஒருவர் என்னிடம்,'சகோதரன் பிரன்ஹாமே, நீர் தேவனுடைய மனுஷன் என்று விசுவாசிக்கிறேன். ஆனால் நான் உம்மீது என் கரங்களை வைத்து உமக்காக நான் ஜெபிக்கட்டும். நீர் ஜனங்களை அதிகமாக குறை கூறிக் கொண்டிருக்கிறீர்' என்றார். நானோ, 'சகோதரனே, அது உண்மையென்று நீர் விசுவாசிக்கிறீரா?' என்று கேட்டேன். அவர், 'இல்லை, ஆனால் அது உமது வேலையல்ல. வியாதியஸ்தருக்காக ஜெபிப்பது தான் உமது வேலை' என்றார். நான், 'அது அர்த்தமற்றது. இல்லை, ஐயா. தேவன் அப்பங்களுக்காகவும், மீன்களுக்காகவும் ஒரு குழந்தையிடம் வரங்களைக் கொடுப்பவரல்ல. இல்லை, ஐயா. அவர் விடுதலையை பிரகடனப்படுத்தி, சுவிசேஷத்தை பிரசங்கிக்கவே உங்களுக்கு வரங்களைக் கொடுக்கிறார்' என்றேன். அது சரியே. மேலும் நான், 'நான் அவ்வாறு கூறாவிட்டால், யார் கூறுவார்கள்?'என்று கேட்டேன். நான், 'உங்களால் முடியாது. காரணம் என்னவென்றால் அவற்றை ஆதரிக்க உமக்கு அதிகமான நிகழ்ச்சி நிரல்கள் உண்டு. அதை ஆதரிக்க நான் பிரசங்கிக்கிற என்னுடைய வேதாகமத்தையும் பரிசுத்த ஆவியையும் தவிர வேறு எதுவும் என்னிடம் கிடையாது' என்றேன். அல்லேலூயா. தேவனுக்கு மகிமை. நான் பெந்தெகோஸ்தேயினனாக இருப்பதற்காக சந்தோஷமாயிருக்கிறேன். நான் பெந்தெகோஸ்தேயினன் என்று ஒவ்வொருவரும் அறிய வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். நான் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன், பெந்தெகோஸ்தே ஸ்தாபனத்தை அல்ல. அது என்னிடமிருந்து தூரமாயிருக்கிறது. நான் அனுபவத்தின் மூலம் (ஒரு) பெந்தெகோஸ்தேயினன். இயேசு கிறிஸ்து என் இரட்சகராயிருக்கிறார். நான் அவரை நேசிக்கிறேன். எதுவும் என்னிடம் கிடையாது... 66ஒரு மகத்தான ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒரு பெரிய மனிதர் என்னிடம்,'சகோதரன் பிரன்ஹாமே, நீர் ஒரு சில காரியங்களின் பேரில் (எங்களோடு) சமரசம் செய்வீரானால், நாங்கள் உம்மை எங்களுடைய விமானங்களில் உலகத்தின் பிரதான - பிரதான மைய நகரங்களுக்கு அழைத்துச் கொண்டு செல்வோம், நீர் வந்து எங்களோடு இணைந்து கொண்டால், நீர் பிரசங்கிக்கலாம்' என்றார். நான், 'உங்களுக்கு அவமானம், ஒரு டாக்டர் பட்டம் பெற்ற, கௌரவமும் கனமும் பொருந்திய ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையின் பேரில் சமரசம் செய்யும்படி தேவனுடைய ஒரு ஊழியக்காரனிடம் கேட்கிறானே. நான் தவறாக இருந்தால், நீங்கள் வேதவாக்கியங்களைக் கொண்டு வந்து நான் எங்கே தவறாய் இருக்கிறேன் என்று எனக்குக் காட்டுங்கள். தேவன்... சகோதரனே, இதைப் போன்ற ஒரு காரியத்தை உங்களால் எவ்வாறு செய்ய முடிகிறது?' என்றேன். அவர் தம்முடைய தலையைத் தாழ்த்தினார்; அவர், 'நீர் தேவனுடைய மனுஷன் என்று நான் விசுவாசிக்கிறேன். அநேக வருடங்களுக்கு முன்பே என்னுடைய மனைவி மரித்து விட்டாள்' என்றார். நான் எப்பொழுதும் கண்டதிலேயே அவளுக்கு மோசமான கேன்சர் வியாதி இருந்தது. 'நீர் அவளிடம் பேசி, பரிசுத்த ஆவியானவர் மூலமாக அதைப் போன்ற கூட்டத்தினரிடமிருந்து அவளை அழைத்தீர். நான் விசுவாசிக்கிறேன்' என்றார். நான், 'அப்படியானால் சமரசம் செய்யும்படி நீர் என்னிடம் கேட்கிறீரா? அது என்னுடைய நரம்புகளைத் துடிக்கச் செய்யாது. இல்லை, ஐயா. நான் பிரசங்க பீடத்திலேயே மரித்தாலும், நான் வார்த்தையோடு தரித்திருப்பேன்' என்றேன். அவ்விதமாகவே நம்முடைய பிதாக்கள் தேவனுடைய வார்த்தையில் தரித்திருந்தார்கள், அது உங்களுடைய தோலை உரித்தாலும், உங்களின் தோலைப் பிடித்துக் குலுக்கினாலும் காரியமில்லை; எப்படியாயினும் அங்கேயே தரித்திருங்கள். நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன், நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன்; ஓ, யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன், நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன்; ஓ, யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். 67இசை இசைத்துக் கொண்டிருக்கையில், சகோதரியே, உனக்கு விருப்பமிருந்தால், அமைதியாக, நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன் என்ற (பாடலைப் பாடுவாயா) என்று வியக்கிறேன். நான் என்ன பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதைக் குறித்து எதுவும் அறிந்திராமல் இருப்பினும், இது சத்தியமாக இருக்க வேண்டும் என்றும், இயேசு கிறிஸ்துவே தேவனுடைய குமாரன் என்றும், தேவ கோபம் அவர் மேல் ஊற்றப்பட்டு, உங்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்வதற்காக ஒரு பாவி மரிப்பது (போல) அவர் கல்வாரியில் மரித்தார் என்று விசுவாசிக்கிற ஒரு பாவி இங்கிருக்கிறீர்களா? அவர் கல்வாரியில் உங்கள் மரணத்தை (ஏற்றுக் கொண்டு) மரித்தார், அவரில் மாத்திரமே உங்களால் இரட்சிக்கப்பட முடியும், இன்னும் நீங்கள் இரட்சிக்கப்படாமலிருந்தால், நான் உங்களை இப்பீடத்திற்கு அழைக்கிறேன். இப்பொழுதே இங்கே வந்து, கிறிஸ்துவின் வழியாக தேவனோடு ஒப்புரவாகி விடுங்கள். நீங்கள் ஒரு சபை அங்கத்தினராயிருந்து, உங்களுடைய ஸ்தாபனத்தைத் தவிர வேறு எதையும் அறியாதவர்களாய் இருந்து, அது ஒருவேளை பெந்தெகோஸ்தே ஸ்தாபனமாக இருந்தாலும், மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, கத்தோலிக்கம், யூத சபை, ஆர்த்தொடாக்ஸ், கிரீக், அது என்னவாக இருந்த போதிலும், உங்களுடைய ஸ்தாபனத்தைத் தவிர வேறு எதையும் நீங்கள் அறியாதவர்களாக இருந்தால், நீங்கள் (இன்னும் அந்த) ஏதோவொன்றை சந்தித்திருக்கவில்லை, உங்களை மாற்றி உங்களை ஜீவிக்கச் செய்கிறதும், உலக காரியங்களுக்கு இணங்கிப் போகாததுமாகிய புதிய பிறப்பை நீங்கள் ஒருபோதும் சந்திக்கவில்லை... நீங்கள் உலகத்தோடு எதையும் செய்ய விரும்ப வேண்டாம்; நீங்கள் அதனோடு எதையும் செய்ய விரும்ப வேண்டாம்; நீங்கள் அதற்கு மரித்து விடுங்கள், நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஜீவிக்கவே விரும்புங்கள். நீங்கள் இன்னும் அந்த அனுபவத்தைப் பெற்றிருக்கவில்லையெனில், நாங்கள் மீண்டும் பாடும் போது, நீங்கள் இங்கே பீடத்தண்டை வருவீர்களா? 68நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிராமல் இருந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள விரும்பினால், நாம் மீண்டும் பாடுகிற வேளையில், நீங்கள் இங்கே பீடத்தண்டை வந்து நிற்பீர்களா? எங்களோடு சேர விரும்பி, விசுவாசத்தின் மூலமாகவும் தேவ கிருபையின் மூலமாகவும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிற யாத்திரிகர்களாகிய நீங்கள் அனைவரும், இப்பொழுது என்னோடு பாடுங்கள். சரி. நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட (தேசத்திற்கு) சென்று கொண்டிருக்கிறேன், (நீங்கள் வரும்படி நான் அழைக்கிறேன்; அவ்வளவு தான் என்னால் செய்ய முடியும்.) நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட (தேசத்திற்கு) சென்று கொண்டிருக்கிறேன்... (சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.) ஓ, யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன், நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன்; ஓ, யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். நான் எப்போது என் பிதாவின் முகத்தைக் கண்டு, அவர் மார்பில் இளைப்பாறுவேன்? 69நாம் இப்பாடலைப் பாடிக் கொண்டிருக்கும்போது, நான் ஒரு காரியத்தை உங்களிடம் கூற விரும்புகிறேன்... நான் 31 வருடங்களுக்கு முன்பு, என்னுடைய முதலாவது எழுப்புதலின் போது, ஜெபர்ஸன்வில்லில் 500 பேரோடு நின்று கொண்டு, 'புயலடிக்கும் யோர்தானின் கரையில் நான் நின்று கொண்டு, எனக்கு சுதந்தரமான அந்த அருமையான, மகிழ்ச்சியான கானான் தேசத்தை என் ஆசை ததும்பும் கண்களால் கண்டேன்' என்ற பாடலைப் பாடிக் கொண்டிருந்தேன். நான் அந்த பிற்பகலில், மிஷனரி பாப்டிஸ்டு சபையின் ஒரு போதகராயிருந்து, வெளியே நடந்து சென்று, 500 பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தேன். நான் 17வது நபருக்கு ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த போது, சடுதியாக ஏதோவொன்று, 'மேலே நோக்கிப் பார்' என்று கூறுவதைக் கேட்டேன். நான் நோக்கிப்பார்த்தபோது, இதோ அக்கினிஸ்தம்பம் வானத்திலிருந்து சுழன்று கொண்டே) (circling down) இறங்கி வந்து, சரியாக நான் இருந்த இடத்தில் நின்று, 'கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக யோவான்ஸ்நானன் அனுப்பப்பட்டது போல, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக உன்னுடைய செய்தியும் இருக்கும்' என்றது. அந்த பாப்டிஸ்டு பிரசங்கியார் என்னைப் பார்த்து நகைத்த போது... அது அசோசியேட்டட் பிறஸ் (Associated Press) செய்தித்தாளில் 'ஒரு ஊழியக்காரர் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, அவர் மேல் மர்மமான ஒளி தோன்றியது' என்று பிரசுரமானது. அது கனடா எங்கிலும், மற்ற எல்லாவிடங்களிலும் அசோசியேட்டட் பிறஸ் செய்தித்தாள் முலமாகச் சென்றது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஜனங்கள் அதைக் கண்டனர். சகோதரனே, இன்று அதைக் கவனியுங்கள். அது வாக்குத்தத்தம் பண்ணினது உண்மையாக உள்ளது என்பதைக் கவனியுங்கள். 'புயலடிக்கும் யோர்தானின் கரையில் நான் நின்று கொண்டு, என் ஆசை ததும்பும் கண்களால் கண்டேன்.' நாம் இந்த வனாந்தரத்திலேயே போதுமான நீண்ட காலம் இருந்து விட்டோம்; நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிப் போவோம். 70இங்கே சுற்றிலும் ஒரு கூட்ட ஜனங்கள் தேவனைத் தேடிக்கொண்டும், தேவனை வாஞ்சித்துக் கொண்டும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குப் போக விரும்பிக் கொண்டும் நிற்கின்றனர். இப்பொழுது, இழக்கப்பட்ட ஆத்துமாக்களுக்காக இருதயத்தில் பாரம் கொண்டுள்ள ஊழியக்காரர்களாகிய உங்களில் சிலரோ, சகோதரர்களாகிய உங்களில் சிலரோ இங்கே அவர்களோடு சுற்றிலும் நிற்பீர்களா என்று வியக்கிறேன். இன்னும் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள் (இருந்தால்), நீங்களும் கூட இங்கே சுற்றிலும் வந்து, உங்களுடைய வழியை சிந்திப்பீர்களா? பீடத்தைச் சுற்றிலும் நில்லுங்கள். இந்த மனிதர்களும் ஸ்திரீகளும், பையன்களும் சிறு பெண்களும் கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்படியாக இங்கே இருக்கின்றனர். நீங்கள் விரும்பினால்... நாம் மீண்டும்,'புயலடிக்கும் யோர்தானின் கரையில் நான் நின்று கொண்டு, என் ஆசை ததும்பும் கண்களால் கண்டேன்' பாடலைப் பாடும் நேரத்தில். மோசே அங்கே நின்று கொண்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிப் பார்த்தான். அந்த ஸ்தாபனமானது போக தடை செய்தது, ஏனென்றால் அது தேவனைத் தவற விட்டது. ஆனால் யோசுவா தேவனுடைய வார்த்தைகளை பெற்றுக் கொண்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் அணிவகுத்துச் சென்றான். சகோதரனே, தேவனுடைய கிருபை நம்மையும் அதனூடாக அழைத்துச் செல்லும். புயலடிக்கும் யோர்தானின் கரையில் நான் நின்று கொண்டு, (வாலிப ஜனங்களே, வயதானவர்களே, நீங்கள் யாராகவும் இருக்கலாம், நீங்கள் வந்து... சேர்ந்து கொள்வீர்களா?) எனக்கு சுதந்தரமான அந்த அருமையான, மகிழ்ச்சியான கானான் தேசத்தை என் ஆசை ததும்பும் கண்களால் கண்டேன். நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன், நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன்; ஓ, யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். 71இப்பொழுது, யாவரும் ஒரு நிமிடம் பயபக்தியாயிருங்கள். நான் இங்கேயுள்ள இந்த ஜனங்களிடம் பேச விரும்புகிறேன். என்னுடைய அன்பான நண்பர்களே, இன்றிரவு நீங்கள் இந்த நிலைப்பாட்டை எடுக்கும்படி ஏதோவொன்று உங்களிடம் பேசியிருக்க வேண்டும். இயேசு, 'பிதா எனக்கு கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு' என்று கூறினார். அங்கே ஒரேயொரு நித்திய ஜீவனின் வடிவம் மாத்திரமே உண்டு, நித்தியமான ஜீவன், அதுதான் தேவனுடைய ஜீவனாகிய சோயி (ழர்ங்). நீங்கள் உங்கள் இருக்கையை விட்டு எழுந்து, இங்கே நடந்து வந்ததன் காரணத்தால், அது ஏதோவொரு ஆவி... ஐ காட்டுகிறது. நீங்கள் தவறாயிருந்த இந்த வருஷங்கள் எல்லாம் - இன்றிரவு உங்கள் அருகில் நின்று கொண்டிருந்த ஏதோவொன்று, 'நீங்கள் தவறாய் இருக்கிறீர்கள்' என்று கூறினது. அது தான் பரிசுத்த ஆவி. 'எழுந்து, முன்னால் வா' என்று அது உங்களிடம் கூறினது. நீங்களும் அவ்வாறே செய்தீர்கள். மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் என் பிதாவின் முன்பாவும், பரிசுத்த தூதர்கள் முன்பாகவும் அறிக்கை பண்ணுவேன். அது அவருடைய வாக்குத்தத்தமாயுள்ளது. அவர் அவ்வாக்குத்தத்தத்தை திரும்பப் பெற முடியாது. அது அவருடைய வாக்குத்தத்தம். அது திரும்பப் பெற மாட்டாது. உங்களுக்கு... கொடுப்பதற்கு அவர் இங்கேயிருக்கிறார். நீங்கள் அவருக்காக நின்ற காரணத்தால், அந்நாளில் அவரும் உங்களுக்காக நிற்பார். அவர் உங்களுடைய இடத்தை எடுத்துக் கொண்டார். இப்பொழுது, நீங்கள் தவறாய் இருக்கிறீர்கள் என்றும், அவரிடம் நீங்கள் இரக்கத்துக்காக வந்துள்ளீர்கள் என்றும் ஒப்புக்கொள்ள விரும்புகிறீர்கள். அவர் மேல் விசுவாசம் வைப்பதைத் தவிர வேறு எதையுமே உங்களால் செய்ய முடியாது மேலும் தேவன் உங்களுக்காக கொடுத்திருக்கிறதைத் தவிர. அதுதான் இரட்சிப்பு. ஞாபகம் கொள்ளுங்கள், அவருடைய வார்த்தைக்குச் செவிகொடுங்கள். பரிசுத்த யோவான் 5:24ல், 'என் வார்த்தைகளைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவனுண்டு' என்று அவர் கூறியுள்ளார். இப்பொழுது, தேவன் தான் உங்களைத் திருப்பி விட்டார்; அது உங்களைத் திருப்பி விட்ட பரிசுத்த ஆவியின் ஒரு பாகமாக உள்ளது. பரிசுத்த ஆவியின் அடுத்த பாகமானது உங்களை பரிசுத்தமாக்கி, எல்லா அசுத்தத்தையும் உங்களை விட்டு எடுத்துப் போடுவதற்காக இருக்கிறது. பரிசுத்த ஆவியின் மூன்றாவது பாகமானது அச்சரீரத்திற்குள் உங்களை ஞானஸ்நானம் பண்ணுவதற்காக உள்ளது; அப்போது நீங்கள் பரிசுத்த ஆவியினாலும், தேவனுடைய வல்லமையினாலும் நிறையப்படுகிறீர்கள். அதற்காகத்தான் நீங்கள் இன்றிரவு இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்வதற்கு உங்கள் முதலாவது நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது, சபையார் தங்கள் தலைகளைத் தாழ்த்தும்படி விரும்புகிறேன். 72எங்கள் பரலோகப் பிதாவே, இந்த ஜனங்கள் தங்கள் கடந்த கால ஜீவியத்தைக் குறித்து வெட்கப்பட்டவர்களாய் இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தவறாய் இருக்கிறார்கள் என்று கூறுகிற உம் சத்தத்தை அவர்கள் கேட்ட காரணத்தால், இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள், அவர்கள் உம்மை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படி வந்திருக்கிறார்கள். அவர்கள் நீதிமானாக்கப்படுதல் என்ற நிலைக்குக் கீழே இங்கே நிற்கிறார்கள். 'இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.' (ரோமர் 5:1). கர்த்தாவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன். நான் இன்றிரவு உமது ஊழியக்காரனாக, நான் அவர்களில் ஒருவனாக நின்று கொண்டு, இந்த ஜனங்களுக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கையில், உம்முடைய வார்த்தைகள் சத்தியம் என்று விசுவாசிக்கிறேன், மேலும் நீர் என்ன கூறினீர் என்பதை உமக்குத் திரும்பவும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இதோ அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய இருக்கையை விட்டு எழுந்து, இங்கே வந்திருக்கிறார்கள், ஏனென்றால் நீர் தேவனுடைய குமாரன் என்றும், நீர் அவர்களுடைய பாவங்களுக்காக மரித்தீர் என்றும் அவர்கள் உறுதிகொண்டிருக்கிறார்கள்; உமது மன்னிக்கும் கிருபையை அவர்கள் வாஞ்சிக்கிறார்கள். அதைப் பெற்றுக் கொள்ளாமலிருப்பது அவர்களுக்குக் கூடாத காரியமாய் உள்ளது. நீர் அதை வாக்குப்பண்ணியுள்ளீர். அது அவர்களுடையது. அவர்கள் அதை விசுவாசிக்கிறார்கள். அதைக் குறித்து சாட்சி கூற அவர்கள் வந்திருக்கிறார்கள். மனுஷர் முன்பாக உம்மைக் குறித்து எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக் குறித்து பிதாவின் முன்பாகவும், பரிசுத்த தூதர்கள் முன்பாகவும் நீர் வெட்கப்படுவீர் என்று கூறியுள்ளீர், 'ஆனால் மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை என் பிதாவின் முன்பாகவும், பரிசுத்த தூதர்கள் முன்பாகவும் அறிக்கை பண்ணுவேன்' என்று கூறியுள்ளீர். 73கர்த்தாவே, அவர்கள் உம்முடையவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் தவறாய் இருந்தார்கள் என்பதைக் குறித்து நிச்சயமுடையவர்களாய் இருந்தார்கள். அவர்கள் தவறாய் இருக்கிறார்கள் என்றும், மன்னிப்பை விரும்புகிறார்கள் என்றும் சாட்சி கொடுப்பதற்காக தேவனுடைய வார்த்தையின் மூலமாக அவர்கள் இங்கே மேலே நின்றார்கள். கர்த்தாவே, நான் அவர்கள் ஆத்துமாக்களுக்காக கெஞ்சுகிறேன். பிதாவே, அவர்களை உம்மிடம் கொடுக்கிறேன். அவர்களுடைய பாவமான ஜீவியத்தைக் கடிந்து கொள்ளுகிற உம்முடைய வார்த்தையின் வெற்றிப் பதக்கங்களாக அவர்கள் இருக்கிறார்கள், மேலும் அவர்கள் உம்மை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்படி வந்திருக்கிறார்கள். நான் உம்மிடம் கெஞ்சுகிறேன், 'என் வார்த்தைகளைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு' என்று நீர் சொல்லியிருக்கிற உம்முடைய வாக்குத்தத்தை உமக்கு மீண்டும் நினைவுபடுத்தி, உம்மிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் இப்பொழுது உம் வார்த்தையை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் பாவங்களுக்காக வருந்துகிறார்கள், மேலும் இன்றிரவு அவர்கள் அதை நிரூபித்து வெளிப்படையாக உம்மிடம் தெரிவிப்பதன் மூலம், உமக்காக நிற்பதால் அதை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார்கள். பிதாவே, நீர் அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை கொடுத்தருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்களுடைய ஆத்துமாக்களைப் பரிசுத்தப்படுத்தி, அவர்களைக் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாக ஆக்கும். அவர்களை விடுவிப்பதற்காக கிரயம் செலுத்தின உம்முடைய நேச குமாரனுடைய நாமத்தில் நான் அவர்களை உம்மிடம் கொடுக்கிறேன். ஓ தேவனே, அவர்கள், அன்பின் வெகுமதிகளாக இருக்கிறார்கள். அவர்கள் உம்முடையவர்கள். 'ஒருவனும் அவர்களை என் கைகளிலிருந்து பறித்துக்கொள்வதில்லை. அவரைப் பார்க்கிலும் பெரியவர் யாருமில்லை' என்று இயேசு கூறியுள்ளார். அவர்கள் தேவனுடைய கரங்களில் இருக்கிறார்கள். 74இப்பொழுது, நம்முடைய தலைகள் வணங்கிக்கொண்டிருக்கையில், இவர்கள் பீடத்தண்டை வருவது, உங்களால் செய்யக்கூடிய ஓர் காரியம் அல்ல. நீங்கள் எதையுமே உணர வேண்டியதில்லை. இயேசு ஒருபோதும், 'நீங்கள் அதை உணர்ந்து கொண்டீர்களா?' என்று கூறவில்லை. அவர், 'நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?' என்று தான் கேட்டார். நீங்கள் இருந்த பாவமான நிலையில் உண்மையாகவே இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா, நீங்கள்... நீங்கள் தவறாய் இருக்கிறீர்கள் என்று ஏதோவொன்று உங்களை நம்பும்படி செய்தது. உங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின தேவனுடைய வார்த்தையின் அடிப்படையின் பேரில் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள், நீங்கள் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டதால், அவர் அவைகளை மன்ன-õத்து விட்டார், நீங்கள் இப்பொழுது உங்கள் பாவங்களை விட்டு விட்டு, அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறீர்கள், உங்கள் தலைகள் வணங்கிக் கொண்டிருக்கையில், நீங்கள் விரும்பினால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இங்கே பீடத்தண்டை நிற்கிற நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறீர்கள்; ஒவ்வொருவரும் 100 சதவீதம் ஏற்றுக் கொள்கிறீர்கள். தேவனுக்கு நன்றி. இப்பொழுது, விசுவாசிகளே, நான் உங்களைக் கிறிஸ்தவர்கள் என்றும், இராஜ்யத்தினுடைய சக பிரஜைகள் என்றும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கூறுகிறேன். நீங்கள் எனக்காக ஒரு காரியத்தைச் செய்யும்படி உங்களிடம் கேட்கப் போகிறேன். நீங்கள்... செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நான் வேறொரு அழைப்பைக் கொடுக்கும் போது, நீங்கள் இந்த பக்கமாக சுற்றி வந்து, 'ஜெப அறை' என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அங்கேயுள்ள அச்சிறு அறைக்குச் சென்று, உங்கள் பாதையைத் தெளிவாக்க நான் விரும்புகிறேன். நீங்கள் அங்கே சென்று, ஜெபித்துக் கொண்டிருங்கள். நாங்கள் ஒரு சில நிமிடங்களில் உங்களை சந்திப்போம். அங்கு சென்று, முழங்கால்படியிட்டு, 'கர்த்தராகிய இயேசுவே, என் ஆத்துமாவை இரட்சிப்பதற்காக உமக்கு நன்றி' என்று கூறுங்கள். தேவன் சரியாக அங்கே அந்த அறையிலேயே உங்களை பரிசுத்த ஆவியினால் நிரப்புவார் என்று நான் விசுவாசிக்கிறேன். சகோதரர்களில் ஒருவர் உங்களை வழிநடத்துகிற நேரத்தில், இந்த வழியாகப் போங்கள். இப்பொழுது, இவர்கள் அங்கு போய்க் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தக் காரியத்திற்காக அறிவுறுத்துகிறவர்கள் இப்பொழுது அவர்களோடு கூட போங்கள். இந்த ஜனங்கள் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். 75இப்பொழுது, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை வாஞ்சிக்கிறவர்கள், இச்சமயத்தில் முன்னோக்கி வருவீர்களா? நாங்கள் ஒருதடவை கூட பாடுகையில், இப்பொழுது முன்னோக்கி நடந்து வாருங்கள். 'சகோதரன் பிரன்ஹாமே, நான் பல வருடங்களாக பரிசுத்த ஆவிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன், ஆனால் இன்னும் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை' என்று நீங்கள் கூறலாம். இங்கே மேலே வாருங்கள். என்னை தேவனுடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசித்து, நான் உங்களுக்கு சத்தியத்தைக் கூறிக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் விசுவாசித்தால், இங்கே வாருங்கள், நான் உங்களுக்காக ஜெபிக்கட்டும். ஜெபம் காரியங்களை மாற்றி விடுகிறது. அது புது சிருஷ்டிகளாக ஆக்குகிறது. நீங்கள் மிக அதிக உத்தமமுடையவர்களாயிருந்தால், நாம் பாடுகையில், இப்பொழுது முன்னோக்கி வாருங்கள். புயலடிக்கும் யோர்தானின் கரையில் நான் நின்று கொண்டு, எனக்கு சுதந்தரமான அந்த அருமையான, மகிழ்ச்சியான கானான் தேசத்தை என் ஆசை ததும்பும் கண்களால் கண்டேன். நான் இந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன் (பரிசுத்த ஆவியைப் பெற்றிராத எல்லாரையும் கிறிஸ்துவின் நாமத்தில் அழைக்கிறேன்; முன்னால் வாருங்கள்.) ஓ, யார் என்னுடன் வந்து பிரயாணப்பட போகிறீர்கள்? நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். 76நீங்கள் உத்தமமாக இருக்கிறீர்களா? இக்கட்டிடத்தில் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றிராதவர்கள் இருக்கிறீர்களா? சகோதரனே, சகோதரியே, பரிசுத்த ஆவியினுடைய அவ்வளவு அழுத்தத்தின் கீழாக இருந்து கொண்டு, நீங்கள் பரிசுத்த ஆவியைப்பெற்றிருக்கவில்லை என்ற ஒரு நிலைக்கு வரும் உங்களால் ஜெபத்திற்காக எவ்வாறு நிற்காமல் இருக்க முடிகிறது? நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படியாக, அவிசுவாசத்திலிருந்து உங்கள் ஆத்துமாவும் கூட குணமடையாமல் இருக்கும் போது, சுகமளித்தலைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று உங்களால் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? உங்கள் சரீரத்திற்கான தெய்வீக சுகமளித்தலை நீங்கள் எங்ஙனம் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் வர மாட்டீர்களா? நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். சகோதர சகோதரிகளே, நீங்கள் ஏற்கனவே கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு சக பிரஜைகளாக இருக்கிறீர்கள், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை நீங்கள் வாஞ்சிக்கிறீர்களா? சரி. இந்த ஜனங்களுக்காக நாங்கள் ஜெபிக்கும் போது, பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிற நல்ல ஜனங்களாகிய உங்களில் சிலர் இங்கே வந்து அவர்கள் மேல் கரங்களை வைக்க விரும்புகிறேன். இப்பொழுது முன்னால் வாருங்கள். ஏதோவொருவர் மேல் உங்கள் கரங்களை வையுங்கள். பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிற அங்கே பின்னாலுள்ளவர்கள், ஊழியக்கார சகோதரர்களாகிய உங்களில் சிலர் இங்கே மேலே வந்து, பிரதிநிதிகளாக, இந்த ஜனங்கள் மேல் கரங்களை வையுங்கள். சகோதரன் ஜீன், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரர்களே, முன்னால் வாருங்கள், முன்னால் வாருங்கள். நாங்கள் ஜெபிக்கையில், நீங்கள் மேலே வந்து, இந்த ஜனங்கள் மேல் கரங்களை வையுங்கள். அது நல்லது. சகோதரன் ஃபிரட் அவர்களே, வாருங்கள்; அது நல்லது. முன்னால் வாருங்கள். அல்லேலூயா. 77எங்கள் பரலோகப் பிதாவே, இந்த ஜனங்கள் பரிசுத்த அவியின் ஞானஸ்நானத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்தத் திராட்சைப் பழங்களைக் குறித்து களைப்படைந்துள்ளனர். அவர்கள் பாலையும் தேனையும் விரும்புகின்றனர். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குப் போக விரும்புகிறார்கள். கர்த்தாவே, மனிதர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஒருவர் மற்றவர் மேல் கரங்களை வைத்துக்கொண்டிருக்கிற நேரத்தில் நீர் அவர்களுக்குப் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் கொடுக்க வேண்டும் என்று என் முழு இருதயத்தோடும் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அதை அருளும். விசுவாசமுள்ள ஜெபம் அதைச் செய்யும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இயேசுவின் நாமத்தில் தேவனுடைய மகிமைக்காக நாங்கள் அவர்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். ஆமென். 78ஆமென். அது சரியே. தெய்வீக சுகத்தை விரும்புகிறவர்கள் யாவரும் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சுகமாக வேண்டும் என்று விரும்புகிற யாவரும் கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது, அங்கேயுள்ள யாரோ ஒருவர் உங்கள் கரங்களை அவர்கள் மேல் வையுங்கள். ஒருவர் மற்றவர் மேல் கரங்களை வையுங்கள். இதோ நாங்கள் இருக்கிறோம். ஒருவர் மற்றவருக்காக ஜெபியுங்கள். நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம், தேவன் பண்ணின ஒவ்வொரு வாக்குத்தத்தத்திற்கும் சென்று கொண்டிருக்கிறோம். பரலோகப் பிதாவே, இவர்கள் உம்முடையவர்கள். கர்த்தாவே, நான் அவர்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்தும்; கர்த்தாவே, தேவையுள்ளவர்களை பரிசுத்த ஆவியினால் நிறைத்தருளும். வானங்களையும் பூமியையும் உண்டாக்கிய தேவனாகிய கர்த்தாவே, இப்பொழுது, இயேசுவின் நாமத்தில் நான் அவர்களை உம்மிடம் கொடுக்கிறேன்...?...